Friday, January 28, 2011

கேன்சலே ஆகாத பயணம்


என் இனிய சகோதர, சகோதரிகளே !

நம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் தயாராக உள்ளது! பயணிகளே கவனமாக  தயாராகுங்கள் !!! 

ஏறும் இடம் (Departure ) : துணியா !  
இறங்கும் இடம் (arrival) : கபர்ஸ்தான் !!.

புறப்படும் நேரம் : நம்மை படைத்த எல்லாம் வல்லாஹ் அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்.

கவலைபடவேண்டாம் பயண நேரமும் தேதியும் மாற்றத்திற்கு உள்ளாகாது !. விமானமும் கேன்சல் ஆகா சான்சே இல்லை!?.

Destination Air போர்ட் : டெர்மினல் 01  சொர்க்கம் ! /
                                         டெர்மினல் 02 நரகம்!?. 

இது ஒரு ட்ரான்சிட் AIR LINE  ?
இந்த அதிநவீன  ஏர் லயன்சின் திட்டங்களும் விபரங்களும் உலகில் எங்கும் கிடைக்காது ஆனால் 
புனித திருக்குரான் மற்றும் நபிகளார் முகமது சல்லல்லாஹுவசல்லாம்அவர்களின் வாழ்வின் நடைமுறையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்த அதிநவீன  எரோபிளேனின் பெயர் பிரிட்டிஷ் அல்லது கல்ப் அல்லது எமிரேட்ஸ் அல்லது  ஏர் இந்திய கிடையாது. 

ஆனால் இதன் பெயரோ    ஏர்  ஜனாசா !.
இந்த விமானத்தின் கேப்டன் மலக்குல் மவுத் !!!. 
இதனில் உட்காரும் இருக்கை இல்லை, வசதியாக அவரவர்களின் அமல்களுக்கு (செய்த நன்மைகளுக்கு ஏற்ப ) படுத்துக்கொண்டு மட்டும்தான் பயணிக்கலாம் !.
இதில் ரவுண்டு ட்ரிப் கிடையாது ஒன் வே ட்ரிப் மட்டும்தான் !!!.?. 
இதில் கண்டிப்பாக உங்கள் உடமைகளை எடுத்து கொண்டு பயணிக்க இயலாது !, 
ஆனால் நமது அமல்களை எத்துனை கிலோவாக இருந்தாலும் அனுமதி கிடைக்கும் !!.
அதற்காக ஏர்போர்ட் டாக்ஸ் கட்ட வேண்டிய பிரச்னை இல்லை மகிழ்ச்சிதானே ! ?.
இதிலே செல்வதற்கு கோட் சூட் தேவை இல்லைஒரு ஆறு முழ வெள்ளை துணி போதும் ? காசு மிச்சம்தானே !!!.
இதில் நீங்கள் பயணிக்க விசாவிற்கோ மற்றும் ஏர் டிக்கெட் எடுபதற்கோ சிரமபடதேவை இல்லை !!!! ??? காசும் விரயம் இல்லை!?.

உங்களுடை விசாவும் பயண சீட்டும் நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தயாராக விட்டது. !!!.

மேலும் மகிழ்ச்சிதானே?! ஆம் உங்கள் சீட் உறுதிசெய்யப்பட்டு விட்டது (confirmed )!. ரீ கன்பாம் செய்யும் பிரச்னை இருக்காது !!!. 
ஆனால் உங்களுடைய சரியான பாஸ் போர்டைவைத்துகொள்ள  மறந்தும் இருந்து விடாதீர்கள் ?

உங்களுக்கு பாஸ்போர்ட் செக்கிங் உண்டு !!!.

பாஸ் போர்ட் செக்கரின் பெயர் முன்கர் மற்றும் நகீர் !!!!!!! ???.

வேறு இந்தியன் or அமெரிக்கன் or பிரிட்டிஷ் or எந்தவிதவிதமான பாஸ்போர்ட்டும் செல்லுபடியாகாது ???. 

ஆனால் ஒரே ஒரு பாஸ் போர்ட் தான் செல்லு படியாகும் !!!.
ஆம் அந்த பாஸ் போர்டின் பெயர் மவுத் !!!!!!.(மரணம் )
அதிலே எல்லாருக்கும் ECR கட்டாயம் ஸ்டாம்ப் உண்டு.
எமிக்ரேசன் கிளியரன்சுக்கு மூன்று கேள்விகளை நமது பாஸ்போர்ட் எமிக்ரேசன் ஆபிசர்  மதிற்பிக்குரிய 
முன்கர் மற்றும் நகீர் அவர்கள் கேட்பார்கள்.

அதை சரியாக  கூறிவிட்டால் உங்கள் ட்ரான்சிட் லவுஞ்சில் சுகமாக ஓய்வு எடுக்கலாம் எந்த விதமான தொல்லையும் இருக்காது!!!. 

ஆனால் சரியாக கூறாவிட்டால் உங்களுக்கு தொல்லை ஆரம்பம் ஆகிவிடும் உங்களின் ட்ரான்சிட் லவுன்ச் நரக லவுன்ச் ஆகிவிடும்???.

உஷார் !

உஷார் !

 உஷார் !

உஷார் !  அந்த மூன்று கேள்விகள் !. 

உன்னுடைய இறைவன் யார் ? விடை அல்லாஹ் !!!!!!.

உன்னுடைய மார்க்கம் எது ? விடை இஸ்லாம் !!!!!!!!.

உன்னுடைய நபி யார் ? விடை முகமது சல்லல்லாஹுவசல்லாம்
மறந்தும் இறந்து விடாதீர்கள் ? பதிலை சொல்ல அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் முஸ்லிமாக வாழ்ந்து மட்டுமே பதிலலிக்க முடியும்.

சுகமான பயணத்திற்கு தயாராக இருப்போம். 

இன்ஷா அல்லாஹ் !. 

நம்முடைய ஏர்  ஜனாசா !. பயணம் நல்ல பயணமாக அமய துவா செய்யும்,

எங்கள் இறைவனே,எங்களுக்கு இந்த உலகத்திலும் நல்ல வாழ்க்கை தருவாயாக,மறுஉலகத்திலும்(மரணத்துக்கு பின் உள்ள வாழ்வு)நல்ல வாழ்க்கையை தருவாயாக.மேலும் நரக நெருப்பை விட்டும் பாதுகாப்பாயாக

Tuesday, January 25, 2011

காலையிலே பெட்ரோல் குடிங்க? சும்மா எனர்ஜிக்கு!!

காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது; எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், உடலுக்கு “பெட்ரோலாக” தேவைப்படும் உணவு அது.

காலை உணவு முறையை “பிரேக் பாஸ்ட்” என்று கூறுவர். “பாஸ்ட்”டை (உண்ணாதிருத்தலை) “பிரேக்” (துண்டிப்பது) பண்ணுவது என்று அர்த்தம். முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது. அதனால் அதற்கு, சத்துக்கள் தேவைப்படுகிறது. காலையில் சாப்பிடாமல், மதிய உணவு சாப்பிடலாம் என்று எண்ணுவது சரியல்ல. பத்து மணி நேரத்தையும் தாண்டி பட்டினி போடுவது, உடலில் உள்ள முக்கிய சத்துக்கள் குறைபாடு ஏற்படக் காரணமாகி விடும்.


காலையில் எழுந்தவுடன் காபி, பால் போன்ற பானங்கள் சாப்பிட்டு விட்டு, உணவு அல்லது சிற்றுண்டி சாப்பிடுவோர் பலர் உள்ளனர். சிலர், காலையில், ழுமு உணவு சாப்பிட்டு விட்டு, மதியம் சாதாரண அளவில் சாப்பிட்டு, இரவு டிபன் சாப்பிடுகின்றனர்.

ஆனால், காலை உணவை தவிர்ப்போரும் உண்டு. இவர்களுக்கு தான் பாதிப்பு வரும். குறிப்பாக, வீட்டு, ஆபீஸ் வேலை பார்க்கும் பெண்களுக்கு காலை உணவு மிக முக்கியம். அதை தவிர்த்தால், அவர்களுக்கு பல கோளாறுகள் வர வாய்ப்பு அதிகம்.


உடலுக்கு தேவைப்படும் சத்துக்களை தருவது தான் உணவு. கார் போன்றது உடல். கார் ஓட பெட்ரோல் தேவைப்படுவது போல, உடல் சிறப்பாக இயங்க எரிசக்தி தேவை. அந்த எரிசக்தியை தருவது சத்துக்கள் தான். அந்த சத்துக்களை நாம் உணவில் இருந்து தான் பெற வேண்டும். காலை உணவு சாப்பிட்டால், அது சிற்றுண்டியாக இருந்தாலும், உணவாக இருந்தாலும், உடலுக்கு முழு எரிபொருளை தருகிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், மயக்கம், சோர்வு, தலைவலி, மூட்டு பாதிப்பு வராமல் இருக்கவும், காலை உணவு மிக முக்கியம்.


பெண்களுக்கு இரும்புச்சத்து மிக முக்கியம், நாம் சாப்பிடும் உணவு மூலம் அது கிடைத்தால், மனது மற்றும் உடல் ரீதியாக திடத்தன்மை ஏற்படுகிறது. காலை உணவில், மக்காச்சோள உணவை சேர்த்துக்கொள்ளலாம். “கார்ன்பிளேக்ஸ்” போன்ற பாக்கெட் உணவுகளை பின்பற்றினால், இரும்புச் சத்து கிடைக்கும். இந்தியாவில், 90 சதவீத பெண்கள், இரும்புச்சத்து குறைபாடுடன் உள்ளனர். அவர்களுக்கு காலை உணவு கைகொடுக்கும் மக்காச்சோளம் உட்பட தானிய வகை உணவுகள் மிக நல்லது. உடலுக்கும், மூளைக்கும் வலுவை தரும்.


காலை உணவு சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீராக இருக்கும். அதனால், “ஸ்லிம்”மை தொடர்ந்து பாதுகாத்து வரலாம். ஆனால், பலரும் காலை உணவை தவிர்த்தால் “ஸ்லிம்”மாக முடியும் என்று நினைக்கின்றனர். இது தவறு. காலை உணவை தவிர்த்தால், மதிய வேளையில் அதிகமாக சாப்பிட தூண்டப்படுகிறது. அதனால் எந்த உணவாக இருந்தாலும், அதிகமாக சாப்பிட்டு கொலஸ்ட்ரால் ஏறியும் விடுகிறது. காலை உணவில், புரோட்டீனும், நார்ச்சத்தும் அதிகம் தேவை. அப்படிப்பட்ட தானிய வகை உணவை சேர்த்துக் கொள்ளலாம். இதில் எரிசக்தியை வெளிப்படுத்தும் வைட்டமின் “பி” ஆன்டி ஆக்சிடென்டாக உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை உள்ளன.


காலை உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீண்ட நாள் வாழலாம். அதற்கேற்ப, உடலுக்கு தேவையான அனைத்துச் சத்துக்களும் கிடைத்துவிடுகின்றன. பாக்கெட், உணவு வகைகள், இப்போது கொழுப்பு நீக்கப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்படுகின்றன. சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம், சாப்பாடாகவும் காலை உணவை சாப்பிடலாம்.


காலை உணவில் பலவகை உண்டு. தானிய வகை சத்துக்களாக சமைத்து சிற்றுண்டியாக சாப்பிட்டாலும், முழு உணவாக சாப்பிட்டாலும் நல்லது தான். ஆனால், முதல் நாள் சமைத்ததை மறுநாள் பயன்படுத்துவது கூடாது. அதனால், உடலுக்கு சத்துக்கள் கிடைக்காது. முழு அளவில் சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.


காலை உணவில் எல்லா சத்துக்களும் இருக்க வேண்டுமானால், தானிய வகை உணவு, பானங்கள், யோகர்ட், பால் உணவு போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவுடன் பழங்களையும் சேர்த்துக் கொண்டால், உடலுக்கு இன்னும் நல்லது. காலை உணவை சாப்பிட்டவுடன், ஓய்வு எடுப்பது தவறான பழக்கம். வேலைக்கு போகாத பெண்கள் என்றால், காலாற நடக்கலாம்; ஏதாவது வேலையில் இறங்கலாம். வேலைக்கு போவோராக இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், உட்கார்ந்தபடி பல மணி நேரம் ஒரே வேலையை செய்யக் கூடாது. உடலை இயக்கும் வண்ணம் அரை மணிக்கு ஒரு முறை நடக்க வேண்டும்; குறைந்தபட்சம் நாற்காலியை விட்டு எழுந்திருக்க வேண்டும்.
காலையில பிச்சைக்காரன் சாப்பிடுகிற மாதிரியும்,பகல்ல நடுத்தர மக்கள் சாப்பிடுகிற மாதிரியும் இரவுக்கு டயாபடீஸ்காரங்க மாதிரியும் சாப்பிடனும்.

(பிச்சைக்காரன் எந்த உணவு கிடைத்தாலும்-ஒரு மொத்து மொத்துவான் அதே மாதிரி.,டயாபடீஸ்காரங்க சும்மா பேருக்குன்னு சொல்வாங்களே அந்த மாதிரி)

Tuesday, January 18, 2011

வீடியோ ஆதாரம்! இறைவனின் இறுதி வேதம் திருக்குர்ஆன் வரலாறு. பாகம் 2

இறைவன் அருளால் திருக்குர்ஆன் பற்றிய மற்ற விஷயங்களுக்கு செல்லும் முன் - திருக்குர்ஆன் கூறும் விஞ்ஞான,மருத்துவ,பிரபஞ்ச தோற்றம் இன்னும் கோள்கள்,சமுத்திரங்கள் போன்ற இன்னும் ஏனைய செய்திகளை அலசும் இந்த தளத்தினுள் சென்று பாருங்கள்.வீடியோ செய்திகள் நம்மை கவரும்.




Sunday, January 16, 2011

பெயர் காரணம் !!!இறைவனின் இறுதி வேதம் திருக்குர்ஆன் வரலாறு. பாகம் 1 புதிய தொடர்!


மாற்று மத சகோதரர்களில் பலர் குர்ஆன் என்றால் என்ன?அது யாரால், எப்படி,யாருக்கு அருளப்பட்டது என்ற விஷயத்தையும் - அது என்ன சொல்கிறது,அது முஸ்லிம்களுக்கு மட்டுமான வேதமா அல்லது உலக மக்களுக்கே உரித்தான பொது மறையா,எந்த மத வேதமும் சொல்லாத,முன் அறிவிப்பு செய்யாத பல விஷயங்கள் என்ன,அறிவியலோ அல்லது எந்த துறையோ அது குர்ஆன் முன் அறிவிப்பு செய்யும் முடிவுக்கே வந்துவிடுகிறது எப்படி இன்னும் பல விஷயங்களை பற்றி சுவராசியமாக அலசவே இக்கட்டுரை.

(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.17;81

திருக்குர்ஆன்

அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது; பின்னர் (அசத்தியம்) அழிந்தே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.21;18



திருக்குர்ஆன்


வானவர் ஜிப்ரில்(THE ANGEL GABRIEL,PEACE BE UPON HIM)   அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம்,இறைவனின்  கடைசி தூதர் முஹம்மத் 
நபியவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும்  குறிப்பிடப்படும் “குர்ஆன்” என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது

“குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி அவர்களுக்கு இறைவன்(அல்லாஹ் என்பது அரபி மொழியில்)  ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது.


அல்லாஹ்(ஏக இறைவன்) என்ன செய்தியை மக்களுக்கு சொல்ல விரும்புகிறானோ அதை வானவர் தலைவர் ஜிப்ரீல் அலை மூலம் முஹம்மத் நபி அவர்களுக்கு அனுப்ப,அந்த செய்தியை கேட்டு,நபிகள் நாயகம் அவர்கள்,அப்படியே உள்ளது உள்ள படியே மக்களுக்கு எடுத்துரைப்பார்கள், அதுவே திருக்குர்ஆன் ஆகும். 


தொடர்வோம் இன்ஷா அல்லாஹ் 

Sunday, January 2, 2011

உன்னைத் தேடு

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2011,ஜனவரி 14-15,வெள்ளி & சனிக்கிழமைகளில் நமதூரில்'கல்வி விழிப்புணர்வு மாநாடு'நடைபெறவுள்ளதை அறிவீர்கள்.

முதல் நாள் (14.01.2011) நிகழ்ச்சியில் இளையான்குடி, டாக்டர் ஜாஹிர் ஹுஸைன் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் ஆபிதீன்அவர்கள் 'உனக்குள் உன்னைத் தேடு' எனும் தலைப்பில் மாணவர்களுக்கான சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

"அடுத்த தலைமுறையைப் படித்த தலைமுறையாக்கிட"முழக்கத்தோடு 'சமூகநீதி அறக்கட்டளை'யும் 'சமூகநீதி முரசு' எனும் இதழும் நடத்திவருபவரும் நமது சமுதாயம் கல்வியில் உயரவேண்டும் என்பதற்காகவே பல ஊர்களிலும் சென்று பிரச்சாரம் செய்பவருமானசகோ. முஹம்மது ஸலீம் (CMN) இரண்டாம்நாள்(15.1.2011) நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். மாநாட்டில் வினா-விடைப் பகுதியும் இடம்பெறவுள்ளது, இன்ஷா அல்லாஹ்.



விரிவான நிகழ்ச்சி நிரல் இங்கு விரைவில் பதிவு பெறும். நமதூரில் நடைபெறும் முதல் 'கல்வி விழிப்புணர்வு மாநாட்டுக்காக' உருவாக்கப்பட்ட இலச்சினை LOGO இங்கு அறிமுகப் படுத்தப்படுகிறது - நீங்கள் பிறருக்கு அறிமுகப் படுத்துவதற்காக!

மாநாடு சிறப்புற நடைபெறவும் அதனால் நம் மாணவர்கள் பயன்பெறவும் வேண்டுமென எல்லாரும் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் அருள் புரிவான்.

இவண்

அதிரை கல்வி விழிப்புணர்ச்சி மாநாட்டுக் குழு
Adirai Educational Awareness Conference - Team

thanks : adiraixpress