Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Monday, April 12, 2010

பண்படுத்தும் சிந்தனை

கட்டுரை போட்டு நாளாச்சி.நெறைய ப்ராஜக்ட் வேலை,பிளாக் பக்கம் திரும்பவே முடியல.சரி என்ன உருப்படியா எழுதலாம் என்று யோசிச்சாலும் ஒன்னும் ஓடல.அதுக்கு காரணமும் இருக்கு.சமீபத்துல நடந்த ஒரு விபத்து.மனச விட்டு அகலவே இல்ல.மரணம் எப்போவும்,எங்கேயும் வரும் தப்பிக்கவே முடியாது.அதுக்கு முன்னாடி நல்ல செயலகள் செய்யனும்,இல்லன்ன பெரிய பிரச்சனைதான்.

இப்போ ஒரு ஞாபகம் வருது.ஒரு பேட்டியில (முன்னாள் பெரியார்தாசன்)இப்போ பேராசிரியர் அப்துல்லா சொன்னார்,கடவுள் இல்லன்னா,பிரச்சனையே இல்ல,நெறைய பேருக்கு கடவுள் இல்லன்னு பிரச்சாரம் பண்ணியிருக்கேன்,அவங்களுக்கும் பிரச்சனையே இல்ல.ஆனா ஒருக்கால் கடவுள் என்று ஒருவன் இருந்துட்டா?அப்போ என் கதி என்னாகிறது?அந்த சிந்தனையே என்னை உழுக்கி எடுத்துவிட்டது.பிறகு எல்லா மத புத்தகங்களையும் ஆராய்ச்சி பண்ணி,எதிலேயும் முழு திருப்தி இல்லாம,குர்ஆனில் தேடினேன்.எனக்குள் இருந்த எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்தது.இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு ஆதாரம் கிடைத்தது.இஸ்லாத்தை ஏற்றேன்."

அந்த விபத்து,
ஏழு வருடம் கழித்து லண்டனில் இருந்து வரும் தன் மருமகனை அழைத்து செல்வதற்காக குடும்பத்தோடு சென்னை ஏர்போர்ட் சென்றது ஒரு குடும்பம்,மாமனார் கனடா சிட்டிசன்,அவரும்,அவர் மனைவி,அவர் மகள்,பேரன்கள் என எல்லாருமாக சென்றார்கள்.
மருமகனை பல வருடங்கள் கழித்து சந்தித்த ஆனந்தம் அவருக்கு,உள்ளம் குதூகலம் கண்டது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு.எல்லாரும் சென்னையிலிருந்து கிளம்பினார்கள்.அதிகாலை நேரம் - அவர்களின் கார் திருத்துறைப்பூண்டி அருகே வரும்போது,டிரைவர் சிறிது கண் அசர,எதிரே நின்றிருந்த லாரியின் மேல் கார் மோத,உடனடியாகவே மருமகன்,மாமனார் இருவரும் பலியாயினர்.மற்ற அனைவருக்கும் பலத்த காயம்,இது அந்த குடும்பத்துக்கும் மட்டுமல்ல - அந்த ஊரையே கதிகலங்க வைத்துவிட்டது.

எல்லாம் வல்ல இறைவன் அந்த இருவருக்கும் மிக உயர்ந்த பதவிகளை நல்குவானாக,அந்த குடும்பத்துக்கு பொறுமையையும்,உறுதியையும் தருவானாக்.நம்மை காப்பானாக.

எந்த ரூபத்திலும் மரணம் வருமுன்,நாம் உணர்ந்து கொள்வோம் ஏக இறைவனை-நம்பிக்கை கொள்வோம் அவனிடத்தில் என்ற செய்தியை சொல்லி,இன்ஷா அல்லாஹ் மீண்டும் சிந்திப்போம் மற்ற விஷயங்களுடன்.

Saturday, January 23, 2010

ஒட்டகத்தை கட்டு


சில பேரு இப்பிடிதாங்க,தான் எந்த முயற்சியும் பண்ணாம,இறைவன் பாத்துக்குவான் என்று சோம்பேறியாக காலம் தள்ளுவார்கள்.கேட்டா,அவன் எல்லாத்தையும் பாத்துக்குவான்,அவன் தருவான்,நாம ஏன் கவலைப்படணும் என்று சொல்லி முடங்கிக் கிடப்பார்கள்.


அது தப்புங்க.இறைவன் மேல நாம் முதல்ல நம்பிக்கை வைக்கனும்தான்.ஆனா அதுக்காகாக வேண்டி,நான் நம்புறேன் அதுனால எந்த முயற்சியும் பண்ண மாட்டேன்னு சொலது சரி இல்லங்க.

எந்த ஒண்ணா இருந்தாலும்,நாம முயற்சி பண்ணனும்,அதோட இறைவனுடைய உதவியை நாடி,அவனிடம் துவா(பிரார்த்தனை)செய்ய வேண்டும்.

உதாரணமா,ஒரு காரியம் பண்ணவேண்டும்,இல்ல எதோ ஒரு செயல் பண்ண வேண்டும் என்றால்,அந்த காரியம் நிறைவேற,செயல் துவங்க,நாம் முயற்சி எடுத்து-அந்த காரியம் நிறைவேற உழைக்க வேண்டும்.அத்துடன் நிறுத்தாமல்,யா அல்லாஹ்,என் இறைவனே,இந்த காரியத்தில் இறங்கிவிட்டேன்,(இறங்க இருக்கிறேன்)அந்த நல்ல காரியம் நிறைவேற நீதான் உதவி செய்ய வேண்டும் என்று இறைவனிடம் பொறுப்பு சாட்ட வேண்டும்.

இதைத்தான் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொன்னார்கள்,"ஒட்டகத்தை கட்டிவிட்டு,அதன் பாதுகாப்புக்கு இறைவனிடம் துவா செய்யுங்கள்"என்று.

ஒட்டகத்தை கட்டாமல்,அது பாட்டுக்கு விட்டு விட்டு,இறைவன் பாத்துக் கொள்வான் என்று இருந்து விடக் கூடாது என்று நபி அவர்கள் வலியுறுத்தினார்கள்.

எனவே,சோம்பித்திரியாமல்,நன்கு முயற்சிக்க,உழைக்க வேண்டும்,அத்துடன் அல்லாஹ்விடம் அந்த முயற்சி,உழைப்பு வெற்றி பெற பிரார்த்தனை செய்ய வேண்டும்.சரிதானுங்களே


இன்ஷா அல்லாஹ்,
மற்ற விஷயங்கள

பிறகு பார்ப்போம்.

Monday, December 21, 2009

நாமதான் மனநல பைத்தியங்கள்?படித்தேன்,பகிர்ந்தேன்

சகோ ஜாகிர் ஹுசைன்,அதிரையை சேர்ந்தவர்,அதிலும் அதிரையின் நுழைவாயில் எனப்படும் கடற்கரை தெருவை சேர்ந்தவர்.தற்போது மலேஷியாவில் உள்ளார்.அவரின் இக்கட்டுரை என் உள்ளத்தை தொட்டது,யாரும் கவனிக்காமல் இருக்கும் உண்மை மனிதர்களை,கவனித்து,தன கவலையை வெளிப்படுத்தி கட்டுரை தந்த அவருக்கு,அல்லாஹ் வெற்றி தருவானாக,இந்த கட்டுரையை அப்படியே தருகிறேன்,நன்றியோடு.



தற்போதைய சூழ்நிலையில் இது போன்ற குழந்தைகள் நமது ஊரில் ஒரு பெரிய குடும்பத்தில் ஒருத்தராவது இருக்கிறார்கள்.நாமும் இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதற்க்கு காரணம் வசதிகள் இருந்தும் ஒருவகையான அறியாமைதான் என நினைக்கிறேன். நாம் நேரடியாக பாதிக்கபடாதவரை நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைப்பது மனித இயல்பு.


இந்த குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளை வளர்ப்பவர்கள் நிறைந்த பக்குவம் அடைகிறார்கள். 9 வருடத்துக்கு முன் எனது நண்பர் ஒருவருக்கு இது போன்ற பெண் குழந்தை பிறந்தது இப்போது அந்த பெண் குழந்தை இறைவன் உதவியாலும், முறையான பயிற்ச்சிகளாலும் எல்லோரைப்போல் தனது வாழ்க்கையை எதிர் கொள்கிறாள்.

அனைத்துலக ரீதியில் இதுபோன்ற குழந்தைகளுக்கு பயிற்சி பள்ளிகள் இருக்கிறது. அதற்க்காக உதவிகளும் செய்கிறார்கள். பணத்தை துரத்தும் வாழ்க்கையை கற்றுத்தரும் இப்போதைய கல்வி முறைகள தவிர்த்து, குழந்தைகளின் செயல்படும் தகுதிக்கு ஏற்ப சொல்லித்தரும் கல்வி முறைகளை கனடா நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறார்கள்

இது போன்ற குழந்தைகளை சரியான முறையில் மருத்துவ சிகிச்சைக்கு உடன்படுத்தும் போது [ உதாரணம்: அக்கு ப்ரஸ்ஸர் / அக்கு பன்க்சர் / தை-ச்சி ) இந்த குழந்தைகள் மற்றவர்களைபோல் செயல் பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதை வழி நடத்த பொறுமை அதிகம் தேவை.இந்த குழந்தைகளை மன நலம் குறைந்தவர்கள் என்று சிலர் சொல்வதுண்டு....என்னை பொருத்தவரை நாம் தான் மன நலம் குறைந்தவர்கள்

இவர்களிடம் பழகிப்பார்த்தால் தெரியும் நான் சொன்ன உண்மை, இவர்களிடம் புறம் பேசுதல் , பொய் , ஏமாற்றுதல் , ஈகோ , எதுவும் கிடையாது. இப்போது சொல்லுங்கள் யார் உண்மயில் மன நலம் குறைந்தவர்கள்?.

நமது ஊரில் இந்த குழந்தைகளுக்கு ஒரு பள்ளி ஆரம்பித்ததாக கேள்விப்பட்டேன். இறைவன் உதவியால் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.


THANKS TO
ZAKIR HUSSAIN(MALASIA)
அதிரை எக்ஸ்பிரஸ்

Friday, December 11, 2009

ஏழைங்க என்னங்க பண்ணுறது.

என்னங்க இது அநியாயமா இருக்குது?ஊருக்கு போன் பண்ணினா காய்கறி மொதக்கொண்டு,மீன்,இறைச்சி,அரிசி,பருப்பு இப்பிடி எல்லா சாப்பாட்டுபொருளும் விலை  ஏறிபோச்சிடுச்சின்னு சொல்றாங்க.சாதாரணமா ஒரு அம்பது ரூவா கொண்டு போனா,மீனு,கொஞ்ச காய்கறி,இப்படி தாராளமா வாங்கி வந்த காலம் போய்
அந்த மாதிரி இப்போ வாங்குனா முன்னூறு ரூவா தேவைன்னு சொல்லுறாங்க.கேக்கும்போது மனசு கனக்குது.ஏழைங்க என்னங்க பண்ணுறது.



இது செயற்கையா விலைவாசி ஏத்தமா இல்லையான்னு தெரியல.எது எப்படியோ ஆனா கஷ்ட்டப்படுறது ஏழைங்கதான்.இது ஊர்ல இருக்குற நல்ல இளைஞர்கள்,அல்லது அமைப்புக்கள் ஒன்னு கூடி மொத்தமா காய்கறி,மீன்,ஆடு-மாடு வாங்கி நியாய விலையில வித்தாங்கனா,ஓரளவுக்குவிலைவாசியை கட்டுப்படுத்தலாம்.அதுமட்டுமில்லாம,அவங்களுக்கு அது ஒரு வியாபாரமாகவும்,சுய தொழிலாகவும் போகும் இல்லையாங்க.


பெருநா நேரத்துல ஒரு தடவ நம்ம ஊர்ல இதுபோல த மு மு க காரங்க,ஆடு வாங்கி,விலை குறைவா வித்தாங்கன்னு என்னோட மச்சான்(கணவர்) சொன்னார்.இது போல தொடர்ச்சியா செய்யலாமே.இப்படி செய்யும்போது,மத்த வியாபாரிங்கலும், விலை குறைக்க சான்சு இருக்கு,செஞ்சுதான் பாருங்களேன்,ஆண்களே!


நான் சொல்லுறது சரியா,தப்பா எதுவானாலும்,கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள். படிக்கிற மத்த மக்களுக்கு உதவியா இருக்கும்.

Thursday, October 22, 2009

சிந்திக்கவும்,செயல்படவும்???



"நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்;. நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.

(நபியே!) நீர் கூறுவீராக "மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்."

திருக்குர்ஆன்