Showing posts with label ஹஜ். Show all posts
Showing posts with label ஹஜ். Show all posts

Tuesday, February 9, 2010

கிளைகளும்,கோத்திரங்களும்.........

அட நீ இந்த வூட்டு புள்ளயா? உன்னோட தடிச்ச உதட்ட வச்சே கண்டு புடிச்சிட்டேன்.சரியா?

அட நீ அந்த அவோ வூட்டுப் பையன்தானே,உன்னோட கண்ணை வச்சி தெரிஞ்சி போச்சு.

இப்பிடி சிலபேரோட முக சாடை,மூக்கு அளவு,முரசு,உதடு,முடி,தொந்தி,உயரம்-குள்ளம்,நடை,பேச்சு,கலர் இதையெல்லாம் வச்சி,ஒவ்வொரு குடும்பத்தையும் நாம அடையாளம் காண முடியும்.

இதெல்லாம்,இந்த வித்தியாசமெல்லாம் நாம் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளவே இறைவன் படைத்துள்ளான்.ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனிப்பட்ட சில குணாதியசங்கள் உண்டு.இந்த மாதிரியான சில வித்தியாசங்களை வைத்து,ஒருவர் மற்றவரை பழிக்கவோ,அல்லது இது மூலம் உயர்த்தி-தாழ்த்தி நடப்பது அறிவீனம்.

ஆனால் இப்படி மக்களில் பலர் சில குடும்பங்களில் உள்ள குணாதியசங்களை வைத்தோ,அல்லது அவர்களின் தனிப்பட்ட உடல் வாகை வைத்தோ சாடி பேசுவதைக் காண்கிறோம்.அது மிக தவறு.

உதாரணமாக,குள்ளமான ஒருவரை பார்த்து.ஜப்பான்காரன் வர்றான் பாரு என்றோ வெள்ளை நிறத்தில் ஒருவனைக் கண்டால் "வெள்ளப்பாச்ச"என்பது கருப்பாய் இருந்தால் "அடுப்புக்கரி"என்பதும் இப்படி நிறைய சொல்லலாம்.இதை நாம் உடனே கை விடவேண்டிய தீய பண்பாகும்.அல்லாஹ் இதை விரும்புவதில்லை.




இறைவன் முன் அனைவரும் சமம்.இறை அச்சம் உள்ளவர் யாரோ,அவர் ஏழையாக இருந்தாலும்,அழகற்றவராக இருந்தாலும்,கருப்பராக இருந்தாலும் அவரே மனிதர்களில் உயர்ந்தவர்,சிறந்தவர்.
இதுதான் இஸ்லாம் காட்டும் வழி.

மனிதர்களே!
உங்களை ஓர்ஆண் ஒருபெண்ணிலிருந்தே

படைத்தோம்.

நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதர்ககாக

உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்

உங்களில்[இறைவனை] அதிகம்அஞ்சுவோரே

இறைவனிடன் சிறந்தவர்.

இறைவன் அறிந்தவன்;நன்கறிபவன்.


திருக்குர்ஆன்

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

இறைவனின் தூதர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்

Thursday, November 26, 2009

அந்த நாள் ஞாபகம் வந்ததோ?ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகள்!


பொறைய கண்டாச்சு

பொறைய கண்டாச்சு

நாளக்கி பெருநா
நம்மளுக்கு ஜோக்கு
கூழை கடா அறுத்து
கூடி கூடி திங்கலாம்.


பெருநாள்ன்னு சொன்ன உடனே,சின்ன புள்ளையில பிறையை கண்டவுடனே இப்பிடி ஆடிப் பாடுவோம்.அந்த ஞாபகம்தான் வருது.எங்க வூடு சி எம் பி லைன்ல இருக்கிறதால, சித்திக் பள்ளி,ஹனீப் பள்ளி இப்பிடி ஒவ்வொரு தெருவா போய் நிறைய எங்க வயசு பிள்ளைங்களோட பாடுவோம்,அந்த இனிமையான நாள்,ஞாபகம் வருது,

அமெரிக்காவுல இருந்தாலும்,அதிரையில,சென்னையில இருந்தாலும்,அந்த நாட்களை யாராலும்.சின்ன வயசுக் குறும்புகளை மறக்க முடியுமா?


அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்