Showing posts with label சாராயம். Show all posts
Showing posts with label சாராயம். Show all posts

Sunday, October 4, 2009

நாத்த பொழப்புடா இது?சாட்டையடி 5

அது ஒரு பண்டிகை நாள்.பெரியவர் முதல்,சின்னஞ் சிறார் முதல் புத்தாடை உடுத்தி,அணிகலன் அணிந்து மகிழ்ச்சி பொங்க உலா வரும் நேரம்.இரு சிறுவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

"டேய் என்னடா இப்படி இருக்கே.புது சட்டையும்,புது வாட்சும்,வேட்டியும் ஜோலிக்கிரே? எனக்கு இன்னக்கி போன பண்டிகையில எடுத்த சட்டதாண்டா?

"ஆமாம்டா,இது எங்க வாப்பா அனுப்பினாரு".

:அப்படியா,உங்க வாப்பா என்ன பன்றாருடா?

எங்க வாப்பா அமெரிக்காவுல இருக்கார்.

அப்படியா,ரொம்ப நல்லதுடா.அழகான ஊராச்சே.

ஆமாடா,ரொம்ப நல்ல ஊரு,நாங்களும் போகப் போறோம்.

சரிடா,என்ன வேல பாக்குறாரு?

அவர் எதோ லிக்கர் ச்டோராம்(சாராயக் கடை) அதுல வேலை பாக்குறார்.

"அடப் பாவி,என்னடா சொல்லுறே,சாராயக் கடைன்னு சும்மா சாதாரணமா சொல்லுறே.அது பெரிய பாவம்டா.நம்ம நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சாராயம் வாங்குறவன்,விக்கிறவன்,குடிக்கிறவன்,இப்படி எந்த வகையில சாராயத்தோட சம்பந்தப்பட்டாலும் அல்லாஹ் அவனை சபிக்கிரான்னு சொல்லி இருக்காங்க.அது மட்டும் இல்ல,ஹராமான சம்பாத்தியம் செய்றவன் துவா-பிரார்த்தனை கூட அல்லாஹ் எத்துக்கமாட்டான்னும் சொல்லி இருக்காங்க.எங்க வாப்பா பெஸ்ட்டா.நான் பழைய சட்டை போட்டாலும்,ஹலாலான சம்பாத்தியம் செஞ்சு எங்களை கவனிக்கிறார்.எங்க துவாவை அல்லாஹ் எத்துக்குவான்.இன்ஷா அல்லாஹ்."

இதைக் கேட்ட அந்த சிறுவன்,தன வாட்சை கழற்றி சாக்கடையில் எறிந்தான்,சட்டையை கழற்றி வீசினான்.கண்கள் பணிக்க சொன்னான்,"இறைவா,என் தந்தையை காப்பாற்று,ஹலாலான வேலை பார்க்க உதவி செய்,எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்."

(இதில் குறிப்பிடப்படும் செய்திகள் யாவும்,யாரையும் அல்லது தனிப்பட்ட நபர்களை குறிப்பவை அல்ல. ஆனால் அப்படி யாராவது சாராய சம்பாத்தியத்தில் இருந்தால் இன்றே திருந்துங்கள்-இது குரான்,ஹதீஸ் மூலம் விடுக்கப்படும் எச்சரிக்கை.)

Wednesday, September 23, 2009

நாத்த பொழப்புடா இது?சாட்டையடி 4

பெருநா கொண்டாடியாச்சி,எல்லாரும் நோன்பு பிடிசிருப்போம்.அல்லாஹ் அத ஏத்துக்கொண்டு நமக்கு சொர்க்கம் தர பிரார்த்திப்போம்,இன்ஷா அல்லாஹ்.

இஸ்லாத்த பொறுத்தவரை எல்லாம சரியா இருக்கணும்.எல்லாத்துக்கும் கேள்வி-கணக்குன்னு இருக்கு.நீ எப்படி சம்பாதித்தே,எப்படி செலவழித்தே,அக்கம் பக்கம் உள்ள மக்களுக்கு,ஏழைகளுக்கு,அனாதைகளுக்கு,இப்படி எல்லாருக்கும் நீ கொடுத்தியா?இப்பிடி எல்லாத்துக்கும் கேள்வி கணக்கும் உண்டு,அது போல பரிசா சொர்க்கம்,நரகம் இப்பிடியும் உண்டு.

"ஒரே இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை.முஹம்மது நபிகள் அவர்கள் அந்த இறைவன் அல்லாஹ்வுடைய தூதர் ஆவார்கள்" இப்பிடி யார் சொன்னோமோ,அவர்கள் எல்லாரும் முஸ்லிம்கள்.முஸ்லிம்கள் என்று ஆகிட்ட பிறகு,அல்லாஹ்வும்,அவனுடைய தூதரும் என்ன கட்டளை இட்டாங்களோ,அதை நடை முறைப் படுத்த வேண்டும்.

தொழுகை,நோன்பு,ஜகாத் என்ற ஏழைகள்,ஆதரவற்றோருக்கு கொடுக்கவேண்டிய வரி,ஹஜ் செய்தல் இவைகள் கடமைகள்.இதையும் நாம் பேணி வர வேண்டும்.இத்துடன் நம் கடமை முடிந்து விடுகிறதா,இல்லை.

நம் அன்றாட வாழ்வில்,இருபத்து நான்கு மணி நேரமும்,நாம் எதிர் கொள்கிற ஒவ்வொண்ணுக்கும் குரானும்,ஹதீசும் காட்டிய வழிப்படி நடக்க வேண்டும்.அதுதான் மார்க்கம்.

காலையில எந்திரிச்சி ஒருத்தன் கடைக்கி,வயலுக்கு,தோப்புக்கு,ஆபீசுக்கு வேலைக்கி போறான்.இல்லை சொந்தமா வியாபாரம்,விவசாயம் பண்றான்.அப்படி பண்ற வேலையோ,வியாபாரமோ மற்ற மக்களுக்கு கெடுதல்,தீங்கு செய்யாததாக இருக்க வேண்டும்.

உதாரணமா,ஒருத்தன் ஒரு மளிகை கடை வச்சிருக்கான்,அதுல இறைவன் தடுத்த எந்த பொருளும் விற்காமலும்,மக்களுக்கு தீங்கு செய்ற எதையும் செய்யாமலும்,நேர்மையான முறையில்,எடை அளந்து,யாரையும் மோசடி செய்யாமலும் வியாபாரம் செய்கிறான் என்றால் அவன்தான் இறைவன் சொன்ன சொல்லையும்,நபிகள் சொன்ன சொல்லையும் செய்கிறவன்,அவனுக்கு மறுமையில் வெற்றி கிடைக்கும்।இன்ஷா அல்லாஹ்।

சரி,இதுக்கு மாத்தமா சாராய வியாபாரம் செய்கிறான்,சாராய வேலைக்கி போறான்,தானும் அந்த சம்பாத்தியத்துல கெடச்சத வச்சி தின்கிறான்,பொண்டாட்டி பிள்ளைகளுக்கு குடுக்குறான். இப்படி நாத்தப் பிழைப்பு நடத்தறவன் கதி? பொறவு பாக்கலாம்.

(இதில் குறிப்பிடப்படும் செய்திகள் யாவும்,யாரையும் அல்லது தனிப்பட்ட நபர்களை குறிப்பவை அல்ல. ஆனால் அப்படி யாராவது சாராய சம்பாத்தியத்தில் இருந்தால் இன்றே திருந்துங்கள்-இது குரான்,ஹதீஸ் மூலம் விடுக்கப்படும் எச்சரிக்கை.)