Showing posts with label கப்ரு வணங்கி. Show all posts
Showing posts with label கப்ரு வணங்கி. Show all posts

Sunday, July 15, 2012

கப்ரு வணங்கிகளின் கொலைவெறி தாக்குதல்


அவ்லியாக்களின் கபுர்களின் மீதுள்ள கட்டடங்களை தரைமட்டமாக்குவதற்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டாகள்:-

ஹதீஸ் ஆதாரம்:- உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள் என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: அபுல் ஹய்யாஜ் அல் அஜதி (ரலி), நூல்கள் : அபூதாவுத், நஸயீ, திமிதி, அஹ்மத்.

அவ்லியாக்களின் கப்ருகளில் மஸ்ஜிதைக் கட்டுபவாகள் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவர்கள்:-ஹதீஸ் ஆதாரம்:-

யஹுதிகளையும், நஸாரக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கபுகளை மஸ்ஜிதாக ஆக்கிக்கொண்டனர் (நூல் : புகாரி)
அவ்லியாக்களின் கபுர்களில் தர்ஹாக்களை எழுப்புபவர்கள் அல்லாஹ்வின் படைப்பினங்களிலேயே மிகவும் கெட்டவர்கள் ஆவாகள்:-ஹதீஸ் ஆதாரம்:-

அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும் போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இவாகளின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்வர்கள் அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் புகாரி மற்றும் முஸ்லிம்.

அவ்லியாக்களின் கபுர்களில் சந்தனம் போன்றவற்றைப் பூசக்கூடாது:-ஹதீஸ் ஆதாரம்-1:-
கப்ருகள் பூசப்படுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தனர் அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதார நூல்கள் : அஹ்மத், முஸ்லிம், நஸயீ மற்றும் அபூதாவுத்.
ஹதீஸ் ஆதாரம்-2:-

கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றில் எதனையும் எழுதப்படுவதையும் அவற்றின் மீது கட்டடம் (தர்ஹா) எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தனர் அறிவிப்பவர்: ஜாபி (ரலி), ஆதார நூல் : திமிதி.

அவ்லியாக்களின் கபுர்களில் கந்தூ விழாக்கள் நடத்தக்கூடாது:-ஹதீஸ் ஆதாரம்:-

எனது கப்ரை (கந்தூ) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கிவிடாதீகள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கிவிடாதீகள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்து சொல்லுங்கள். அது என்னை வந்தடையும் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத்.

அவ்லியாக்களின் கபுர்களை வணங்கும் இடமாக ஆக்கக்கூடாது:-ஹதீஸ் ஆதாரம்-1 :-

யஹுதிகளும், நஸராக்களும் தங்கள் நபிமார்களின் கப்ரை வணங்குமிடங்களாக ஆக்கிக்கொண்டனர். அல்லாஹ் அவர்களைச் சபிப்பானாக அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.

ஹதீஸ் ஆதாரம்-2 :-
உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்களின் கபுருகளையும், நல்லடியார்களின் கபுருகளையும் வணங்குமிடமாக ஆக்கிவிட்டனர். அறிந்து கொள்க! கபுருகளை வணங்குமிடமாக ஆக்கிவிடாதீகள்! அதை நான் தடுக்கிறேன் அறிவிப்பவர் : அப்துல்லாஹ் அல்பஜலி (ரலி), நூல் : முஸ்லிம்.