Tuesday, June 21, 2011

தலித்துகளுக்கு விடுதலை! இஸ்லாம் பற்றி பெரியார்


ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும் ஆமாம்- மும், வெங்காயத்தை -யும் தனக்கே உரிய பாணியில் உச்சரித்த பெரியார் அவர்களின் பேச்சுதான் முதல் பஞ்ச் வசனமாக இருக்கக்கூடும்.
1947ஆம் ஆண்டுவாக்கில், தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் சீலையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர்கள் 69 பேர் தீண்டாமைக் கொடுமை தாங்கமுடியாமல் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள்.
அதுகுறித்து பெரியார் பேசிய பேச்சு இது.
அதில் அவர், இந்து மதத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை வரிசைப்படுத்தும் விதமும், சமதர்ம சமுதாயத்திற்கு ஏற்றது இஸ்லாம் மதம்தான் என்றும் கூறும்விதம் அழகோ அழகு. நீங்களும் கேளுங்களேன் அவருடைய பேச்சை!

Sunday, June 19, 2011

உயிரோடு நீ... தொழு!


ரு வறை தொடங்கி
கல் லறை அடங்கி
முடி வுறும் நாள்வரை...
இறைவனைத் தொழு!

எத்தனை அழகு 
என்னென்ன நிகழ்வு
எல்லாம் உனக்களித்த
ஏகனைத் தொழு!

காணவும் களிக்கவும்
 
கண்களால் ரசிக்கவும்
பார்வையைத் தந்தவனை
நேர்மையாய்த் தொழு!

கேட்கவும் கிறங்கவும்
 
கேட்டதை உணரவும்
ஒலி புரியச் செவி தந்த
வலியோனைத் தொழு!

சாப்பிடவும் கூப்பிடவும்
 
சண்டையின்றிப் பேசிடவும்
நாவும் நல் வாயும் தந்த
நாயன் தனைத் தொழு!

சுவாசிக்கும் நாசியாகவும்
 
முகர்ந்தறிய மூக்காகவும்
அமைத்தொரு புலன் தந்த
ஆண்டவனைத் தொழு!

கையும் காலும்
 
கச்சித உடலும்
வாகாய்த் தந்த
வல்லோனைத் தொழு!

முடிந்த இரவை முழுமையாக்கி
 
விடியும் முன்பு தொழு...
புதிய பூவாய்ப் பூரிப்போடு
மதிய நேரம் தொழு...

மாலை மகுடம் காத்திருக்கு
 
மாலை வேளை தொழு...
மாலை மயங்கி இரவு தொடும்
வேளையிலும் தொழு...

இன்று நன்றாய் முற்றுப்பெற
 
இரவு நேரம் தொழு!
காலநேரம் கடக்குமுன்
கவனமாகத் தொழு!

கடமையுணர்ந்து தொழு!
 
கண்மணி நபி
கற்பித்தவாறு
கவனமுடன் தொழு!

உறுதியாகத் தொழு
 
உபரியையும் தொழு!
அறுதியாய்ச் சுவனம்
அடைந்திடத் தொழு

உன்
 
உடல் கிடத்தி
ஊர் தொழு முன்-
உயிரோடு நீ...
தொழு!

- சபீர்

Friday, June 10, 2011

நாணமும் இறைநம்பிக்கையும்...

* நாணமும் இறைநம்பிக்கையும் இணைந்தே உள்ளது. அதில் ஒன்று கெட்டுவிட்டால் 
இன்னொன்றும் கெட்டுவிடும்.

* உங்களில் எவர் ஒரு தீய செயலைக் 
காண்கிறாரோ, அவர் அதனை தனது கைகளால் தடுக்கட்டும். அவரால் அது முடியவில்லையெனில் அதை நாவால் தடுக்கட்டும். அதையும் செய்ய முடியவில்லையெனில் அதை அவர் தம் மனதால் வெறுக்கட்டும். இது இறை நம்பிக்கையில் மிகவும் 
பலவீனமான நிலையாகும்.

* செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை 
எண்ணுகின்றானோ அதற்குரிய பலன்தான் அவனுக்குக் கிட்டும்.

* இறைவன் உங்களில் சிலருக்கு சிலரை விட எதனைக் கொண்டு சிறப்பளித்திருக்கின்றானோ, அதனை அடைய நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு 
அவர்கள் சம்பாதித்ததற்கேற்ப பங்கு உண்டு. மேலும் பெண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததற்கு ஏற்ப பங்கு உண்டு. இருப்பினும் இறைவனிடம் அவனுடைய 
அருளைக் கோரிய வண்ணம் இருங்கள்.

* செல்வ வளம் என்பது அதிக செல்வத்தைப் 
பெறுவதல்ல. போதுமென்ற மனதைப் பெறுவதே 
உண்மையான செல்வமாகும்.



நபிகள் நாயகம் ஸல் பொன்மொழிகள்