Monday, November 29, 2010

பாட்டியின் பார்டி (GRANDMA'S PARTY)

கொசு கடித்தபின் ஏற்படும் அரிப்பிலிருந்து நிவாரணம் பெற, கொசு கடித்த இடத்தில் சிறிது சோப்பைத் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மிளகைப்போட்டு வைத்த கஷாயத்தைக் குடித்து வந்தால் ஜுரம் குணமாகும். 

மிளகுப்பொடி, நெய், சர்க்கரை, தேன் ஆகியவைகளைக் கலந்து சாப்பிட்டால் இருமல் நிற்கும். 

சாப்பிடும்போது நெய்யில் வறுத்த ஏழெட்டு மிளகுகளை முதலில் சாப்பிட்டால், அஜீரணம், வயிற்று வலி முதலியன வராது.

உணவோடு இஞ்சி சேருவதால் சாப்பிட்ட உணவு சுலபமாக ஜீரணமாகிறது. இஞ்சித் துவையலை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. வயிற்று வலி நிற்கும். 

ஜுரம் வந்து குணமானவர்களுக்கு இஞ்சித் துவையல் செ‌ய்து கொடு‌க்கலா‌ம். இ‌ஞ்‌சி துவைய‌ல் சா‌ப்‌பி‌ட்டா‌ல் வாய் கசப்பு போய், நா‌க்கு‌க்கு சுவை ‌கிடை‌க்கு‌ம்.

Monday, November 15, 2010

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

          
அனைவருக்கும் தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்


Friday, November 12, 2010

அழிவைத் தரும் 7 பாவங்கள் எவை?

1.அல்லாஹ்விற்கு இணை வைப்பது.
2.சூனியம் செய்வது.
3.அல்லாஹ் எந்த உயிரைக் கொலை செய்வதைத் தடுத்து இருக்கிறானோ அந்த உயிரை நியாயமின்றி கொலைசெய்வது.
4.வட்டியை உண்பது.
5.அநாதைகளின் சொத்துக்களை அபகரிப்பது.
6. போர் நடந்துக்கொண்டிருக்கும் தினத்தன்று புறமுதுகு காட்டுதல்.
7.விசுவாசியான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது.

Sunday, November 7, 2010

குரங்கு சேட்டை

ஒரு குரங்கு ஒரு ராஜாளிப் பறவையின் கூட்டிலிருந்த ஒரு முட்டையை எடுத்து ஒரு கோழி இட்டிருந்த முட்டைகளுடன் சேர்த்து வைத்து விட்டது.வித்தியாசம்காணத் தெரியாத கோழியும் தன முட்டைகளுடன் சேர்த்து அதையும் அடை காத்து குஞ்சு பொரித்தது.ராஜாளிக் குஞ்சும் கோழிக் குஞ்சிகளுடன் அக் கோழியின் அரவணைப்பில் இருந்து வந்தது.அதனுடைய செயல்,நடவடிக்கை அனைத்தும் கோழிக் குஞ்சிகளுடையதைப் போலவே இருந்தது.

சிறிது வளர்ந்த நிலையில் அது ஒரு நாள் வானத்தை அண்ணாந்து பார்த்த போது,ராஜாளிப் பறவைகள் கூட்டாகப் பறந்து செல்வதைக் கவனித்தது.அப்போது அது வருத்தத்துடன்,''இறைவா,என்னையும் இது போல் ராஜாளியாகப் படைத்திருக்கக் கூடாதா?நானும் அவை போல ஆனந்தமாகப் பறப்பேனே!''என்று வருத்தப்பட்டது.
என்ன விசித்திரம்!ராஜாளிக் குஞ்சுக்குத் தான் ஒரு ராஜாளி என்பதே தெரியவில்லை.
இது போல் தான் நம்மில் பலரும் தன்னைப் பற்றி,ஏக இறைவன் தந்த திறமையை பற்றி அறிவதில்லை.தன்னுள் தேவையான திறமை இருந்தும் அது இல்லையே என்று அடுத்தவரைப் பார்த்து புலம்புபவர் பலர்.நாம் ஒரு ராஜாளி தான் என்பதை உணர வேண்டும்.


இளைஞனே உன் கூடு பூமியில் இல்லை 
மலை உச்சியில்
நீ ராஜாளி பறவை 
பற இன்னும் பற 
மேலே இன்னும் உச்சிக்கு 
தொடு
சிகரத்தை 
இன்ஷா அல்லாஹ்*  
உன்னால் முடியும். 

சாரே ஜகான் சே அச்சா எழுதிய கவிஞர் இக்பால் 

*இறைவன் நாடினால்Saturday, November 6, 2010

வெல்கம் ஒபாமா

  

பதவியேற்பு
ஜனவரி 202009பதவியில்
பதவியேற்பு
ஜனவரி 42005

இலினொய் மாநில மேலவைஉறுப்பினர்
13வது மாவட்டத்தில் இருந்து
பதவியில்
ஜனவரி 81997 – நவம்பர் 42004
பிறப்புஆகஸ்ட் 4 1961 வயது  49)
ஹொனலுலுஹவாய், ஐக்கிய அமெரிக்கா
வாழ்க்கைத்
துணை
மிசெல் ஒபாமா (தி. 1992)
பிள்ளைகள்மலியா ஆன் (பி. 1998), சாஷா (பி. 2001)
இருப்பிடம்கென்வூட்ஐக்கிய அமெரிக்கா
பழைய மாணவர்கொலம்பியா பல்கலைக்கழகம்,
ஹார்வர்ட் சட்டக் கல்லூரி
துறைசட்டத்தரணி
அரசியல்வாதி


Tuesday, November 2, 2010

சாப்பாடு போடாத மகன்...

பொள்ளாச்சி பெத்தநாயக்கனூரை சேர்ந்தவர் கோபால் (50). இவர், மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக கோவையில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். மனு கொடுக்க காத்திருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக 108 இலவச ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் விரைந்துவந்து முதியவரை, வேனில் ஏற்றி கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர் கலெக்டரிடம் கொடுக்க வைத்திருந்த மனுவில், எனக்கு 10 ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லை. 

என்னிடம் இருந்த ரூ.35 ஆயிரம் ரொக்கத்தை எனது மகன் பறித்துக்கொண்டு சாப்பாடு போடவில்லை. பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவதாக மருமகள் மூலம் மிரட்டுகிறான். என்னிடம் இருந்து அவன் பறித்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும். வாழும் காலம் வரை சாப்பாடு போட உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
 செய்தி 


“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.6:151


 மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.46:15


திருக்குர்ஆன்