Showing posts with label தமிழன். Show all posts
Showing posts with label தமிழன். Show all posts

Sunday, May 1, 2011

கொல்லத் துணிந்தாலும்.........

தமிழன் என்ற பெயரில் ஒருவர் எனக்கு பல மிரட்டல்கள்,வசவுகள்,இன்னும் பல நிந்தனை செய்யும் சிந்தனைகளை கமெண்ட் எனும் பெயரில் வாரி இறைத்துள்ளார்.(ஒன்றைத் தவிர ஏனையதை நீக்கிவிட்டேன்)அவர்க்கு மிக்க நன்றி.இதனைக் கண்டு கொதித்துப் போய் - விசாரித்து கமென்ட் கொடுத்த உள்ளங்களுக்கும் நன்றி.

நான் இதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை.காரணம்,உண்மையை சொல்வது நம் கடமை.இறைவனால் ஏற்றுக்கொளப்பட்ட ஒரே மார்க்கமான இஸ்லாத்தை பின்பற்றி,கல்லையும்,மண்ணையும்,செடி-கொடிகளையும்,விலங்குகளையும் இன்னும் கண்டதையும் வணங்கக்கூடாது என எத்தி வைத்து - உலக மக்கள் அனைவரையும் படைத்த இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும் என்ற செய்தியை சொல்ல நாம் கடமைப் பட்டுள்ளோம்.நாம் மட்டும் சொர்க்கம் போனால் போதுமா?

கல்லை வணங்கிக் கொண்டு இருக்கும் இந்து சகோதர-சகோதரிகள் அந்த நிலைமையிலேயே மரணித்துவிட்டால்?அவர்கள் நரகம் அல்லவா செல்ல நேரும்?அந்த கல்லை படைத்த இறைவனை வணங்குவதை விட்டு விட்டு - அந்தக் கல்லை வணங்கினால்,அது எவ்வளவு மாபாதகம்?

இறைவனுக்கு மகன் உண்டு என சொல்லிக் கொண்டு - இறைவனுக்கு மாசு கற்பிக்கும் கிறிஸ்த சகோதர சகோதரிகள் அந்த நிலையிலேய மரணித்துவிட்டால் அவர்கள் கதி என்ன?நரகம் அல்லவா செல்ல நேரும்?

எனவே,இறைவனால் படைக்கப்பட்டவைகளை வணங்க மாட்டோம்,மாறாக,அவைகளை படைத்த ஏக இறைவனையே வணங்குவோம்.இந்த செய்தியை சகோதரர் தமிழன் போன்றோர் உணரவேண்டும்.அவர்கள் நம்மை வசை பாடினாலும்,ஏன் கொல்லத் துணிந்தாலும் நாம் கவலைப்படமாட்டோம்.அவர்களும் சொர்க்கம் செல்ல வேண்டும்,நரகில் சென்று வதைபடக் கூடாது.

எனவே,என் அருமை சகோதர சகோதரிகளே - நாம் அதைப் பற்றியெலாம் கவலைகொள்ளாமல் - நாம் எத்தி வைப்போம் உண்மை செய்தியை.