Showing posts with label குமுறல். Show all posts
Showing posts with label குமுறல். Show all posts

Wednesday, January 13, 2010

படிப்போமா,படிப்பினை பெறுவோமா? படித்தேன் பகிர்ந்தேன்

பெயர் : அசோக் கோலன் யாங்

நாடு : சூடான்

பதவி : கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க சர்ச் கவுன்சிலின் பொதுச் செயலாளர்

இவர் கடந்த 2002 ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். இவர் மதங்களைப் பற்றிய மதிப்பீடுகள் குறித்து ஒப்பு நோக்கி ஆய்வு செய்த பொழுது, இஸ்லாமே உண்மையான மார்க்கம் என்பதைப் பற்றிய தெளிவுக்கு வந்தார். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

இவரை குவைத்திலிருந்து வெளிவரும் அல் முஜ்தமா என்ற அரபுப் பத்திரிக்கை பேட்டி கண்டது. அந்தப் பேட்டியின் தமிழாக்கமே இது.

நான் ஏன் முஸ்லிமானேன்..! ஏனென்றால்,

திருமறைக் குர்ஆனை எந்த தனிப்பட்ட மனிதரும் எழுதவில்லை, அதேநேரத்தில் பைபிளுக்கு பல்வேறு நூலாசிரியர்கள் இருக்கின்றார்கள்.


திருமறைக் குர்ஆன் அல்லாஹ்வின் சத்திய வாக்கியங்களாகும்.

இஸ்லாம் அழைக்கின்ற ஓரிறைத் தத்துவத்தின் பாலே அனைத்து நபிமார்களும் மக்களை அழைத்தார்கள்.




இஸ்லாமே இறுதி மார்க்கம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாகவே சுட்டிக் காட்டி இருக்கின்றார்கள்.



இவரது முயற்சியின் காரணமாக 1,50,000 பேர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள், இவர்களில் 2500 பேர் தேவாலயங்களின் தலைவர்களாவார்கள்.

கிறிஸ்தவ அமைப்புகள் முஸ்லிம்களிடையே கிறிஸ்துவத்தைப் பரப்புவதற்கு பல்விதமான தந்திரங்களைக் கையாளுகின்றன. இது பற்றி அவர் மேலும் கூறியதாவது :

மனித உதவி மற்றும் தொண்டு நிறுவனங்கள் என்ற போர்வையின் கீழ் செயல்படுகின்றன

உதவிகளை வழங்குவதன் மூலம் தங்களது அரசாங்கத்தின் வழியாக அரபுக்களின் மீதும், இன்னும் முஸ்லிம்களின் மீதும் பலப்பிரயோகத்தைத் திணித்தல் மூலமாக

இன்னும், தனிநபர்களை இஸ்லாத்தின் பால் அழைப்பதற்கு பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன, அவை : பணம், பதவி, பெண் ஆகியவற்றின் மூலமாக.

மேலும், அவர் கூறும் பொழுது, இஸ்லாத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் என்னவென்றால், ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள் கிடையாது, இன்னும் சாதி அமைப்புகளும் கிடையாது, முஸ்லிம்கள் அனைவரும் சமமே. ஆனால், கிறிஸ்துவத்தில் கறுப்பு நிற நீக்ரோ கிறிஸ்தவர்கள் வெள்ளைக்கார கிறிஸ்தவர்களின் சர்சுக்குச் சென்று வழிபாடு நடத்த இயலாது, ஏன்.., (முன்னாள்) அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலின் பவலைக் கூட வெள்ளைக்காரர்களின் சர்ச்சிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள்.

இஸ்லாத்திற்கு எதிராக எத்தனை கிறிஸ்தவ அமைப்புகள் உலகெங்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று கேட்கப்பட்டதற்கு, ஆயிரக்கணக்கான அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், இவற்றில் சூடானில் மட்டும் 500 அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.


கடந்த 1981 ல் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பரம ரகசியமானதொரு கூட்டத்திற்கு நான் அழைக்கப்பட்டேன், அந்தக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்கி, அதன் மூலம் முஸ்லிம்களிடையே கிறிஸ்தவத்தைப் பிரச்சாரம் செய்வதென்று அதில் கலந்து கொண்டவர்கள் தீர்மானித்தார்கள்.

மேற்கு நாடுகளில் மக்கள் தங்களது வருமானத்தில் 5 சதவீதத்தை கிறிஸ்தவப் பிரச்சாரத்திற்காகச் செலவழிக்கின்றார்கள்.

முஸ்லிம் நாடுகளில் முதலீடு செய்கின்ற மேற்கு நாடுகளின் நிறுவனங்கள், தங்களது முதலீட்டின் மீது வருகின்ற வருமானத்தை கிறிஸ்தவப் பிரச்சாரத்திற்காகச் செலவழிக்கின்றன.

மேலும் அவரிடம், நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நீங்கள் சொல்வது உங்களது உயிருக்கே ஆபத்தாகவல்லவா முடியும் போலிருக்கின்றது? என்று சொன்ன பொழுது, ஆம்..! நான் சொல்வது என்னுடைய உயிருக்கே ஆபத்தானது என்பதை நான் நன்கறிவேன், எப்பொழுது கிறிஸ்தவ அமைப்புகள் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்து கொண்டனவோ அப்பொழுதே என்னைத் தீர்த்துக் கட்ட முனைந்தன, ஆனால் என்னுடைய இனத்தவர்கள் எனக்கு அளித்திருக்கும் பாதுகாப்பின் காரணமாக அவர்களது முயற்சியில் அவர்கள் தோல்வியையே கண்டார்கள். இன்னும் நான் சாவினைக் கண்டு பயப்படவில்லை, இஸ்லாத்திற்காக என்னுடைய உயிரை அற்பணிக்கவும் நான் தயாராகி விட்டேன், இன்னும் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற சதிகளை அம்பலப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றேன்.

கிறிஸ்தவ அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகின்றன?

இதற்கு அவர் பதிலளிக்கையில், இவர்கள் சரியான ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடுதல்களின் அடிப்படையில் செயல்படுகின்றார்கள். குறிக்கோளின்றி அவர்கள் செயல்படுவதில்லை, ஆனால் அறிவு மற்றும் ஆராய்ச்சிகளின் மூலமாகத் தங்களது செயல்பாடுகளைத் திட்டமிடுகின்றார்கள். உதாரணமாக, தாங்கள் குறி வைத்திருக்கும் நாடு அல்லது பகுதியைப் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்டுகின்றார்கள், அதில் அவர்களது மதம், மக்கள் தொகை, அவர்கள் மதத்தைப் பின்பற்றுகின்றவர்களா அல்லது அல்லவா, பால் - ஆண், பெண், மக்களது தேவைகள் அதாவது பணம், உணவு, கல்வி, மருத்துவ சேவை மற்றும் இன்ன பிற தேவைகள் என்று ஒவ்வொன்றாகத் திட்டமிட்டுச் செயல்படுகின்றார்கள்.

என்னருமை முஸ்லிம் சகோதரர்களுக்கு :

அல்லாஹ் இஸ்லாம் என்ற அருட்கொடையை உங்களுக்கு பரிசாக வழங்கியுள்ளான், அதனை நீங்கள் மறுக்க முடியாது, ஏனென்றால் அதுவே நம்முடைய உண்மையான சொத்து, அதை நம்மிடம் இருந்து அழித்து விடத்தான் மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகள் நம்மைக் குறி வைத்து தாக்கிக் கொண்டிருக்கின்றன. உங்களது வாழ்வில் இஸ்லாத்தைக் கடைபிடிப்பீர்கள் என்று சொன்னால், நீங்கள் பலசாலியாவீர்கள், இன்னும் மேற்கத்தியர்கள் உங்களைக் கண்டு அச்சம் கொள்வார்கள். உங்களுக்கு எதிராகக் கிளப்பி விடப்படும் எந்தவிதமான குழப்பங்களையும் எதிர்கொள்வதற்கு அறிவியல் ரீதியான அணுகுமுறைக்கான அடித்தளமான கல்வி நம்மிடம் தேவையாக இருக்கின்றது. முஸ்லிம்கள் தங்களது வாழ்வில் 10 சதவீதமாவது இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளைத் தங்களது வாழ்வில் கடைபிடிப்பார்களென்றால், மேற்கத்தியர்களை விட வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள், இன்னும் அதுவே நம்முடைய அநேகமான பிரச்னைகளையும் தீர்த்து விடக் கூடியதாக இருக்குமென்று கருதுகின்றேன். இந்த ஒரு முன்னேற்றத்தை வெறும் 10 சதவீத இஸ்லாத்தை நம்முடைய வாழ்வில் அமுல்படுத்தியதன் விளைவாகப் பெற முடியுமென்றால், இஸ்லாமிய வாழ்வை முழுமையாக நாம் கடைபிடிப்போமென்றால், நம்முடைய நிலை எவ்வாறு இருக்கும்? என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று கூறினார்.

thanks to brother ali azarudhin
http://dailymuslimnews.blogspot.com/

Friday, December 11, 2009

ஏழைங்க என்னங்க பண்ணுறது.

என்னங்க இது அநியாயமா இருக்குது?ஊருக்கு போன் பண்ணினா காய்கறி மொதக்கொண்டு,மீன்,இறைச்சி,அரிசி,பருப்பு இப்பிடி எல்லா சாப்பாட்டுபொருளும் விலை  ஏறிபோச்சிடுச்சின்னு சொல்றாங்க.சாதாரணமா ஒரு அம்பது ரூவா கொண்டு போனா,மீனு,கொஞ்ச காய்கறி,இப்படி தாராளமா வாங்கி வந்த காலம் போய்
அந்த மாதிரி இப்போ வாங்குனா முன்னூறு ரூவா தேவைன்னு சொல்லுறாங்க.கேக்கும்போது மனசு கனக்குது.ஏழைங்க என்னங்க பண்ணுறது.



இது செயற்கையா விலைவாசி ஏத்தமா இல்லையான்னு தெரியல.எது எப்படியோ ஆனா கஷ்ட்டப்படுறது ஏழைங்கதான்.இது ஊர்ல இருக்குற நல்ல இளைஞர்கள்,அல்லது அமைப்புக்கள் ஒன்னு கூடி மொத்தமா காய்கறி,மீன்,ஆடு-மாடு வாங்கி நியாய விலையில வித்தாங்கனா,ஓரளவுக்குவிலைவாசியை கட்டுப்படுத்தலாம்.அதுமட்டுமில்லாம,அவங்களுக்கு அது ஒரு வியாபாரமாகவும்,சுய தொழிலாகவும் போகும் இல்லையாங்க.


பெருநா நேரத்துல ஒரு தடவ நம்ம ஊர்ல இதுபோல த மு மு க காரங்க,ஆடு வாங்கி,விலை குறைவா வித்தாங்கன்னு என்னோட மச்சான்(கணவர்) சொன்னார்.இது போல தொடர்ச்சியா செய்யலாமே.இப்படி செய்யும்போது,மத்த வியாபாரிங்கலும், விலை குறைக்க சான்சு இருக்கு,செஞ்சுதான் பாருங்களேன்,ஆண்களே!


நான் சொல்லுறது சரியா,தப்பா எதுவானாலும்,கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள். படிக்கிற மத்த மக்களுக்கு உதவியா இருக்கும்.

Friday, November 13, 2009

உயிரே போனாலும் இந்த மடத்தனத்தை செய்ய மாட்டோம் !

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள டியோபாண்ட் என்ற இடத்தில் நடந்த ஜம்இய்யத்துல் உலமாயே ஹிந்த் மாநாட்டில், “வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்திற்கு எதிரானது. எனவே இந்தப் பாடலை முஸ்லிம்கள் யாரும் பாட வேண்டாம்…” என்று தீர்மானம் இயற்றப்பட்டது.

இதைக் கேள்விப்பட்ட சங்பரிவாரும், பாஜகவினரும் வானத்திற்கும், பூமிக்கும் இடையே குதியாய் குதித்து “இந்தக் கருத்து அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது…” என்ற அளவுக்கு பேசியிருக்கிறார்கள்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் வந்தே மாதரம் பாட வேண்டும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்று அவர்களுக்குத் தெரியவில்லை. வந்தே மாதரத்தைப் பாடித்தான் ஆக வேண்டும் என்று சொல்பவர்கள் இந்திய ஒற்றுமைக்கு எதிரானவர்கள்; தேச நலனுக்கு குந்தகம் செய்பவர்கள் என்பதே உண்மை!

இந்திய அரசியலைப்புக் குழு 1950ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதியன்று “ஜனகனமன” என தொடங்கும் பாடலை தேசிய கீதமாக அறிவித்துள்ளது. இந்தப் பாடல் எல்லா அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிலையங்களிலும் கட்டாயம் பாடப் படும். இந்தப் பாடலை 52 வினாடிகளில் பாடி முடிக்க வேண்டும் என்று விதியே இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்புவரை சினிமா படம் முடிந்தவுடன் திரையரங்குகளில் இந்தப் பாடல் ஒலிக்கப்படும். அப்போது எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் வழக்கம் இருந்தது.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக கூட்டங்களில் மட்டும்தான் இந்த தேசிய கீதம் அந்த காலத்திலும் பாடப்படவில்லை. இப்போதும் பாடப்படுவதில்லை. அந்த அளவுக்கு அவர்கள் தேசிய கீதத்திற்கு இழுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இவர்களின் வளர்ச்சி ஏற்பட்ட பிறகு திரையரங்குகளில் ஒலிபரப்பப்படும் “ஜனகனமன” பாடலும் நிறுத்தப்பட்டு விட்டது. எனவே தேசிய கீதத்தை மதிக்காத தேச விரோதிகள்தான் வந்தே மாதரத்திற்கு பல்லக்கு தூக்குகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய சுதந்திரத்திற்கு முன்பாகவே வந்தே மாதரம் பாடுவதை தேசிய தலைவர்கள் விட்டு விட்டார்கள். 1911ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில்தான் “ஜனகனமன…” என்று தொடங்கும் தேசிய கீதம் முதன் முதலாக பாடப்பட்டது.

இந்நிலையில் 1923ம் ஆண்டு காக்கி நாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த விஷ்ணு திகம்பர் பலுங்கர் என்பவர் இந்தப் பாடலைப் பாட முயன்றார். அப்போது சபையில் இருந்த மௌலானா முஹம்மது, “இது இஸ்லாத்திற்கு எதிரான பாடல். அதனால் இதைப் பாட அனுமதிக்க முடியாது…” என தடுத்தார்.

முஹம்மது அந்தப் பாடலை பாடக்கூடாது என்று தடுத்ததற்கு நியாயமான காரணங்கள் இருந்தன.
1. காங்கிரஸ் கட்சி வந்தே மாதரம் பாடலுக்கு விடை கொடுத்து விட்டுத்தான் “ஜனகனமன…” பாடலை 1911ல் எடுத்துக் கொண்டது.

2. 1922ல் அல்லாமா முஹம்மது இக்பா ன் “சாரே ஜஹான்ஸே அச்சா… ஹிந்துஸ் தான் ஹமாரா…” என்ற பாடலை காங்கிரஸ் துணை தேசிய கீதமாக ஏற்றுக் கொண்டது. (ஆதாரம் : ஆர்.எஸ்.எஸ்.ஸின் தேசிய பொதுச் செயலாளர் ஹொ.வெ. சேஷாத்திரி எழுதிய தேசிய பிரிவினையின் சோக வரலாறு. பக்கம் 169).

இவ்வளவுக்கும் பிறகு வந்தே மாதரத்தை காங்கிரஸ் மாநாட்டில் பாட முயன்றது அதிகப்பிரசங்கத்தனம்தானே! அந்த அதிகப்பிரசங்கித்தனத்தைதான் சங்பரிவாரும், பாஜகவினரும் இன்றுவரை விடாமல் செய்து வருகிறார்கள்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் யாரையும், எதற்காகவும் வற்புறுத்த முடியாது. “ஜனகனமன…” என்று தொடங்கும் பாடல் தேசிய கீதம்தான். இந்த தேசிய கீதத்தை பாட வேண்டும் என்று கூட யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேசிய கீதம் பற்றி உச்சநீதிமன்றம் இப்படி தீர்ப்பளித்திருக்க, தேசிய கீதமல்லாத வந்தே மாதரத்தை முஸ்லிம்களும் பாட வேண்டும் என்று சங்பரிவார் வற்புறுத்துவது ஜனநாயக விரோத செயலாகும்.

தேசப்பற்று என்பது தேச மக்களை நேசிப்பதாகும். வந்தே மாதரம் பாடுவதில் அல்ல. இந்தியாவில் வாழும் சிறுபான்மை மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், பழங்குடியின மற்றும் தலித் மக்களை சங்பரிவார் வெறுத்து ஒதுக்கும். அவர்கள் வெறுப்பால்தான் இம்மக்களும் அவர்களை தூரத்திலேயே வைப்பர். இப்படி இந்தியாவில் வாழும் 90 சதவீத மக்களை வெறுத்து, அவர்களின் வெறுப்புக்கும் உள்ளாவது நிச்சயம் தேசப் பற்றுள்ளவர்களின் செயலாக இருக்க முடியாது.

இப்படி தேசப் பற்றில்லாமல் திரிபவர்கள்தான் வந்தே மாதரத்தை தலையில் தூக்கி சுமக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

வந்தே மாதரம் பாடல், மதம் சார்ந்த பாடல். அது தேசிய பாடலல்ல. இந்தியாவை சரஸ்வதியாக, துர்க்கையாக பாவித்து, அதனை வணங்குகிறேன் என்று ஆனந்த மடம் நாவல் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதியுள்ளார். இப்படி இந்து தெய்வங்களை வர்ணித்து, வணங்குகிறேன் என்று பொருள் வரும் பாடலை இறைவன் ஒருவனே என்று ஏற்று, நடைமுறைப்படுத்தும் முஸ்ம்களால் எப்படி வணங்க முடியும்?

தாய் நாட்டின் மீது பற்று வைக்கலாம். அதற்காக வெறும் மண்ணை வணங்க வேண்டும் என்று சொல்வது பகுத்தறிவுக்கு முரணானது அல்லவா? மண்ணில் சிறுநீர் கழிக்கிறோம். மலம் கழிக்கிறோம். குப்பை போன்ற அசுத்தங்களை எடுத்து வீசுகிறோம். அவை மண்ணோடு மண்ணாக மக்கி விடுகின்றன. இவை அனைத்தும் கலந்துள்ள மண்ணை வணங்குவது மடத்தனம் இல்லையா? இந்த மடத்தனத்தை செய்ய மாட்டோம் என்று முஸ்லிம்கள் சொன்னால் அவர்களின் மீது சங்பரிவார் பாய்ந்து பிராண்டுவது நியாயம்தானா?


ZAKIR HUSSAIN

Saturday, October 10, 2009

வேணாங்க இந்த பொழப்பு.

பல பதிவுகளுக்குள்ள செய்திகளை சகோதரர்கள் நம்மிடையே பகிர்ந்துகொண்டுள்ளனர்.அல்ஹம்துலில்லாஹ்.அனைவருக்கும் நன்றி.அவைகளுக்கு பதில் தரும் விதமாக,நானும் பின்னூட்டமிட்டால்,இன்னும் நீண்டுவிடும்.எனவே,அவைகளை வைத்து,தனி கட்டுரை போட்டால்,இன்னும் ஈசியாக இருக்கும் என எண்ணி,இங்கு பதிவிடுகிறேன்.

//குறிப்பாக கலிஃபோர்னியா மாநிலத்தில் வேலை செய்யும் 95% அதிரைவாசிகள் இது போன்ற கடைகளில்தான் ஊழியம் செய்கிறார்கள். சிலர் இதை நியாயப் படுத்தியும் வாதம் செய்கிறார்கள். நாம்தான் குடிக்கவில்லையே மதுவை விற்கதானே செய்கிறோம். இது கூடும் என்று சொந்த ஃபத்வா கொடுத்த்க் கொள்கிறார்கள்.அக் கடைகளில் மதுவகைகள், ஆபாச புத்தகம்/விடியோ சி.டி, போதை மருந்து ஏற்றும் உபகரணங்கள்,வட்டி,இன்னும் ஏராளமான ஹராமான பொருள்கள் தினசரி விற்கப்பபடுகிறது.முழு நேரமும் கல்லாவில் நின்று விற்பவர்களும் நமது ஊர் மக்களே!இக்கடைகளில் வேலை செய்வதால் மேற்கண்ட தவறான பழக்கங்களிலும் சிலர் அடிமைபடுத்தப்படுகிறார்கள். எச்சரிக்கை ஹலால் ஹராம் பேனுங்கள்//

சகோ உமர் பாருக்கின் கருத்து என் மொத்த கட்டுரையையும் பிரதிபலிப்பதாக உள்ளது.அந்த சகோதரரின் கருத்து,எல்லா மக்களையும் சென்ற சேரட்டும்.



//அஸ்ஸலாமு அழைக்கும், உங்கள் கருத்துகள் ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள், அதிராம்பட்டினம் கலிபோர்னியா வாசிகள் நிறையபேர் லிக்கர் ஷாப் யானும் சாராய கடைலதான் வேலை பார்க்கிறார்கள் அங்கு சாராயம் மட்டும் இல்ல லாட்டரி என்கிற சூது மற்றும் செக்கேசின்ங் என்கிற வட்டி மற்றும் ஆபாச புத்தகம்/விடியோ சி.டி போன்ற எல்லா ஹராமான பொருள்கலும் இருக்கு நிறையபேர் வேலைபார்க்கிரங்கள் இதில் சிலர் முதலாளியாகவும் இருக்காங்க, ரொம்ப கவலைபடுற செய்தியா இருக்கு. இதில் மார்க்கம் தெரியதாவர்கள் தான் இப்படி என்றால் வூரில் வாய்கிழிய தவ்கீத் பேசியவர்களும் கொள்கை கோமான்களாக இருந்தவர்களும் இதில் அடக்கம். என்ன செய்ய பணம் பத்தும் செய்யும் என்பார்கள் அது இதுதான் போல இருக்கு.//

அபூ சுமையாவின் இந்த ஆதங்கம் நமக்கு புரிகிறது.சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து,திருந்தினால்,அவரவர்க்கு நல்லது.

//Allah May accept our good deeds.

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (2:168)

நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும் அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான். (2:169)

We need to remind our brothers/sisters about Islamic principles.//

ஜகாங்கீரின் குரான் நினைவூட்டல் மிக அருமை.நன்றி

//சகோதரி பாத்திமா ஜொஹராவுக்கு, உங்கள் கருத்துக்கள் சிறப்பாக உள்ளது குறிப்பாக நம் மார்க்கத்தை ஒட்டி உள்ளது, ஆனால் உங்கள் எழுத்து முறை மற்றும் தலைப்பு மிக மோசமாக உள்ளது. ஒன்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் "எல்லா ஆண்களும் கேட்டவர்கள் இல்லை அதே சமயத்தில் எல்லா பெண்களும் நல்லவர்கள் இல்லை" இதை நீங்கள் கட்டுரை எழுதும்போது மனதில் கொள்ளவேண்டும். உங்களுடைய கட்டுரையை பலர் படித்து பயன்பெற வேண்டுமானால் நீங்கள் எழுத்து நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும்.//


//Yes, I accept Saudi Friends comment. Your message could be important to the public. But, you have to say in good manner, we are muslims and have to respect all. If your aim is writing against men, you should not take holy quran verses and Rasool (S.A.W.S) hadiths. If your blog should be read by all, and should be helpful to public, avoid such titles. Everyone who gave comments in your site, is happy because you are a islamic women who have come forward to create a blog. I am proud to see your site. It is my advise to my sister.

Noor.//

சவூதி பிரன்ட்,நூர் உங்கள் கருத்து மிக்க நன்று.இன்ஷா அல்லாஹ்,என் தலைப்பிலும்,வார்த்தைகளிலும் மிருதுவானத்தை கை கொள்கிறேன்.ஆண்கள் என் எதிரிகள் அல்ல.ஆனால். பொதுவாக ஆண்கள் தன கைகளால் சம்பாதித்து,அவர் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பில் உள்ளவர்,ஹலாலான சம்பாத்தியத்துக்கு பதில் ஹராமான சம்பாத்தியம் செய்து,மனைவின் கழுத்தில் ஹராமான நகைகளை அணிவித்து அழகு பார்த்தும்,ஹராமான சம்பாத்தியத்தில் சாப்பாடு போட்டும் வரும் நபர்கள்,இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை பேணாதவர்கள்,(நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஆற்றிய இறுதி உரையில் பெண்கள் பற்றிய கரிசனம் பற்றி இந்து,கிறிஸ்தவ சகோதர,சகோதரிகள் அறிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவர்கள்)இவர்கள் மேல் தான் கோபமே தவிர,உங்களைப்போன்ற நல்ல சகோதரர்கள் மேல் அல்ல.

Sunday, September 6, 2009

பேரு மாறிப்போச்சி? குமுறல்-1

ரேஷன் கார்டுக்கு பேரு எடுக்க வர்றான்,எலக்ஷன் அட்டைக்கு பேரு எடுக்க வர்றான்,அட எது எத்க்கோ பேரு குறிக்க வர்றான்,(கரண்டுக்கு,வரி வசூலிக்க இப்பிடி)யாரு,அட கவருமேண்டுல்லேர்ந்துதாங்க.கேட்டா-ஆபிசருங்கறான்.எல்லாத்தையும் குறிச்சிப்புட்டு, கார்டை,அட்டையை,அட எதோ ஒன்னை வாங்கிப் பார்த்தா,அட பாவிபயலுவளா,அழகான,உம்மாவும்,வாப்பாவும் வச்ச பேருக்கு பதிலா,இவன் ஒரு பேர எழுதிள்ள தொலச்சிர்றான்,நாமளும் அப்போ கண்டுகிடாம,பாஸ்போர்ட் எடுக்கும்போதும்,முக்கியமான வேலையாவும் தேவைப்படும்போது,மாட்டிக்கிட்டு அல்லாடறோம்.
இப்படி எத்தனை பேரு நம் ஊர்ல இருக்காக தெரியுமா?அட ஏன் கேக்குறியே?என் பேரும் அப்பிடி வந்ததுதாங்க!என்ன அப்பிடி பாக்குறியே, நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க.


பாத்திமா ஜொஹரா இது என் பேரு.ரேஷன் கார்டுல பாத்திமா ரோஜான்னு பதிஞ்சுட்டுப் போய்ட்டான்.அப்பொறம்,எலக்சன் கார்டு,இப்பிடி ஒவ்வொன்னா எல்லாத்துலயும் ரோஜான்னே மாறிப் போச்சே.வேற வழி இல்ல,மாத்தலாம்னு போனா,இதுக்கு லேட்டாகும்னு சொல்றான்,மாப்பிள்ளை எனக்கு அமெரிக்காவுக்கு விசாவுக்கு அப்பளை பண்ணி,கூப்பிட்டும் வந்தாச்சு.சரி வுடு ஜூட்,ரோஜான்னே இருக்கட்டும்னு விட்டாச்சி.இப்போ மாப்பிளை,பிள்ளைகளோட தற்போது டெக்சாசில் இருக்கோம்,ஆனா வீடு,வசிப்பிடம் எல்லாம் நியூ யார்க் முகவரிதான்.




அவரு சாப்ட்வேர், நான் தயாரிப்பு நிர்வாகத்துல இருக்கேன்.காதிர் முகைதீன் பள்ளியில படிச்சிட்டு,மெட்ராசுல மீதியும்,அமெரிக்காவுல பாதியுமா முடிச்சி,கை நிறைய சம்பளம்.சரி போதும் என்னப்பத்தி.

இந்த மாதிரி,பேரு மாறிப் போன விஷயம் உங்களுக்கும் இருந்தா பகிர்ந்துக்கோங்க.நம்மை வயித்து எரிச்சல கொட்டித் தீத்துக்கலாம்.

(இது குமுறல்,சாட்டையடி அல்ல)