Tuesday, April 27, 2010

யுனிகோட் உமர் தம்பி காக்காவுக்கு அங்கீகாரம் தருமா கலைஞர் அரசு?

தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஓரிருவரிகொண்ட மென்பொருள் நிரழிகளை இலட்சக்கணக்காண ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் பல மென்பொருள் நிரழிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டுக்கு வைத்தவர் திரு.உமர் தம்பி அவர்கள்.

விண்டோஸ் 98 பயனர்கள் தமிழிணைய தளங்களை எவ்வித சிரமமுமின்றி கணினியில் பார்வையிடவும், யூனிகோட் ஒருங்குறியில் தட்டச்சவும் உமர் தம்பி உருவாக்கிய 'தேனீ' வகை எழுத்துருக்கள் மற்றும் நிரழிகள் இன்றும் பல தமிழ்தளங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் எழுத்துறுக்கள் (Theenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அவற்றிற்குண்டான கிரடிட்டோ எதிர்பாராது சேவையாற்றியவர்.

கணினித் தமிழ் தளங்களான சங்கமம், தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி திரட்டியான தமிழ்மணம், எழில்நிலா மற்றும் அதிரை.காமிலும் பல்சுவை கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுதப்பழகுவோம் HTML, யுனிகோடும் இயங்கு எழுத்துருவும், யுனிகோடும் தமிழ் இணையமும், யுனிகோடின் பன்முகங்கள்-RSS ஓடை-ஒரு அறிமுகம்,தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு மற்றும் பல கணினித் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நான்காம் இணையத் தமிழுக்காகச்செய்த தமிழ்ச்சேவை மகத்தானது. இ-கலப்பை தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்களில் உமர்தம்பியும் ஒருவர்.

சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் (INFITT) சார்பில் நடந்த மாநாட்டில் 'உமர்தம்பி அரங்கு' என்று பெயரிட்டிருந்ததாக தமிழூற்று மாஹிர் தெரிவித்திருந்தார்.

தமிழா,அன்புடன்,அதிரை வெப் கம்யூனிடி மற்றும் பல குழுமங்களிலிலும் உமர்தம்பி அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.

மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் என்பது தமிழ் கணிமை பயனர்களின் அவா!

தமிழக முதல்வரும், உலகதமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுவினரும் உரிய நேரத்தில் இதைச் செய்வார்களா?
 
thanks to 
 http://peacetrain1.blogspot.com/
 

Thursday, April 22, 2010

அதோட சேர்ந்து - இதுவும் அழிந்தது


அது நடந்தது  1912ம் வருடம் .மிக மிக ஆடம்பரம்,டாம்பீகம் மற்றும் என்ன என்ன இத்யாதிகள் இருக்கோ, அது எல்லாத்தையும் சேர்த்து ஒரு மிக பிரம்பாண்டமான கப்பல் கட்டினான் லார்ட் பிர்ரி என்பவன்.

 நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்து,என்னென்ன தொழில் நுட்பம் உண்டோ அது எல்லாத்தையும் கொண்டு உருவாகிய அது தன் பயணத்தை (முதலும் கடைசியுமான) இங்கிலாந்திலிருந்து நியூயார்க் நகரம் நோக்கி தொடர ஆரம்பித்தது.

அதன் கொள்ளளவு சுமார் 2200 பயணிகள்.எல்லாரும் கூத்தும் கொண்டாட்டமும் குடியுமாக பயணம் தொடர்ந்து கொண்டிருக்க,
பயணமான நான்கே நாட்கள்,இரண்டாக பிளந்து - கடலில் மூழ்கியது.அதுதான் டைடானிக் கப்பல்.இதைப் பற்றி நாம் பல மீடியாக்கள் மூலம் அறிந்திருப்போம்.ஆனால் செய்தி அதுவல்ல.


அந்தக் கப்பல் தன் பயணத்தைத் தொடருமுன்,லார்ட் பிர்ரி பத்திரிக்கையாளர்களை கூட்டினான்.அந்த கப்பலின் பிரம்மாண்டம் பற்றி விவரித்தான்.ஒரு பத்திரிக்கையாளன் கேட்ட கேள்விக்கு,அவன் சொன்னான் ஒரு ஆணவமான-திமிரான பதில்.அதுதான் இங்கு செய்தி.
"இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.அந்த அளவுக்கு உறுதியாக,பல்வேறு தொழில் நுட்பம் கொண்டு கட்டியுள்ளோம்"என்றான்.

அந்தி திமிர்,ஆணவம்,இறுமாப்பு,நான்கே நாட்களில் கப்பலோடு புதையுண்டு போனது.

இது நேற்று நடந்த வரலாறு.
பல ஆண்டுகள் முன்பு   நடந்த வரலாறுகள் பல.
இப்ராஹீம் நபியை ஏற்காது,ஏக இறைவனை ஏற்காது ஆணவம் கொண்ட நம்ரூது,ஹாமான்,
மூஸா நபியை,ஏக இறைவனை மறுத்த பிறவுன்(பாரோ)இன்னும் பல அத்தாட்சிகள் நிறைந்து காணப்படுகின்றன குர் ஆனில்.எச்சரிக்கை கொள்வோம்,ஆணவம் தவிர்ப்போம்.  
************************************************

அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத்
அண்ணல் நபி அவர்கள் அருளினார்கள்: “எவனுடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்குமோ, அவன் சுவனத்தில் நுழைய முடியாது.” இதனைச் செவியுற்ற ஒரு மனிதர் கேட்டார்: “மனிதன் தன் ஆடைகளும் காலணியும் நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றானே? (இதுவும் தற்பெருமையா? இத்தகைய அழகுணர்ச்சி கொண்ட மனிதன் சுவனப்பேற்றை அடைய முடியாதா?” அண்ணலார் அவர்கள் நவின்றார்கள்: “(இல்லை, இது தற்பெருமையில்லை) அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையையே விரும்புகின்றான். தற்பெருமையின் பொருள், அல்லாஹ்விற்கு நாம் அடிபணிந்து வாழவேண்டிய கடமையை நிறைவேற்றாமலிருப்பதும், பிற மக்களை இழிவாகக் கருதுவதும் ஆகும்.” (முஸ்லிம்)


அறிவிப்பாளர் : ஹாரிஸ் பின் வஹ்ப் (ரலி)
அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: “பெருமையடிப்பவன் சுவனத்தில் நுழையமாட்டான். பொய்ப் பெருமை பேசித் திரிபவனும் சுவனத்தில் நுழையமாட்டான். ” (அபூதாவூத்)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்
அண்ணல் நபி
அவர்கள் கூறுகின்றார்கள்: “நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள், விரும்புவதை அணியுங்கள். ஆனால், ஒரு நிபந்தனை. உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக்கூடாது.” (புகாரி)

Monday, April 12, 2010

பண்படுத்தும் சிந்தனை

கட்டுரை போட்டு நாளாச்சி.நெறைய ப்ராஜக்ட் வேலை,பிளாக் பக்கம் திரும்பவே முடியல.சரி என்ன உருப்படியா எழுதலாம் என்று யோசிச்சாலும் ஒன்னும் ஓடல.அதுக்கு காரணமும் இருக்கு.சமீபத்துல நடந்த ஒரு விபத்து.மனச விட்டு அகலவே இல்ல.மரணம் எப்போவும்,எங்கேயும் வரும் தப்பிக்கவே முடியாது.அதுக்கு முன்னாடி நல்ல செயலகள் செய்யனும்,இல்லன்ன பெரிய பிரச்சனைதான்.

இப்போ ஒரு ஞாபகம் வருது.ஒரு பேட்டியில (முன்னாள் பெரியார்தாசன்)இப்போ பேராசிரியர் அப்துல்லா சொன்னார்,கடவுள் இல்லன்னா,பிரச்சனையே இல்ல,நெறைய பேருக்கு கடவுள் இல்லன்னு பிரச்சாரம் பண்ணியிருக்கேன்,அவங்களுக்கும் பிரச்சனையே இல்ல.ஆனா ஒருக்கால் கடவுள் என்று ஒருவன் இருந்துட்டா?அப்போ என் கதி என்னாகிறது?அந்த சிந்தனையே என்னை உழுக்கி எடுத்துவிட்டது.பிறகு எல்லா மத புத்தகங்களையும் ஆராய்ச்சி பண்ணி,எதிலேயும் முழு திருப்தி இல்லாம,குர்ஆனில் தேடினேன்.எனக்குள் இருந்த எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்தது.இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு ஆதாரம் கிடைத்தது.இஸ்லாத்தை ஏற்றேன்."

அந்த விபத்து,
ஏழு வருடம் கழித்து லண்டனில் இருந்து வரும் தன் மருமகனை அழைத்து செல்வதற்காக குடும்பத்தோடு சென்னை ஏர்போர்ட் சென்றது ஒரு குடும்பம்,மாமனார் கனடா சிட்டிசன்,அவரும்,அவர் மனைவி,அவர் மகள்,பேரன்கள் என எல்லாருமாக சென்றார்கள்.
மருமகனை பல வருடங்கள் கழித்து சந்தித்த ஆனந்தம் அவருக்கு,உள்ளம் குதூகலம் கண்டது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு.எல்லாரும் சென்னையிலிருந்து கிளம்பினார்கள்.அதிகாலை நேரம் - அவர்களின் கார் திருத்துறைப்பூண்டி அருகே வரும்போது,டிரைவர் சிறிது கண் அசர,எதிரே நின்றிருந்த லாரியின் மேல் கார் மோத,உடனடியாகவே மருமகன்,மாமனார் இருவரும் பலியாயினர்.மற்ற அனைவருக்கும் பலத்த காயம்,இது அந்த குடும்பத்துக்கும் மட்டுமல்ல - அந்த ஊரையே கதிகலங்க வைத்துவிட்டது.

எல்லாம் வல்ல இறைவன் அந்த இருவருக்கும் மிக உயர்ந்த பதவிகளை நல்குவானாக,அந்த குடும்பத்துக்கு பொறுமையையும்,உறுதியையும் தருவானாக்.நம்மை காப்பானாக.

எந்த ரூபத்திலும் மரணம் வருமுன்,நாம் உணர்ந்து கொள்வோம் ஏக இறைவனை-நம்பிக்கை கொள்வோம் அவனிடத்தில் என்ற செய்தியை சொல்லி,இன்ஷா அல்லாஹ் மீண்டும் சிந்திப்போம் மற்ற விஷயங்களுடன்.