Monday, April 12, 2010

பண்படுத்தும் சிந்தனை

கட்டுரை போட்டு நாளாச்சி.நெறைய ப்ராஜக்ட் வேலை,பிளாக் பக்கம் திரும்பவே முடியல.சரி என்ன உருப்படியா எழுதலாம் என்று யோசிச்சாலும் ஒன்னும் ஓடல.அதுக்கு காரணமும் இருக்கு.சமீபத்துல நடந்த ஒரு விபத்து.மனச விட்டு அகலவே இல்ல.மரணம் எப்போவும்,எங்கேயும் வரும் தப்பிக்கவே முடியாது.அதுக்கு முன்னாடி நல்ல செயலகள் செய்யனும்,இல்லன்ன பெரிய பிரச்சனைதான்.

இப்போ ஒரு ஞாபகம் வருது.ஒரு பேட்டியில (முன்னாள் பெரியார்தாசன்)இப்போ பேராசிரியர் அப்துல்லா சொன்னார்,கடவுள் இல்லன்னா,பிரச்சனையே இல்ல,நெறைய பேருக்கு கடவுள் இல்லன்னு பிரச்சாரம் பண்ணியிருக்கேன்,அவங்களுக்கும் பிரச்சனையே இல்ல.ஆனா ஒருக்கால் கடவுள் என்று ஒருவன் இருந்துட்டா?அப்போ என் கதி என்னாகிறது?அந்த சிந்தனையே என்னை உழுக்கி எடுத்துவிட்டது.பிறகு எல்லா மத புத்தகங்களையும் ஆராய்ச்சி பண்ணி,எதிலேயும் முழு திருப்தி இல்லாம,குர்ஆனில் தேடினேன்.எனக்குள் இருந்த எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்தது.இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு ஆதாரம் கிடைத்தது.இஸ்லாத்தை ஏற்றேன்."

அந்த விபத்து,
ஏழு வருடம் கழித்து லண்டனில் இருந்து வரும் தன் மருமகனை அழைத்து செல்வதற்காக குடும்பத்தோடு சென்னை ஏர்போர்ட் சென்றது ஒரு குடும்பம்,மாமனார் கனடா சிட்டிசன்,அவரும்,அவர் மனைவி,அவர் மகள்,பேரன்கள் என எல்லாருமாக சென்றார்கள்.
மருமகனை பல வருடங்கள் கழித்து சந்தித்த ஆனந்தம் அவருக்கு,உள்ளம் குதூகலம் கண்டது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு.எல்லாரும் சென்னையிலிருந்து கிளம்பினார்கள்.அதிகாலை நேரம் - அவர்களின் கார் திருத்துறைப்பூண்டி அருகே வரும்போது,டிரைவர் சிறிது கண் அசர,எதிரே நின்றிருந்த லாரியின் மேல் கார் மோத,உடனடியாகவே மருமகன்,மாமனார் இருவரும் பலியாயினர்.மற்ற அனைவருக்கும் பலத்த காயம்,இது அந்த குடும்பத்துக்கும் மட்டுமல்ல - அந்த ஊரையே கதிகலங்க வைத்துவிட்டது.

எல்லாம் வல்ல இறைவன் அந்த இருவருக்கும் மிக உயர்ந்த பதவிகளை நல்குவானாக,அந்த குடும்பத்துக்கு பொறுமையையும்,உறுதியையும் தருவானாக்.நம்மை காப்பானாக.

எந்த ரூபத்திலும் மரணம் வருமுன்,நாம் உணர்ந்து கொள்வோம் ஏக இறைவனை-நம்பிக்கை கொள்வோம் அவனிடத்தில் என்ற செய்தியை சொல்லி,இன்ஷா அல்லாஹ் மீண்டும் சிந்திப்போம் மற்ற விஷயங்களுடன்.

7 comments:

அன்புத்தோழன் said...

நல்ல சிந்தனை... அதென்னவோ தெரியல... எப்போ பயணம் கிளம்பினாலும் இதுவே நம் கடைசி நாளாக இருக்குமோ என்கிற அச்சமும், இப்போது நம் வாழ்கை முடிவுக்கு வரும் பச்சத்தில் நமது நிலைமை என்ன என்பது பற்றிய எண்ணங்களும் மேலோங்கி நிற்க... சேர வேண்டிய இடத்தை அடையும் வரை உலகில் ஒட்டாத ஒரு உணர்வு... உதடு முனுமுனுக்கும் பிரார்த்தனைகளே பயன்களை பெரும்பாலும் ஆக்கிரமிக்கிறது ....

ஹுஸைனம்மா said...

இன்னா லில்லாஹி... வருத்தமான விஷயம். இறைவன் அவர்களின் குடும்பத்தினருக்குப் பொறுமையையும், ஆறுதலையும் தரவேண்டும். இறைவன் காக்கட்டும் எல்லாரையும்.

அன்புடன் மலிக்கா said...

அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன். அவன் யாதொரு சிறுதீங்கும் செய்திடமாட்டான்
நிச்சியமாக..

மரணித்தவர்களுக்கு நற்பதவியை வழங்குவானாக. திருத்துறைபூண்டியா. எங்க ஊர்பக்கமாச்சே.

பாத்திமா நீங்க அதிரைதானே!
முடிந்தால் மெயில் அனுப்பவும்..

NIZAMUDEEN said...

இறை சிந்தனையை மீண்டும் நினைவுறுத்தும் கட்டுரை!

ஜெய்லானி said...

இன்னா லில்லாஹி..எல்லாம் வல்ல இறைவன் அந்த இருவருக்கும் மிக உயர்ந்த பதவிகளை நல்குவானாக,அந்த குடும்பத்துக்கு பொறுமையையும், உறுதியையும் தருவானாக. நம்மையும் காப்பானாக.
ஆமீன்

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

தாஜீதீன் said...

மரணம் பயம் ஒவ்வொரு வினாடியும் நம் மனதில் இருக்கும் போது தவறு செய்யும் எண்ணம் நம்மைவிட்டு தூரச் சென்று விடும். தொடர்ந்து எழுதுங்கள்.

யூனிகோட் உமர்தம்பி அவர்கள் பற்றிய செய்தி ஒரு கோரிக்கையுடன் என் வலைப்பூவில் பதிவாகி உள்ளது, சகோதரர் அதிரைகாரன் எழுதியது சென்று பாருங்கள்.
http://thaj77deen.blogspot.com/2010/04/blog-post_14.html