''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 2911
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலீ) நூல்: புகாரீ 5200
''இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபி அவரகள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மதி 1082
''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: புகாரி 56
''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீ) நூல்: முஸ்லிம் 2915
12 comments:
நல்ல ஹதிஸ்களை கொடுத்துள்ளீர்கள்!!
அண்ணல் நபியின் அருமையா அமுத மொழி.
பாத்திமா உங்களுக்கு ஒரு மலர் விருது வந்து பெற்று கொள்ளுங்களே.
முதல் பின்னூட்டம் என்னுடையது தானோ... ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க.... மாஷா அல்லாஹ்... இன்னும் மூணு மாசத்துல இந்த உன்னதமான உறவு வரும்... அப்போ நீங்க சொன்ன இவை நிச்சயம் பயனலிக்கும்னு நம்புகிறேன்... நன்றிகளுடன்....
அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எவ்வளவு அழகான முறையில் ஒவ்வொன்றையும் சொல்லியுள்ளார்கள் என எண்ணும்போது ஆனந்தம் ஏற்படுகிறது.
விருதுக்கு நன்றி அக்கா,உங்க பிளாக் எனக்கு ரொம்ப பிடிக்கும்.இன்ஷா அல்லாஹ் துபாய் வந்தால் உங்களைப் பார்க்க ஆசை.
ஆஹா மிக அருமையான கட்டுரை. எனது
பாராட்டுக்கள்
நல்ல ஹதீஸ்கள். மாஷா அல்லாஹ்... தொடரட்டும்.
சகோதரி,உங்கள் வேண்டுகோளை ஏற்று எங்கள் பிளாக்கில் நீங்கள் எழுதுவதற்கு அழைப்பை அனுப்பி விட்டோம்.கட்டுரைகளையும்,கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம்,நன்றி
பாத்திமா மிக தெளிவா விளக்கியிருக்கீங்க
மாஷா அல்லாஹ்.
நீரோடையில்: நாட்புறப்பாட்டும்.[விவசாயாத்தை பற்றி]
இனிய பாதையில்:
இல்லறமே நல்லறம். எழுதியிருக்கேன் பாருங்க..
நல்ல ஹதீஸ் தோழியே
இவன்
தமிழ்குடும்பம்.காம்
தங்கள் அன்புக்கும்,பகிர்வுக்கும் மிக்க நன்றி அக்கா
அன்புள்ள சகோதரி பாத்திமா ஜொஹ்ரா...
அஸ்ஸலாமு அழைக்கும்
தொடருங்கள் உங்கள் அழகிய (நல்லதை ஏவி தீமையை தடுகள்) பனி....
Post a Comment