Sunday, March 14, 2010

பேராசிரியர் டாக்டர் பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவினார்.

கருத்தம்மா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பெரியார்தாசன். உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். கடவுள் மறுப்புக் கொள்கையில் உறுதியாகயிருந்தவர். தனது பெயரையே நாஸ்திக சிந்தனையாளரான தந்தை பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத் தரும் தாசன் என்ற வார்த்தையை இணைத்துக் கொண்டவர்.

தமிழகத்தில் பிரபலமான பெரியார்தாசன் பல்வேறு மேடைகளில் சமூக சிந்தனை கருத்துக்களை பரப்பியவர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இஸ்லாத்தை பற்றி பலகாலமாக ஆய்வுச்செய்த பெரியார்தாசன் கடந்த வியாழக்கிழமை(மார்ச் 11) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய தஃவா மையத்தில் வைத்து இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

தனது பெயரை அப்துல்லாஹ்(அல்லாஹ்வுக்கு அடிமை) என்று மாற்றிக் கொண்டார். இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டதைக் குறித்து டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) கூறியதாவது: "இவ்வுலகில் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இறைவனிடமிருந்து நேரடியாக இறக்கியருளப்பட்ட வேதத்தைக் கொண்டுள்ளது. நான் பல்வேறு மதங்களின் வேதங்களையும் ஒப்பீட்டு ஆய்வுச் செய்தேன். அதில் இஸ்லாத்தைத் தவிர மற்ற அனைத்து நூல்களுமே இறைவனிடமிருந்து நேரடியாக அருளப்பட்டது அல்ல. குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து எந்த வடிவில் முஹம்மது நபிக்கு அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதோ அதே வடிவில் இன்றும் உள்ளது. நான் நாத்திகக் கொள்கையின் மூலமாக இந்தியாவில் அனைவருக்கும் நன்றாக அறிமுகமானவன். இஸ்லாம்தான் இவ்வுலகிலும், மறுவுலகிலும் மனித இனத்திற்கு பொருத்தமான மார்க்கம் என்பதை புரிந்துக்கொண்டேன்." என்றார்.

டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) இன்று(மார்ச் 13) உம்ரா செய்வதற்காக புனிதஸ்தலமான மக்காவிற்கு செல்கிறார். பின்னர் மதீனாவும் செல்வார். அல்லாஹ் அவருடைய நல்லச் செயல்களை பொருந்திக் கொண்டு கடந்த கால பாவங்களை மன்னித்து நேரான வழியில் செலுத்துவானாக! என பிரார்த்திப்போம்.

நன்றி அரப் நியூஸ், மார்ச் 12, 2010

10 comments:

Adiraicool said...

இஸ்லாம்தான் இவ்வுலகிலும், மறுவுலகிலும் மனித இனத்திற்கு பொருத்தமான மார்க்கம் என்பதை புரிந்துக்கொண்டேன்." என்றார்.

அல்ஹம்துலில்லாஹ் கேட்கவே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இதைப் போல் பெரும்பாலான மக்கள் இஸ்லாத்தை புரிந்து கொள்வதற்கு அல்லாஹ் கிருபைச்செய்வானாக.

NIZAMUDEEN said...

டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள்
நமது இஸ்லாம் மார்க்கத்தின் மேன்மையை
உணர்ந்து அல்லாஹ்வின் நாட்டப்படியே
அவனது மார்க்கத்தில் ஐக்கியமானது
அறிந்து மிக்க மகிழ்ச்சி. அல்ஹம்துலில்லாஹ்.

ஹுஸைனம்மா said...

பெரியார்தாசன், இறைதாசன் ஆனது இறையருள்.

இன்ஷா அல்லாஹ் இது மற்றவர்களின் கண்களையும் திறக்கட்டும்.

ஷங்கர் தூத்துக்குடி said...

நல்ல செய்தி,என் போன்றவர்களுக்கு ஊக்கமாக உள்ளது,நானும் இஸ்லாம் பற்றி படித்து வருகின்றேன்,உண்மையை உணர்ந்து கொண்டேன்.இஸ்லாம் மட்டும் உண்மை மார்க்கம் என உணர்ந்தேன்,இஸ்லாமை நானும் ஏற்றுக்கொண்டேன்.எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

தமிழ் தோழி said...

allah akbar

thenammailakshmanan said...

நல்ல பகிர்வு ஃபாத்திமா ஜொஹ்ரா .அவருக்கு வாழ்த்துக்கள் ..இறை நெறியில் நம்பிக்கையுடன் நீடித்து வாழட்டும் ..

'ஒருவனின்' அடிமை said...

சகோதரர்கள் முன்னாள் பெரியார்தாசன் (இன்று அப்துல்லாஹ்)மற்றும் ஷங்கர் பாராட்டுக்குரியவர்கள்.உண்மையை உணர்ந்து விட்டார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.மற்றவர்கள் எப்போது? இன்ஷா அல்லாஹ்.

Jaleela said...

ரொம்ப நல்ல மகிழ்சியான பகிர்வு.

அல்ஹம்து லில்லாஹ்.

ஜெய்லானி said...

அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ் மிகப் பெரியவன்.

ஏம்.ஷமீனா said...

Assalamu Aleykum wa rahmatullahi wa barakatuh,
dear sister பாத்திமா ஜொஹ்ரா,
Jazakkallahu kheir for sharing this with us, May ALLAH(swt) reward you for your good deeds...Aamin...
Alhamdullilah he takes the straight way, the only one, the true one ...

We can watch his interview about his conversion in youtube, but unfortunately it's in a bad quality....Your sister,
M.Shameena