Sunday, February 21, 2010

எங்க ஊர்க்காரரும்,அமிகோவும்!

அன்னைக்கி ஒரு நாள்,சுமாரா ஒரு மாசம் முன்னாடி எங்க ஊருக்காரர் ஒருத்தர் சாக்ரமண்டோவிலிருந்து-ஏர்போர்டுக்கு பிளைட் பிடிச்சி (கலிபோர்னியா தலைநகர்)நியூயார்க் போறதுக்காக டாக்சி ஏற்பாடு பண்ணிஇருக்கார். (பேரு வேணாமே)வந்தது மெக்சிகோ நாட்டுக்காரன்.இவரும் டாக்ஸியில உட்காந்தாச்சி,அதும் கிளம்பி ஏர்போர்ட் நோக்கி செல்ல ஆரம்பித்தது.

கொஞ்ச நேரம் கழிச்சி,அந்த மெக்சிகோ டாக்சிக்காரன், நம்ம ஆளை ஒரு கேஸ் ஸ்டேஷன்(பெட்ரோல் பங்க்)கூட்டிப் போய்,கேஸ் போடணும் என்று சொல்லி,அவனும் கீழ இறங்கி-கடைக்குள்ள போய் கேஸ் போட    பணம் தா என்று கேட்க,இவரும் கீழ இறங்கி அவனோட கூட போய் பணம் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் 'இறங்கி நடந்து வர 'அப்பொழுது அது நடந்தது,இவர் டாக்சியை விட்டு இறங்கினதும்-அந்த மெக்சிகோ டாக்சிக்காரன் விருட்டென்று  டாக்ஸியில ஏறி பறந்துவிட,நம்ம ஆளு,"அமிகோ-அமிகோ"என கத்த(ஸ்பானிஷ் மொழியில் அமிகோ என்றால் நண்பா என பொருள்)அவன் போயே,போய்விட்டான்.

பாவம் நம்ம ஆளுவுடைய,பாஸ்போர்ட்,கிரீன் கார்ட்,பணம்,பொருட்கள் எல்லாம் போய்விட்டன.என்ன செய்வது?

இது போன்ற தகிடு தத்ததங்கள்  நம்ம ஊர்லயும்    இருக்கு,அமெரிக்காவிலேயும் இருக்கு.எல்லாரும் விழிப்புடன் இருக்கவே இந்த செய்தி.


(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக. 

அல்குர்ஆன் 2-186

மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) நூல்: திர்மிதி




10 comments:

ராமலக்ஷ்மி said...

எல்லா ஊரிலும் நடக்கிறது. தேவையான பகிர்வு.

ஜெய்லானி said...

நாம என்னதான் உஷாராக இருந்தாலும் சிலது நம்மையும் மீறி நடந்து விடுகிறதே!. என்னதான் செய்யிறது.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும் சகோதரி ,visit www.adiraipost.blogspot.com then read சகோதரி கண்மணி ஆமினா அசில்மி.இந்த கட்டுரையை உங்கள் தளத்திலும் வெளியிடுவதன் மூலம் பல சகோதர,சகோதரிகளின் பார்வைக்கு வைப்பதன் மூலம் ஒரு நல்ல பெண்மணியின் உண்மை வாழ்வியலை நினைவூட்டலாமே?

Abu Khadijah said...

நல்ல பகிர்வு சகோதரி,

சில விஷயங்கள் நம்மையரியாமல் நடந்து விடும்போது, அமிக்கோன்னு கத்தினாலும், அடெய் சண்டாலா என்று கத்தினாலும் விளங்காது அந்த திருடர்களுக்கு

Thenammai Lakshmanan said...

சரியா சொன்னீங்க பாத்திமா ஜொஹ்ரா ஏமாத்துறவங்க எல்லா ஊர்லயும் தான் இருக்காங்க நாமதான் எச்சரிக்கையா இருக்கணும் நல்ல பகிர்வும்மா நன்றி நீங்க போடுற இறை வசனங்களையும் படித்து வர்றான் மா பகிர்வுக்கு நன்றி

அன்புடன் மலிக்கா said...

திருடன் எல்லாநாட்டிலும் திருடந்தான்
கவனம் கவனம் நம்மிடமே!

நல்லதொரு பதிவு பாத்திமா

enrenrum16 said...

கேட்கும்போதே பக்குன்னு இருக்கு பாத்திமா...பறிகொடுத்த அந்த மனிதரை நினைத்து பரிதாபமாக இருக்கிறது....அவர் உஷாராக இருக்க நினைத்து வண்டியை விட்டு இறங்கினால்...அவன் அதையும் எதிர்பார்த்து ஏமாற்றியிருக்கிறான்... அந்த பணம் அவனிடம் கண்டிப்பாக நிலைக்காது.

Jaleela Kamal said...

நல்ல பகிர்வு ,,

இப்ப தான் துபாயில் திருட்டு பதிவு போட்டேன், அங்கேயுமா?

எல்லா இடத்தில் உஷராக இருக்கனும்.

குர் ஆன் வசனத்துடன் அருமையாக சொல்லி எடுத்து சொல்லி இருக்கீங்க

இப்னு அப்துல் ரஜாக் said...

நல்லதொரு பதிவு

Thenammai Lakshmanan said...

ஃபாத்திமா ஜொஹ்ரா உங்களை ஒரு தொடர் இடுகை எழுத அழைத்து இருக்கேன் வந்து என்னோட பதிவைப்பாருங்க