அட நீ இந்த வூட்டு புள்ளயா? உன்னோட தடிச்ச உதட்ட வச்சே கண்டு புடிச்சிட்டேன்.சரியா?
அட நீ அந்த அவோ வூட்டுப் பையன்தானே,உன்னோட கண்ணை வச்சி தெரிஞ்சி போச்சு.
இப்பிடி சிலபேரோட முக சாடை,மூக்கு அளவு,முரசு,உதடு,முடி,தொந்தி,உயரம்-குள்ளம்,நடை,பேச்சு,கலர் இதையெல்லாம் வச்சி,ஒவ்வொரு குடும்பத்தையும் நாம அடையாளம் காண முடியும்.
இதெல்லாம்,இந்த வித்தியாசமெல்லாம் நாம் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளவே இறைவன் படைத்துள்ளான்.ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனிப்பட்ட சில குணாதியசங்கள் உண்டு.இந்த மாதிரியான சில வித்தியாசங்களை வைத்து,ஒருவர் மற்றவரை பழிக்கவோ,அல்லது இது மூலம் உயர்த்தி-தாழ்த்தி நடப்பது அறிவீனம்.
ஆனால் இப்படி மக்களில் பலர் சில குடும்பங்களில் உள்ள குணாதியசங்களை வைத்தோ,அல்லது அவர்களின் தனிப்பட்ட உடல் வாகை வைத்தோ சாடி பேசுவதைக் காண்கிறோம்.அது மிக தவறு.
உதாரணமாக,குள்ளமான ஒருவரை பார்த்து.ஜப்பான்காரன் வர்றான் பாரு என்றோ வெள்ளை நிறத்தில் ஒருவனைக் கண்டால் "வெள்ளப்பாச்ச"என்பது கருப்பாய் இருந்தால் "அடுப்புக்கரி"என்பதும் இப்படி நிறைய சொல்லலாம்.இதை நாம் உடனே கை விடவேண்டிய தீய பண்பாகும்.அல்லாஹ் இதை விரும்புவதில்லை.
இறைவன் முன் அனைவரும் சமம்.இறை அச்சம் உள்ளவர் யாரோ,அவர் ஏழையாக இருந்தாலும்,அழகற்றவராக இருந்தாலும்,கருப்பராக இருந்தாலும் அவரே மனிதர்களில் உயர்ந்தவர்,சிறந்தவர்.
இதுதான் இஸ்லாம் காட்டும் வழி.
மனிதர்களே!
உங்களை ஓர்ஆண் ஒருபெண்ணிலிருந்தே
படைத்தோம்.
நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதர்ககாக
உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்
உங்களில்[இறைவனை] அதிகம்அஞ்சுவோரே
இறைவனிடன் சிறந்தவர்.
இறைவன் அறிந்தவன்;நன்கறிபவன்.
திருக்குர்ஆன்
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
இறைவனின் தூதர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
9 comments:
அழகாக சொல்லி,வேத வரிகளையும்,ஹதீஸையும் எடுத்து இயம்பி இருக்கின்றீர்கள் பாத்திமா ஜொஹ்ரா.அல்ஹம்து லில்லாஹ்!
// இறைவன் முன் அனைவரும் சமம்.இறை அச்சம் உள்ளவர் யாரோ,அவர் ஏழையாக இருந்தாலும்,அழகற்றவராக இருந்தாலும்,கருப்பராக இருந்தாலும் அவரே மனிதர்களில் உயர்ந்தவர்,சிறந்தவர்.//
இறைவன் முன் அனைவரும் சமம்.. ஏற்றத்தாழ்வுகள் அவருக்கு இல்லை.. என்பதை ரொம்ப அழகாக சொல்லிவிட்டீர்கள். அற்புதமான வரிகள் இவை. நன்றி
அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.
அருமையா இருக்கு பாத்திமா இறையச்சம் எல்லோருக்கும் வேண்டும் மா
நல்லா சொன்னீங்க.. வாழ்த்துக்கள்...
நல்லா இருக்கு ராத்தா
உண்மை; எல்லாருக்கும் தெரியும், ஆனாலும் சிலர் செய்கிறார்கள். இக்கால இளைஞர்கள் “வெள்ளைப் பொண்ணு”தான் வேணும்னு சொல்வதைப்போல்!!
ஆம் பாத்திமா, நீங்கள் சொல்லுவது முற்றிலும் உன்மை, நமதூரில் பட்டப்பெயர் வச்சு கூப்பிடுரவங்கள பார்த்த எரிச்சல் வரும், ஏனெனில் கூப்பிடுரவங்க நாம் என்ன நிலமையில இருக்கிறோம்னு கூட யோசிக்கிறதில்லை.
அஸ்ஸலாமு அலைக்கும்
மிக அருமையான ஆக்கங்கள் மிக்க மகிழ்ச்சி
Post a Comment