Showing posts with label திரு குர்ஆன். Show all posts
Showing posts with label திரு குர்ஆன். Show all posts

Wednesday, January 13, 2010

படிப்போமா,படிப்பினை பெறுவோமா? படித்தேன் பகிர்ந்தேன்

பெயர் : அசோக் கோலன் யாங்

நாடு : சூடான்

பதவி : கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க சர்ச் கவுன்சிலின் பொதுச் செயலாளர்

இவர் கடந்த 2002 ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். இவர் மதங்களைப் பற்றிய மதிப்பீடுகள் குறித்து ஒப்பு நோக்கி ஆய்வு செய்த பொழுது, இஸ்லாமே உண்மையான மார்க்கம் என்பதைப் பற்றிய தெளிவுக்கு வந்தார். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

இவரை குவைத்திலிருந்து வெளிவரும் அல் முஜ்தமா என்ற அரபுப் பத்திரிக்கை பேட்டி கண்டது. அந்தப் பேட்டியின் தமிழாக்கமே இது.

நான் ஏன் முஸ்லிமானேன்..! ஏனென்றால்,

திருமறைக் குர்ஆனை எந்த தனிப்பட்ட மனிதரும் எழுதவில்லை, அதேநேரத்தில் பைபிளுக்கு பல்வேறு நூலாசிரியர்கள் இருக்கின்றார்கள்.


திருமறைக் குர்ஆன் அல்லாஹ்வின் சத்திய வாக்கியங்களாகும்.

இஸ்லாம் அழைக்கின்ற ஓரிறைத் தத்துவத்தின் பாலே அனைத்து நபிமார்களும் மக்களை அழைத்தார்கள்.




இஸ்லாமே இறுதி மார்க்கம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாகவே சுட்டிக் காட்டி இருக்கின்றார்கள்.



இவரது முயற்சியின் காரணமாக 1,50,000 பேர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள், இவர்களில் 2500 பேர் தேவாலயங்களின் தலைவர்களாவார்கள்.

கிறிஸ்தவ அமைப்புகள் முஸ்லிம்களிடையே கிறிஸ்துவத்தைப் பரப்புவதற்கு பல்விதமான தந்திரங்களைக் கையாளுகின்றன. இது பற்றி அவர் மேலும் கூறியதாவது :

மனித உதவி மற்றும் தொண்டு நிறுவனங்கள் என்ற போர்வையின் கீழ் செயல்படுகின்றன

உதவிகளை வழங்குவதன் மூலம் தங்களது அரசாங்கத்தின் வழியாக அரபுக்களின் மீதும், இன்னும் முஸ்லிம்களின் மீதும் பலப்பிரயோகத்தைத் திணித்தல் மூலமாக

இன்னும், தனிநபர்களை இஸ்லாத்தின் பால் அழைப்பதற்கு பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன, அவை : பணம், பதவி, பெண் ஆகியவற்றின் மூலமாக.

மேலும், அவர் கூறும் பொழுது, இஸ்லாத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் என்னவென்றால், ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள் கிடையாது, இன்னும் சாதி அமைப்புகளும் கிடையாது, முஸ்லிம்கள் அனைவரும் சமமே. ஆனால், கிறிஸ்துவத்தில் கறுப்பு நிற நீக்ரோ கிறிஸ்தவர்கள் வெள்ளைக்கார கிறிஸ்தவர்களின் சர்சுக்குச் சென்று வழிபாடு நடத்த இயலாது, ஏன்.., (முன்னாள்) அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலின் பவலைக் கூட வெள்ளைக்காரர்களின் சர்ச்சிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள்.

இஸ்லாத்திற்கு எதிராக எத்தனை கிறிஸ்தவ அமைப்புகள் உலகெங்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று கேட்கப்பட்டதற்கு, ஆயிரக்கணக்கான அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், இவற்றில் சூடானில் மட்டும் 500 அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.


கடந்த 1981 ல் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பரம ரகசியமானதொரு கூட்டத்திற்கு நான் அழைக்கப்பட்டேன், அந்தக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்கி, அதன் மூலம் முஸ்லிம்களிடையே கிறிஸ்தவத்தைப் பிரச்சாரம் செய்வதென்று அதில் கலந்து கொண்டவர்கள் தீர்மானித்தார்கள்.

மேற்கு நாடுகளில் மக்கள் தங்களது வருமானத்தில் 5 சதவீதத்தை கிறிஸ்தவப் பிரச்சாரத்திற்காகச் செலவழிக்கின்றார்கள்.

முஸ்லிம் நாடுகளில் முதலீடு செய்கின்ற மேற்கு நாடுகளின் நிறுவனங்கள், தங்களது முதலீட்டின் மீது வருகின்ற வருமானத்தை கிறிஸ்தவப் பிரச்சாரத்திற்காகச் செலவழிக்கின்றன.

மேலும் அவரிடம், நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நீங்கள் சொல்வது உங்களது உயிருக்கே ஆபத்தாகவல்லவா முடியும் போலிருக்கின்றது? என்று சொன்ன பொழுது, ஆம்..! நான் சொல்வது என்னுடைய உயிருக்கே ஆபத்தானது என்பதை நான் நன்கறிவேன், எப்பொழுது கிறிஸ்தவ அமைப்புகள் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்து கொண்டனவோ அப்பொழுதே என்னைத் தீர்த்துக் கட்ட முனைந்தன, ஆனால் என்னுடைய இனத்தவர்கள் எனக்கு அளித்திருக்கும் பாதுகாப்பின் காரணமாக அவர்களது முயற்சியில் அவர்கள் தோல்வியையே கண்டார்கள். இன்னும் நான் சாவினைக் கண்டு பயப்படவில்லை, இஸ்லாத்திற்காக என்னுடைய உயிரை அற்பணிக்கவும் நான் தயாராகி விட்டேன், இன்னும் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற சதிகளை அம்பலப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றேன்.

கிறிஸ்தவ அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகின்றன?

இதற்கு அவர் பதிலளிக்கையில், இவர்கள் சரியான ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடுதல்களின் அடிப்படையில் செயல்படுகின்றார்கள். குறிக்கோளின்றி அவர்கள் செயல்படுவதில்லை, ஆனால் அறிவு மற்றும் ஆராய்ச்சிகளின் மூலமாகத் தங்களது செயல்பாடுகளைத் திட்டமிடுகின்றார்கள். உதாரணமாக, தாங்கள் குறி வைத்திருக்கும் நாடு அல்லது பகுதியைப் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்டுகின்றார்கள், அதில் அவர்களது மதம், மக்கள் தொகை, அவர்கள் மதத்தைப் பின்பற்றுகின்றவர்களா அல்லது அல்லவா, பால் - ஆண், பெண், மக்களது தேவைகள் அதாவது பணம், உணவு, கல்வி, மருத்துவ சேவை மற்றும் இன்ன பிற தேவைகள் என்று ஒவ்வொன்றாகத் திட்டமிட்டுச் செயல்படுகின்றார்கள்.

என்னருமை முஸ்லிம் சகோதரர்களுக்கு :

அல்லாஹ் இஸ்லாம் என்ற அருட்கொடையை உங்களுக்கு பரிசாக வழங்கியுள்ளான், அதனை நீங்கள் மறுக்க முடியாது, ஏனென்றால் அதுவே நம்முடைய உண்மையான சொத்து, அதை நம்மிடம் இருந்து அழித்து விடத்தான் மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகள் நம்மைக் குறி வைத்து தாக்கிக் கொண்டிருக்கின்றன. உங்களது வாழ்வில் இஸ்லாத்தைக் கடைபிடிப்பீர்கள் என்று சொன்னால், நீங்கள் பலசாலியாவீர்கள், இன்னும் மேற்கத்தியர்கள் உங்களைக் கண்டு அச்சம் கொள்வார்கள். உங்களுக்கு எதிராகக் கிளப்பி விடப்படும் எந்தவிதமான குழப்பங்களையும் எதிர்கொள்வதற்கு அறிவியல் ரீதியான அணுகுமுறைக்கான அடித்தளமான கல்வி நம்மிடம் தேவையாக இருக்கின்றது. முஸ்லிம்கள் தங்களது வாழ்வில் 10 சதவீதமாவது இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளைத் தங்களது வாழ்வில் கடைபிடிப்பார்களென்றால், மேற்கத்தியர்களை விட வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள், இன்னும் அதுவே நம்முடைய அநேகமான பிரச்னைகளையும் தீர்த்து விடக் கூடியதாக இருக்குமென்று கருதுகின்றேன். இந்த ஒரு முன்னேற்றத்தை வெறும் 10 சதவீத இஸ்லாத்தை நம்முடைய வாழ்வில் அமுல்படுத்தியதன் விளைவாகப் பெற முடியுமென்றால், இஸ்லாமிய வாழ்வை முழுமையாக நாம் கடைபிடிப்போமென்றால், நம்முடைய நிலை எவ்வாறு இருக்கும்? என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று கூறினார்.

thanks to brother ali azarudhin
http://dailymuslimnews.blogspot.com/

Wednesday, January 6, 2010

புரளி கெளப்பும் புரோக்கர்கள்



போலியாக சில பேர் என்னல்லாம் பண்ணுறாங்கன்னு பாருங்களேன்.செயற்கையா நகை,பருப்பு,எண்ணெய்,இன்னும் எல்லாவத்துக்கும் விலையை கூட்டி,மக்களுக்கு கஷ்டத்த ஏற்படுத்துரத நாம் பாத்துக்கிட்டுத்தான் இருக்கோம்.

இப்போ சில ஊர்கள்ல போலியான மதிப்பீடு போட்டு,காலி மனைகளையும் விக்க ஆரம்பிச்சுட்டாங்க.அரசு சொல்லும் விலையை விட,தனியார் சொல்லும் விலை அதிகம்தான் என்றாலும்இது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான்.ஆனால் இது பொதுவா விக்கக் கூடியவர்,வாங்கக் கூடியவரிடம் விலை சொல்லி,அது சரி என்றால் விற்பார்கள்.இது தானங்க நடைமுறை.





ஆனா இப்போ அதிரை, பட்டுக்கோட்டை சுத்து வட்டாரம்

போன்ற பகுதிகளில் நடப்பது என்னன்னா,விக்கிரவர்கிட்ட சில ஏஜென்ட்டுகள் போய்,"கொடுங்க நான் நல்ல விலைக்கு வித்து தர்றேன்" என்று சொல்லி,அட்வான்ஸ் கொடுத்துவிட்டு,மனை வாங்க விருப்பம் உள்ளவங்க கிட்ட போய்,மனைக்கு ஓனர் சொன்ன விலையைவிட,பல மடங்கு சொல்லி,வித்துபுடுறாங்க. இதுனால பல லட்சம் கூடுதலா கொடுக்க வேண்டி இருக்கு.எவ்வளவு அநியாயம் பாருங்க.


எனக்கு தெரிஞ்ச ஒரு குடும்பத்துல இப்பிடித்தான்,அஞ்சு லட்சம் குடுத்து வாங்க வேண்டிய மனைக்கு,எட்டு லட்சம் குடுக்க வேண்டியதா போய்டுச்சுன்னு நொந்து போய்ட்டாங்க.அதுக்கு அரசு நிர்ணயித்த விலை மூனு லட்சம்.

இப்படி பணம் வச்சிக்கிட்டு,கிடைக்கிற மனைகளைஎல்லாம் வாங்கிப் போட்டு,ஏஜன்ட்டுக்கள் பண்ணுற அட்டகாசம் தாங்க முடியலைன்னு பல நடுத்தர வர்க்கம் கதறுவது யார் காதிலும் விழுந்தபாடில்லை.இப்படி அநியாயம் பண்ணும் ஏஜன்ட்டுக்கள் நாளை மறுமையில் எல்லாத்துக்கும் அல்லாஹ் கேள்வி-கணக்கு கேட்பான் என்பதை மறந்துவிட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.
------------------------------------------------------------------------

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு யாருமில்லை. நிச்சயமாக உங்கள் அனைவரையும் இறுதிநாளில் அவன், ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமில்லை. மேலும் அல்லாஹ்வைப் பார்க்கிலும் சொல்லில் உண்மையுடையோர் யார்? (அல்குர்ஆன் 4:87)

அறிவிப்பாளர் : ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ



நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் நவின்றுள்ளார்கள்: “கொள்முதல் செய்வதிலும், விற்பனை செய்வதிலும், கடனைக் கோருவதிலும் மென்மையுடனும் நற்பண்புடனும் நடந்து கொள்ளும் மனிதர் மீது அல்லாஹ் அருளைப் பொழிவானாக!”
(புகாரி)


 அறிவிப்பாளர் : உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ



“தேவையான பொருள்களைப் பதுக்கி வைக்காமல் உரிய

நேரத்தில் அவற்றை அங்காடிக்குக் கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தானவன்! மேலும், அவனுக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தையும் வழங்குவான். இன்னும், அவற்றைப் பதுக்கி வைப்பவன் இறைவனின் சாபத்திற்கு உரியவனாவான்.”(இப்னு மாஜா)






Saturday, December 5, 2009

இந்துக்களே,இது ஒரு இனிப்பான செய்தி!!!

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.

இதை நாம் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு ஹிந்து கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.

ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.

4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.

தமிழ் மொழி பெயர்ப்பு:சகோதரி சுமஜ்லா


thanks to :
http://www.peacetrain1.blogspot.com/
http://sinthikkavum.blogspot.com/

Monday, September 7, 2009

வரதட்சணை வாங்கும் ஆண் பொட்டப்பய, வாங்கத்தூண்டும் பெண்ணுக்குப் பெயர் என்ன? அனானி கேள்விக்கு,பதில்!சாட்டையடி 3

//ஆனால் அந்த ஆண் பொட்டையை வரதட்சணை வாங்க எல்லா வகையிலும் தூண்டும் (வரதட்சணையை தொகையை பேசி முடிக்கும்) அவனின் தாய் மற்றும் சகோதரி போன்ற பெண்களை என்ன பெயர் வைத்து, எப்போ சாட்டையடி கொடுக்க போகிறீர்கள்???//

ஒருத்தர் இப்பிடி கமென்ட் பகுதியில கேட்டிருக்கார்।உண்மையில இது ஏத்துக்க வேண்டிய விஷயம்தான்।

கொமரா இருந்து,கல்யாணம் முடிக்கிறதுக்குள்ள வாப்பாவும்,சகோதரங்களும் படுற கஷ்ட்டத்தப் பாத்துக்குட்டு இருந்துட்டு,கல்யாணம் ஆனப்பறம்,அவளுக்கு பிள்ளைங்கள் பொறந்து,அவன் ஆம்பிலப்புல்லையா இருந்துட்டா,தான் பட்ட கஷ்டத்த மறந்துட்டு,அந்த பொண்ணும்,தான் மகனுக்கு வரதட்சணை வேணும் என்று கேக்குறது இருக்கே,இது பெருங் கொடுமை?

இதுக்கு என்னோட ஐடியா,ஒரு ஆள்,ஒரே ஒரு ஆள் துணிஞ்சு,நேரா அதிராம்பட்டினம் போலீஸ் ஸ்டேசன் போய்,ஒரு கம்பிளைன்ட் எழுதி கொடுத்து,இதுக்கு காரணமா இருக்குற ஆம்பிள,பொம்பிள,மணமகன் பொட்டப்பய,நாத்தனாமாறு இப்பிடி எல்லாத்தையும் புடிச்சி,உள்ளே தள்ளி களி திங்க வச்சா சரியாயிடும்.

ஜமாத்துல,கட்சியிலன்னு எவனும் வந்தா,அவன் மேலேயும் கம்ப்ளைன்ட் பண்ணி உள்ள தள்ளுங்க।நமக்கு,ரெண்டு வகையில நியாயம் இருக்கு.ஒன்னு,நம்மோட புனிதமான் மார்க்கம்,ஒரு ஆண்தான்,பெண்ணுக்கு மஹராக,அவள் கேட்பதைக் கொடுக்கவேண்டும் என்று சொல்லி பெண்களை உயர்த்துகிறது,கண்ணியப்படுத்துகிறது.

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்।அல்குர்ஆன்

ரெண்டாவது, சட்டம் அது கடுமையா தண்டிக்க சொல்லுது।ஆனா கம்பிளைன்ட் கொடுக்குறது ரொம்ப கம்மி.இப்படி துணிஞ்சு கம்பிளைன்ட் கொடுத்து பாருங்க,நிலைமை கொஞ்சம்,கொஞ்சம் சீராகும்.

இன்ஷா அல்லாஹ்,
இன்னும் சாட்டையடி தொடரும்.............

Friday, September 4, 2009

(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!


(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.

(அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.


திரு குர்ஆன் (1 - 1 to 7)