Saturday, December 5, 2009

இந்துக்களே,இது ஒரு இனிப்பான செய்தி!!!

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.

இதை நாம் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு ஹிந்து கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.

ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.

4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.

தமிழ் மொழி பெயர்ப்பு:சகோதரி சுமஜ்லா


thanks to :
http://www.peacetrain1.blogspot.com/
http://sinthikkavum.blogspot.com/

20 comments:

சங்கர்,தூத்துக்குடி said...

இதை படித்தவுடன் மெய்சிலிர்த்துவிட்டது.இஸ்லாம் பற்றி கூடுதலாக அறிய எந்த வெப் சைட் சென்று அறியமுடியும்? தயவு செய்து கூற முடியுமா?

ஹுஸைனம்மா said...

ஃபாத்திமா, தவறாக நினைக்காதீர்கள். ஆர்வத்தினாலேயே கேட்கிறேன்: இதைக் கூறிய பண்டிட் திரு. வைத் ப்ரகாஷ் இதை மனமார ஏற்று இஸ்லாத்தைத் தழுவினாரா?

கருவாச்சி said...

பாராட்ட வார்த்தைகளே இல்லை
அருமை மிக அருமை சகோ

பாத்திமா ஜொஹ்ரா said...

சகோதரர் சங்கர் அவர்களே,உங்கள் ஆர்வத்திற்கு நன்றியும்,மகிழ்ச்சியும்.இஸ்லாம் பற்றி அறிய நீங்கள் http://www.ift-chennai.org/ மற்றும் http://www.tntj.net/ மூலம் அறியலாம்.மேலும் விவரங்களுக்கு,அவர்களின் தளங்கள் சென்று,முகவரி அறிந்து கொள்ளுங்கள்.நன்றி

பாத்திமா ஜொஹ்ரா said...

கருவாச்சி அண்ணன் அவர்களுக்கும்,ஹுசைனம்மா அக்கா அவர்களுக்கும் மிக்க நன்றி.
அக்கா.நேர்வழி என்பது இறைவன் கொடுக்கும் கிப்ட்.அதற்கு நாம் முயற்சிப்பதோடு,அல்லாஹ்வின் அருளும் வேண்டும்.பெருமானாரின் பெரிய தகப்பனாருக்கு ஹிதாயத் கிடைக்கவில்லை.இப்ராஹீம் நபியின் தந்தைக்கு ஹிதாயத் கிடைக்கவில்லை.நோஹ் நபியின் தந்தைக்கு கிடைக்கவில்லை,இப்படி நிறைய உண்டு,வைத் பிரகாஷ் இஸ்லாத்தை ஏற்றாரா என தெரியவில்லை,ஆனால் அவருக்காக துவா செய்வோமே.இன்ஷா அல்லாஹ்

பாத்திமா ஜொஹ்ரா said...

நூஹு நபியின் பிள்ளைக்கு என திருத்தி வாசிக்கவும்.

haja said...

Aam Ithai naanum Vaasithaen, ithan iruthi Mudivu iraivan oruvanae, ivulagathirku eduthukaanbikirathu. Iniyavathu makkal purinthu kondu otrumaiyudan vaala thodangattum. Ameen
by haja
Abu Dhabi

ராஜவம்சம் said...

http://www.onlinepj.com/
நன்பர் சங்கர், இந்தவலைதலத்தில் உங்கள் சந்தேகங்கள் அனைத்திர்கும் இன்ஸா அல்லாஹ் விடைகிடைகும்.

சக்தி த வேல்..! said...

தகவலுக்கு நன்றி... நான் ஒரு ஹிந்துவாய் இருப்பினும் இஸ்லாம் மீதும் இஸ்லாத் மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவன்...இந்த பாவ பட்ட பூமியில் அல்லாஹ் வின் புகழ் ஒரு நாள் ஓங்கும்... பாவங்களெல்லாம் காணமல் கரைந்து ஓடும் என முஹமது நபிகள் போலவே நானும் நம்புகிறேன்.. அன்புடன் சக்தி..

பாத்திமா ஜொஹ்ரா said...

சக்தி அண்ணன்.இன்ஷா அல்லாஹ் உங்கள் நம்பிக்கை வீண்போகாது.

Jaleela said...

ரொம்ப அருமையான பகிர்வு, தமிழாக்கம் செய்த சுஹைனாவிற்கு பாராட்டுக்கள்.
எனக்கும் மெயிலில் வந்தது நானும் பிலாக்கில் போட இருந்தேன்.

பாத்திமா ஜொஹ்ரா said...

நன்றி ஜலீலா அக்கா,உங்க பிளாக்கிலும் போடுங்க.

Anonymous said...

//இந்த பாவ பட்ட பூமியில் அல்லாஹ் வின் புகழ் ஒரு நாள் ஓங்கும்... பாவங்களெல்லாம் காணமல் கரைந்து ஓடும் என முஹமது நபிகள் போலவே நானும் நம்புகிறேன்.. அன்புடன் சக்தி..//

சக்தி அண்ணே, எங்கள் இந்தியா பாவப்பட்ட பூமிதான், அது அப்படியே இருந்துவிட்டு போகட்டும். நீங்கள் உங்களுக்கு பிடித்த புண்ணிய பூமியான பாகிஸ்தானுக்கோ அல்லது சவுதி அரேபியாவுக்கோ போய் அங்கு உள்ள புண்ணிய ஆத்மாக்களுடன் வாழ்ந்து சுவனத்தை அடையலாமே. எதற்கு அண்ணா இந்த காபிர் நாட்டில் வாழ்ந்து கஷ்டபட வேண்டும். உங்களுக்கு கிடைக்கும் சுவனத்தை இங்கே யாருமே தடுக்க மாட்டார்கள். வேறு ஏதும் சொல்ல தோன்றவில்லை. உங்கள் பதிலிலேயே நீங்கள் எவ்வளவு பெரிய அறிவாளி என்று தெரிகிறது. தயவு செய்து இந்த நாடு என்ன பாவம் செய்து விட்டது என்று விளக்கினால் எங்களுக்கும் உண்மை தெரியுமே. நீங்கள் தெரிந்து கொண்ட ஒரு விஷயத்தை அடுத்தவருடன் பகிர்ந்து கொள்வதில் தவறுஇல்லையே

பாத்திமா அக்கா, எங்கள் இந்தியா இப்படிதான். அது எப்போதுமே இந்தியாவாகத்தான் இருக்கும். சக்தி அண்ணனிடம் கேட்டதையே உங்களிடம் கேட்கிறேன், நீங்கள் அவரது நம்பிக்கை வீண் போகாது என்று கூறியிருக்கிறீர்கள். இந்த நாடு எதனால் என்ன பாவம் செய்து விட்டது என்றுகூறுவீர்களா.


M. Jaya Prakash
Kanyakumari

பேனாமுனை said...

திரு ஜெயபிரகாஷுக்கு,உங்கள் பொன்னான தகவலுக்கு நன்றி.உலகத்திலேயே இந்தியாவில்தான் முஸ்லிம்கள் இப்போது அதிகம்,இரண்டாவது இந்தோனேஷியா.தற்போதைய கணிப்பின்படி இன்னும் அறுபது வருடங்களில்
இந்தியா
முஸ்லிம்
நாடாகிவிடும்.ஒவ்வொரு ஊரிலும் சராசரியாக ஒரு வருடத்துக்கு இந்தியாவில் இருபது சதம் இஸ்லாத்தை தழுவுகின்றனர்.நீங்கள் எப்படி கத்து கத்து என்று கத்தினாலும்,கூடிய விரைவில் இன்ஷா அல்லாஹ் இந்தியா இஸ்லாத்தை,உச்சி மோந்து வரவேற்று தழுவிக்கொள்ளும்.அப்போது இந்தியா நல்ல,வல்ல அரசாக மாறும்.கவலைப்படவேண்டாம்,நண்பரே.வாழ்க இஸ்லாம்,வாழ்க இந்தியா.

சக்தியின் மனம் said...

hi. bro jeyaprakash...

this is not the topic about India/Pakistan or Hindu/Muslim.. and we are not criticize any particular person or religion.. ondre kulam oruvae devan enbathuthan tamilarin adippadai kalacharam antha kolgaiyinai pothipathal than isalminai aatharikkiren.. islam pirivinaigalai pothippathillai.. And for your awareness, "BOOMI" is not just india, its includes all the country in the world.. and you should know that We are not forcing any one to become a muslim and we are not fighting to anyone to prove the holly of islam.. if anyone do that and he is not a muslim.. you just be what you are and don't ever criticize us and our belief..AND i know about my brilliancy..
thank you.. brother.. M. Jaya Prakash Kanyakumari

ammu said...

பாத்திமா தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.அவர் சொல்லிருப்பது வேறு ஒரு அர்த்தத்தில்.வேதங்களின் படி கல்கி அவதாரம் எடுப்பதற்கு இன்னும் ஐம்பது வருடங்கள் ஆகும்.

//.இந்த பாவ பட்ட பூமியில்//

சக்திவேல் இது எந்த அர்த்தத்தத்தில் சொல்லிருகீங்க?இந்தாவிலேயே இருந்துகொண்டு இந்தியாவை பாவ பட்ட பூமின்னு சொல்றது நல்லா இல்லங்க.
உங்களுக்கு எது புண்ணிய பூமியாக தோன்றுகிறதோ அங்கு போய் தங்கிகொள்ளலாமே.

பாத்திமா வழக்கம் போல் உங்களின் எழுத்து திறமையை ரசித்தேன்.நான் கூறியிருப்பதில் உங்களின் மனதை புண்படும்படி ஏதேனும் கூறி இருப்பதாக நினைத்தால் இந்த கருத்தை வெளியிட வேண்டாம்.

தமிழ் தோழி said...

///ammu said...
பாத்திமா தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.அவர் சொல்லிருப்பது வேறு ஒரு அர்த்தத்தில்.வேதங்களின் படி கல்கி அவதாரம் எடுப்பதற்கு இன்னும் ஐம்பது வருடங்கள் ஆகும்.
////


அம்மு தவறாக எடுத்து கொள்ளாதீர்கள். பேனா முனை அவர்கள் கூறியது வேறு அர்த்தத்தில்.
நீங்கள் புரிந்து கொண்டது வேறு அர்த்தத்தில். நீங்கள் இந்த பதிவை சரியாக படிக்கவில்லை என நினைக்கிறேன். ஹிந்துக்கள் கூறும் கல்கி அவதாரம் 1400 வருடங்களுக்கு
முன்பாகவே முகமது நபியாக வந்துவிட்டார் என்று இந்த பதிவில் ஆதாரத்துடன் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள்
அடுத்து ஐம்பது வருடம் கலித்து கல்கி
அவதாரம் வரும் என்று கூறுகிரீர்கள்.

தமிழ் தோழி said...

///
//.//

சக்திவேல் இது எந்த அர்த்தத்தத்தில் சொல்லிருகீங்க?இந்தாவிலேயே இருந்துகொண்டு இந்தியாவை பாவ பட்ட பூமின்னு சொல்றது நல்லா இல்லங்க.
உங்களுக்கு எது புண்ணிய பூமியாக தோன்றுகிறதோ அங்கு போய் தங்கிகொள்ளலாமே.////

அம்மு நீங்க மருபடியும் தவறா புரிஞ்சுக்கல. சக்தி அண்ணன் ’இந்த பாவ பட்ட பூமியில்’ன்னு பொதுவா சொன்னாங்க. இதுல எங்க இந்தியா வந்ததுன்னு தெரியல.

Ammu Madhu said...

தமிழ் தோழி மனிசுகொங்க.உங்களுக்கு விஷயங்கள் தெரிந்த அளவிற்கு எனக்கு தெரியல்ல.

Ammu Madhu said...

பாத்திமா நீங்கள் என்னுடை தோழி என்பதால் தான் என்னுடைய கருத்தை சொன்னேன்.அதை இவ்வளவு offensivevaa எடுத்துக்கறாங்க.என்னுடைய முதல் இரண்டு கம்மேன்ட்டையும் எடுத்துவிடுங்கள் ப்ளீஸ்.