Sunday, December 27, 2009

பர்தா அணியாமல் இருந்தால் தான் எங்களுக்கு கஷ்டம்!மதவக்கிர கிருக்கன்களுக்கு சவுக்கடி!!............... இந்த இடுகைக்கு என்ன காரணம் என்றால்....


நான் பதிவர் சந்திப்புக்கு பர்தாவுடனே சென்றேன், கடைசிவரை பர்தாவுடனே இருந்தேன் என்று எழுதியிருந்ததற்கு, முந்தய பதிவுகளில் மாற்று மத அன்பர் ஒருவர் இவ்வாறு மறுமொழியிட்டிருந்தார்,


//நான் பேண்ட்டுடனே சென்றேன், கடைசிவரை பேண்ட்டுடனே இருந்தேன்; பெண்கள் புடவையுடனே சென்றார்கள், கடைசிவரை புடவையுடனே இருந்தார்கள், இப்படியெல்லாம் நாங்கள் எழுதினோமா?//


இதைப் படித்ததும், எனக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை! பர்தாவைப் பற்றி பல தவறான கருத்துக்கள் மாற்று மத அன்பர்களிடையே உள்ளது, அதைத் தெளிவாக்குவது தான் இந்த இடுகையின் நோக்கம்!


சில கேள்விகளும் பதில்களும்...


பர்தா என்றால் என்ன?


பர்தா என்பது உடையல்ல...அது உடைக்கு மேல் அணியும் ஒரு அங்கி தான், அதைக் கழட்டினால் உள்ளே உடை இருக்கும்!!!


அழகாக உடை உடுத்தி, நகையெல்லாம் அணிந்து, பிறகு அதை பர்தாவால் மறைத்துக் கொள்கிறீர்களே?!


நாங்கள் திருமணம் போன்ற விஷேசங்களில், ஆண்களுக்கு தனி இடம், பெண்களுக்கு தனி இடம் என்று ஒதுக்கி இருப்போம். இருவரும் கலப்பதில்லை. ஆக, நாங்கள் வெளியே செல்லும் போது பர்தா அணிந்து சென்றாலும், திருமண மண்டபத்தில் பெண்கள் பகுதிக்கு சென்றதும் அதை கழட்டி பையில் வைத்து விடுவோம். பிறகு திரும்பும் போது, மீண்டும் அணிவோம். உறவுகளின் இல்லங்களுக்கு செல்லும் போது இதே போலத்தான்.


பர்தா அணியச் சொல்லி கட்டாயப்படுத்துவது யார்?


எங்கள் பெண்களிடம் ஏன் என்னிடமும் கணவர் உட்பட எந்த ஒரு ஆணும் கட்டாயப்படுத்தியதில்லை. நானே விரும்பித் தான் அதை அணிகிறேன். அதன் சவுகரியங்களை உணர்ந்த எந்த ஒரு பெண்ணும், பர்தா இல்லாமல் வெளியே செல்வதை விரும்புவதில்லை.


பர்தா ஏன் அணிகிறோம்?


எங்களுடைய அழகும் வனப்பும் கணவருக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கிறோம். இது ஒரு வித சுயநலம் போலத்தான் தெரியும். ஆயினும், எங்கள் வளர்ப்பு முறை அப்படி! ஆக, வெளி ஆண்கள் யாரும் எங்கள் உடலின் தோற்றத்தைப் பார்ப்பது எங்களுக்கு விருப்பமில்லை! அதற்காகத்தான் பர்தா அணிகிறோம்.


ஆண்கள் மட்டும் ஏன் பர்தா அணிவதில்லை?


நிச்சயமாக எங்கள் மதத்தில் ஆண்களுக்கும் பர்தா இருக்கிறது. ஆனால் அது வேறு விதம். ஆணும் பெண்ணும் உடல் தோற்றத்தில் வேறு வேறு மாதிரி இருக்கும் போது, எப்படி இருவருக்கும் ஒரே மாதிரி பர்தா அணிய முடியும்?


ஆண்களுக்கு தாடியும் நீளமான அங்கியும் தொப்பியும், தொப்புள் முதல் முட்டுக்கால் வரை மறைப்பதும் அவர்களுடைய பர்தா போலத்தான். அதோடு, பெண்களைப் பார்த்தால், தம்முடைய பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும்படி அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஏன் ஒரு சில முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதில்லை?


அதற்குக் காரணம், அவர்களின் வளர்ப்பு தான். நற்குடியில் பிறந்து, இஸ்லாமிய பாரம்பரியப்படி வளர்க்கப்படும் அனைவரும் நிச்சயமாக பர்தாவை விரும்புவார்கள். பொதுவாக ஒரு குடும்பத்தில் பெண் எடுக்கும் போது, அக்குடும்பப் பெண்கள் பர்தா அணிபவராக இருந்தால்,விரும்பி பெண் எடுப்பார்கள்.


பர்தா அணிவது கஷ்டமாக இல்லையா?


உடை அணிவதை நாம் கஷ்டமாக நினைப்பதில்லையே! நாம் நம் கைகளை ஓரளவுக்கும், உடலின் சில பாகங்களையும், உடையினால மறைத்துக்கொள்கிறோம். கையின் பெரும்பகுதியும், கழுத்தும் முதுகும் இடுப்பும் தெரியும்படியாக சேலை கட்டுகிறோம்.


இன்னின்ன இடத்தை மறைக்க வேண்டும், இன்னின்ன இடத்தை மறைக்க வேண்டியதில்லை என்று தீர்மானித்தது யார்? முதன்முறையாக சேலை உடுத்தும் பெண், இடுப்பு வெளியே தெரியும் போது, சற்று சங்கோஷமடைவாளல்லவா? அது போலத்தான், மீதியுள்ள பாகங்களான கழுத்து, கை முதுகு ஆகியவை வெளியே தெரியும் போது, நாங்கள் அவமானப்படுகிறோம். ஆக, பர்தா அணியாமல் இருந்தால் தான் எங்களுக்கு கஷ்டம்.


காலத்துக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளாமல் ஏன் இன்னும் பர்தா அணிகிறீர்கள்?


பர்தா அணிவதால், எம்மினப் பெண்களின் வளர்ச்சி தடைபடுவதில்லை. மாறாக, படிக்கும் காலத்தில் காதல்வலையில் வீழ்ந்து தம்மை இழந்துவிடாமல், நேரிய வழியில் செல்வதற்கு இது ஏதுவாக இருக்கிறது. பர்தா அணிந்தாலும், நாங்கள் விரும்பியதைப் படிக்கிறோம். விரும்பிய துறையைத் தேர்ந்தெடுத்து முன்னேறுகிறோம். அதற்கு நானே உதாரணம்.


ஏன் இந்த பதிவு?


ஆரம்பத்திலேயே நான் சொல்லிவிட்டேன். மற்றபடி நான் அனைத்து மத பழக்கவழக்கங்களையும் மதிப்பவள்.


சைவ சித்தந்தக் கொள்கையின் பட்டையையும், திருமால் பக்தர்களின் நாமத்தையும், பார்ப்பனீயர்களின் பூணூலையும், பாதிரிகளின் அங்கியையும், கன்னியாஸ்த்திரிகளின் ரோஸரியையும், சீக்கியர்களின் டர்பனையும் புரிந்து கொண்டு அதற்கு மரியாதை தருபவள் நான். அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். அதே போல எம்மையும் எம்பர்தாவையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த இடுகை!


சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கலாம். ஆனால், மதவக்கிரம் பிடித்த அனானி கமெண்ட்டுகளுக்கு இங்கு இடமில்லை என்று சொல்லிக் கொள்கிறேன்.


-சுமஜ்லா.
----------------------------------------------------------
அப்படிப் போடு அறுவாள.சுமஜ்லா அக்கா எழுதுன கட்டுரையை படித்துவிட்டு,சில முகம் இல்லாத கிறுக்கன்கள் அனானி என்று தைரியம் இன்றி,வேண்டத்தகாத பல வார்த்தைகள் போட்டு உளறி இருந்தனர்.அதற்கு அக்கா சரியான பதிலடி தந்துள்ளார்கள்.அதன் பதிப்பு இது.எனக்கும் அனானி சிலர் எழுதியள்ளனர்,அந்த வெறியர்கள் யார் என்று தெரியும்,எந்த இணைய தளம் மூலம் அது வருகிறது என்று தெரியும்,மீண்டும் அது போன்று வருமேயானால்,தீவிர சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துக் கொள்கிறேன். நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும்,அல்லாஹ்வின்-ஏக இறைவனின் ஒளியை அணைத்துவிட முடியாது,மாறாக இஸ்லாம் என்ற அந்த அமைதி மார்க்கம் எங்கும்,எப்போதும் வேகமாக பரவிக்கொண்டே இருக்கும்.இதற்கு தினம் தினம் வரும் உலகின் நாலா பக்கமும் இருந்து வரும் செய்திகளே சாட்சிகளாகும்.

Monday, December 21, 2009

நாமதான் மனநல பைத்தியங்கள்?படித்தேன்,பகிர்ந்தேன்

சகோ ஜாகிர் ஹுசைன்,அதிரையை சேர்ந்தவர்,அதிலும் அதிரையின் நுழைவாயில் எனப்படும் கடற்கரை தெருவை சேர்ந்தவர்.தற்போது மலேஷியாவில் உள்ளார்.அவரின் இக்கட்டுரை என் உள்ளத்தை தொட்டது,யாரும் கவனிக்காமல் இருக்கும் உண்மை மனிதர்களை,கவனித்து,தன கவலையை வெளிப்படுத்தி கட்டுரை தந்த அவருக்கு,அல்லாஹ் வெற்றி தருவானாக,இந்த கட்டுரையை அப்படியே தருகிறேன்,நன்றியோடு.தற்போதைய சூழ்நிலையில் இது போன்ற குழந்தைகள் நமது ஊரில் ஒரு பெரிய குடும்பத்தில் ஒருத்தராவது இருக்கிறார்கள்.நாமும் இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதற்க்கு காரணம் வசதிகள் இருந்தும் ஒருவகையான அறியாமைதான் என நினைக்கிறேன். நாம் நேரடியாக பாதிக்கபடாதவரை நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைப்பது மனித இயல்பு.


இந்த குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளை வளர்ப்பவர்கள் நிறைந்த பக்குவம் அடைகிறார்கள். 9 வருடத்துக்கு முன் எனது நண்பர் ஒருவருக்கு இது போன்ற பெண் குழந்தை பிறந்தது இப்போது அந்த பெண் குழந்தை இறைவன் உதவியாலும், முறையான பயிற்ச்சிகளாலும் எல்லோரைப்போல் தனது வாழ்க்கையை எதிர் கொள்கிறாள்.

அனைத்துலக ரீதியில் இதுபோன்ற குழந்தைகளுக்கு பயிற்சி பள்ளிகள் இருக்கிறது. அதற்க்காக உதவிகளும் செய்கிறார்கள். பணத்தை துரத்தும் வாழ்க்கையை கற்றுத்தரும் இப்போதைய கல்வி முறைகள தவிர்த்து, குழந்தைகளின் செயல்படும் தகுதிக்கு ஏற்ப சொல்லித்தரும் கல்வி முறைகளை கனடா நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறார்கள்

இது போன்ற குழந்தைகளை சரியான முறையில் மருத்துவ சிகிச்சைக்கு உடன்படுத்தும் போது [ உதாரணம்: அக்கு ப்ரஸ்ஸர் / அக்கு பன்க்சர் / தை-ச்சி ) இந்த குழந்தைகள் மற்றவர்களைபோல் செயல் பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதை வழி நடத்த பொறுமை அதிகம் தேவை.இந்த குழந்தைகளை மன நலம் குறைந்தவர்கள் என்று சிலர் சொல்வதுண்டு....என்னை பொருத்தவரை நாம் தான் மன நலம் குறைந்தவர்கள்

இவர்களிடம் பழகிப்பார்த்தால் தெரியும் நான் சொன்ன உண்மை, இவர்களிடம் புறம் பேசுதல் , பொய் , ஏமாற்றுதல் , ஈகோ , எதுவும் கிடையாது. இப்போது சொல்லுங்கள் யார் உண்மயில் மன நலம் குறைந்தவர்கள்?.

நமது ஊரில் இந்த குழந்தைகளுக்கு ஒரு பள்ளி ஆரம்பித்ததாக கேள்விப்பட்டேன். இறைவன் உதவியால் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.


THANKS TO
ZAKIR HUSSAIN(MALASIA)
அதிரை எக்ஸ்பிரஸ்

Friday, December 11, 2009

ஏழைங்க என்னங்க பண்ணுறது.

என்னங்க இது அநியாயமா இருக்குது?ஊருக்கு போன் பண்ணினா காய்கறி மொதக்கொண்டு,மீன்,இறைச்சி,அரிசி,பருப்பு இப்பிடி எல்லா சாப்பாட்டுபொருளும் விலை  ஏறிபோச்சிடுச்சின்னு சொல்றாங்க.சாதாரணமா ஒரு அம்பது ரூவா கொண்டு போனா,மீனு,கொஞ்ச காய்கறி,இப்படி தாராளமா வாங்கி வந்த காலம் போய்
அந்த மாதிரி இப்போ வாங்குனா முன்னூறு ரூவா தேவைன்னு சொல்லுறாங்க.கேக்கும்போது மனசு கனக்குது.ஏழைங்க என்னங்க பண்ணுறது.இது செயற்கையா விலைவாசி ஏத்தமா இல்லையான்னு தெரியல.எது எப்படியோ ஆனா கஷ்ட்டப்படுறது ஏழைங்கதான்.இது ஊர்ல இருக்குற நல்ல இளைஞர்கள்,அல்லது அமைப்புக்கள் ஒன்னு கூடி மொத்தமா காய்கறி,மீன்,ஆடு-மாடு வாங்கி நியாய விலையில வித்தாங்கனா,ஓரளவுக்குவிலைவாசியை கட்டுப்படுத்தலாம்.அதுமட்டுமில்லாம,அவங்களுக்கு அது ஒரு வியாபாரமாகவும்,சுய தொழிலாகவும் போகும் இல்லையாங்க.


பெருநா நேரத்துல ஒரு தடவ நம்ம ஊர்ல இதுபோல த மு மு க காரங்க,ஆடு வாங்கி,விலை குறைவா வித்தாங்கன்னு என்னோட மச்சான்(கணவர்) சொன்னார்.இது போல தொடர்ச்சியா செய்யலாமே.இப்படி செய்யும்போது,மத்த வியாபாரிங்கலும், விலை குறைக்க சான்சு இருக்கு,செஞ்சுதான் பாருங்களேன்,ஆண்களே!


நான் சொல்லுறது சரியா,தப்பா எதுவானாலும்,கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள். படிக்கிற மத்த மக்களுக்கு உதவியா இருக்கும்.

Saturday, December 5, 2009

இந்துக்களே,இது ஒரு இனிப்பான செய்தி!!!

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.

இதை நாம் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு ஹிந்து கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.

ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.

4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

பேராசிரியர் பண்டிட் வைத் ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மீர் அப்துல் மஜீத்.

தமிழ் மொழி பெயர்ப்பு:சகோதரி சுமஜ்லா


thanks to :
http://www.peacetrain1.blogspot.com/
http://sinthikkavum.blogspot.com/