Friday, December 24, 2010

ஆறுகள் ஓடுமா அரேபியாவில்?


Dr. Alfred Coroz உலகின் தலைசிறந்த புவியியல் அறிஞருள் ஒருவர். அவரிடம் அரேபியாவின் புவிவள நிலமையினைக் குறித்துக் கேட்கப்பட்டது.
''அரேபியா எப்போதேனும் பசுமையாக ஆறுகள் நிரம்பி இருந்ததுண்டா?'' . எதிர்பாராத ஆனால் நேர்மறையான பதில் அவரிடமிருந்து வந்தது- ''ஆம் பனியுகத்தில் அவ்வாறு இருந்தது''.
அடுத்து ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது:''எதிர்காலத்தில் மீண்டும் அரேபியாவின் பாலைவனம் பசுமையாகும் வாய்ப்புகள் ஏதேனும் உண்டா.?''
ஆச்சர்யமூட்டும் வகையில் அவரிடமிருந்து பதில் வந்தது-
''ஆம்! அரேபியா மீண்டும் பசுமையாக செழித்துவிளங்கவும் ஆறுகள் ஓடவும் செய்யும் என்பது அறிவியல் பூர்வமான எதிர்கால உண்மை தான்!''
ஆச்சர்யம் பொங்க மீண்டும் அவரிடம் கேட்கப்பட்டது: ''எப்படி சொல்கிறீர்கள்?''
''புதிய பனியுகம் நிஜத்தில் தொடங்கி விட்டது. வடதுருவ பனிப்பாறைகள் உருகத் தொடங்கி விட்டன. அவை அரேபிய தீபகற்பம் நோக்கி நகரத்தொடங்கியுள்ளன. இதன் அறிகுறிகளே குளிர்காலங்களில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நன்குதென்படுகின்றன. இது அறிவியற்பூர்வமான உண்மை''
''இது குறித்து 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அறிவித்து விட்டதை அறிவீர்களாஸ?
ஒரு நபிமொழி (ஹதீஸ்) இவ்வாறு தெரிவிக்கிறது:
அரேபியா மீண்டும் மேய்ச்சல் நிலங்களாகவும்ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகாத வரை இறுதி நாள் (உலக முடிவு நாள்) ஏற்படாது. (நூல்: முஸ்லிம்) 
இப்போது சொல்லுங்கள்: ''நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அரேபியா சோலைகளாக ஆறுகளுடன் இருந்ததை யார் அறிவித்திருப்பார்கள்..?
பேராசிரியர் சிறிது யோசனைக்குப்பின் சொன்னார்: ''ரோமானியர்களாக இருக்கலாம்''
''நல்லது! மீண்டும் உலக முடிவு நாளுக்கு முன் அரேபியா மேய்ச்சல் நிலமாகவும் ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகும் என்பதை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் எப்படி கூற முடிந்தது.?''
உண்மையை எதிர்கொண்ட Dr. Coroz தைரியமாகவும் வெளிப்படையாகவும் சொன்னார்:
''அது நிச்சயம் ஒரு தெய்வீக வெளிப்பாட்டினால் தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.''
மேலும் அவர் சொன்னவை:
''ஒரு எளிய மனிதனுக்கு குர்ஆன் எளிய விஞ்ஞானத்தையே கூறுகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன் நிரூபிக்க வழியின்றி சாதாரணமாக கருதப்பட்ட அதன் விஞ்ஞான கருத்துக்களை இன்று தான் விளங்க வழியுண்டு என்பது உண்மை தான்.
அப்படித்தான் புவியின் தோற்றம் புவியின் அமைப்புகளை குறித்து குர்ஆனில் கூறப்பட்டுள்ளவைகளை நான் பார்க்கிறேன்.''
Dr.Coroz அவர்கள் விருப்பு வெறுப்பற்று பார்த்த பார்வையினால் கிடைத்த நிஜம் இது.
''நிச்சயமாக (வேதமாகிய) இது, உண்மையானது தான் என்று அவர்களுக்கு தெளிவாகும் வரையில்,(உலகின்) பல பாகங்களிலும், அவர்களிலும் நம்முடைய அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் காண்பிப்போம்; (நபியே!) உமது இரட்சகனுக்கு நிச்சயமாக அவன் ஒவ்வோரு பொருளின் மீதும் (அதுபற்றி நன்கறிந்து) சாட்சியாக இருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?'' (அல் குர்-ஆன்: 41:53)

Sunday, December 5, 2010

விவரிக்க முடியல.


    
அமெரிக்காவுல இப்போ சீசன் நேரங்கிரதால புதுசு புதுசா- தினுசு  தினுசா பொருள்களெல்லாம் சீனாவுலேர்ந்து வந்து குவியத் தொடங்கியாச்சு.நாளுக்கு ஒரு தினுசு.பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு. அப்போ குழந்தைங்களுக்கு??.என் பிள்ளைங்களும் ரொம்ப ரசிச்சு பாக்குறாங்க.

அப்படித்தான் ஈத் பெருநாளைக்கி புது டிரஸ் எல்லாம் எடுத்தாச்சி.குழந்தைதனமா எதுனா சிக்குதான்னு ஒரே தேடல்.நமக்கு பிடிச்சிருக்குதேன்னு வாங்கினா ஒருக்கா புள்ளைங்களுக்கு பிடிக்காம போய்டுமே.அப்போ என்ன செய்றது?


புள்ளைங்களையும் பெரிய மால்கள்,ஷாபிங் சென்டர்கள்,வணிக வளாகங்கள் இப்பிடி எல்லா எடத்துலயும் போய்  காட்டினேன்.புது புது டாயஸ் கண்ணைக் கவர்ந்தாலும்,பிள்ளைங்களுக்கு படிச்சது சின்ன ஹெலிகாப்டர்களும்,பொம்மை தலையணையும் தான்.

அந்த ரெண்டும்தான் எங்களுக்கும்,பிள்ளைங்களுக்கும் பிடிச்சது.

புடிச்சது வாங்கறதும், புள்ளைங்க ரசிக்கிறதும் அதை பார்த்து நாம சந்தோஷப்படறதும் சுபுஹானல்லாஹ் என்னால விவரிக்க முடியல.


17:70நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.
திருக்குர்ஆன் .