Friday, December 24, 2010

ஆறுகள் ஓடுமா அரேபியாவில்?


Dr. Alfred Coroz உலகின் தலைசிறந்த புவியியல் அறிஞருள் ஒருவர். அவரிடம் அரேபியாவின் புவிவள நிலமையினைக் குறித்துக் கேட்கப்பட்டது.
''அரேபியா எப்போதேனும் பசுமையாக ஆறுகள் நிரம்பி இருந்ததுண்டா?'' . எதிர்பாராத ஆனால் நேர்மறையான பதில் அவரிடமிருந்து வந்தது- ''ஆம் பனியுகத்தில் அவ்வாறு இருந்தது''.
அடுத்து ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது:''எதிர்காலத்தில் மீண்டும் அரேபியாவின் பாலைவனம் பசுமையாகும் வாய்ப்புகள் ஏதேனும் உண்டா.?''
ஆச்சர்யமூட்டும் வகையில் அவரிடமிருந்து பதில் வந்தது-
''ஆம்! அரேபியா மீண்டும் பசுமையாக செழித்துவிளங்கவும் ஆறுகள் ஓடவும் செய்யும் என்பது அறிவியல் பூர்வமான எதிர்கால உண்மை தான்!''
ஆச்சர்யம் பொங்க மீண்டும் அவரிடம் கேட்கப்பட்டது: ''எப்படி சொல்கிறீர்கள்?''
''புதிய பனியுகம் நிஜத்தில் தொடங்கி விட்டது. வடதுருவ பனிப்பாறைகள் உருகத் தொடங்கி விட்டன. அவை அரேபிய தீபகற்பம் நோக்கி நகரத்தொடங்கியுள்ளன. இதன் அறிகுறிகளே குளிர்காலங்களில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நன்குதென்படுகின்றன. இது அறிவியற்பூர்வமான உண்மை''
''இது குறித்து 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அறிவித்து விட்டதை அறிவீர்களாஸ?
ஒரு நபிமொழி (ஹதீஸ்) இவ்வாறு தெரிவிக்கிறது:
அரேபியா மீண்டும் மேய்ச்சல் நிலங்களாகவும்ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகாத வரை இறுதி நாள் (உலக முடிவு நாள்) ஏற்படாது. (நூல்: முஸ்லிம்) 
இப்போது சொல்லுங்கள்: ''நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அரேபியா சோலைகளாக ஆறுகளுடன் இருந்ததை யார் அறிவித்திருப்பார்கள்..?
பேராசிரியர் சிறிது யோசனைக்குப்பின் சொன்னார்: ''ரோமானியர்களாக இருக்கலாம்''
''நல்லது! மீண்டும் உலக முடிவு நாளுக்கு முன் அரேபியா மேய்ச்சல் நிலமாகவும் ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகும் என்பதை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் எப்படி கூற முடிந்தது.?''
உண்மையை எதிர்கொண்ட Dr. Coroz தைரியமாகவும் வெளிப்படையாகவும் சொன்னார்:
''அது நிச்சயம் ஒரு தெய்வீக வெளிப்பாட்டினால் தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.''
மேலும் அவர் சொன்னவை:
''ஒரு எளிய மனிதனுக்கு குர்ஆன் எளிய விஞ்ஞானத்தையே கூறுகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன் நிரூபிக்க வழியின்றி சாதாரணமாக கருதப்பட்ட அதன் விஞ்ஞான கருத்துக்களை இன்று தான் விளங்க வழியுண்டு என்பது உண்மை தான்.
அப்படித்தான் புவியின் தோற்றம் புவியின் அமைப்புகளை குறித்து குர்ஆனில் கூறப்பட்டுள்ளவைகளை நான் பார்க்கிறேன்.''
Dr.Coroz அவர்கள் விருப்பு வெறுப்பற்று பார்த்த பார்வையினால் கிடைத்த நிஜம் இது.
''நிச்சயமாக (வேதமாகிய) இது, உண்மையானது தான் என்று அவர்களுக்கு தெளிவாகும் வரையில்,(உலகின்) பல பாகங்களிலும், அவர்களிலும் நம்முடைய அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் காண்பிப்போம்; (நபியே!) உமது இரட்சகனுக்கு நிச்சயமாக அவன் ஒவ்வோரு பொருளின் மீதும் (அதுபற்றி நன்கறிந்து) சாட்சியாக இருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?'' (அல் குர்-ஆன்: 41:53)

5 comments:

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
சகோதரி;

எழுத்தை கொஞ்சம் பெரிதாக்கினால் படிக்க வசதியாக இருக்கும்

Unknown said...

அர்ர்ர்ருமையான பதிவு...!
அதிரை மகளே! வாழ்க!

RAZIN ABDUL RAHMAN said...

அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ..

அருமையான பதிவு.மற்றும் புதிய செய்தியை எனக்கு அறியத்தந்துள்ளீர்கள்.

குர்ஆனும்,நபி மொழியும்,ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னை மெய்ப்பித்துக்கொண்டே இருப்பதற்கான நிதர்சனத்தை இப்பதிவு இயம்புகிறது,..

அரேபிய தீபகற்பத்தில் ஆறுகள்,என்பது கற்பனைக்கப்பாற்பட்ட ஒன்றே,,,அதை நபி(ஸல்) அவர்கள் 1400களுக்கு முன்னமே அறிவிப்பு செய்துள்ளார்கள்,என்பது பிற மதத்தவர்களை சிந்திக்கச் செய்யும் செய்தியே...

அன்புடன்
ரஜின்

Anisha Yunus said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாத்திமாக்கா,

அருமையான செய்தி. உண்மையிலேயே படிக்கும்போது மனம் திருப்தியுடன் இருந்தது. திரும்ப திரும்ப ஹதீத்துக்களும் குர் ஆன் வாசகங்களும் மெய்ப்பிக்கப்படுவதில் ஐயமே கிடையாது. நல்ல பதிவு. நன்றி.

உங்களோட பேசறதும் மனதுக்கு நிறைவா இருக்கு. ஆனா பிள்ளைகளை வைத்துக்கொண்டு திருப்தியா ஃபோன் பேச முடியறதில்லைங்கறதுக்காகவே நான் அதிகமா ஃபோன் பண்ணறதில்லை, தப்பா எடுக்க வேண்டாம். து’ஆ செய்யவும்.

வஸ் ஸலாம்,

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோ.ஃபாத்திமா ஜொஹ்ரா,
இன்றுதான் உங்கள் தளத்துக்கு வருகிறேன் என்று நினைக்கிறேன்.

எனக்கு இந்த முஸ்லிம் ஹதீஸ் மற்றும் இந்த அறிவியல் தகவல் இரண்டுமே இத்தனை நாளாக தெரியவில்லை.

மிக முக்கியமான பதிவு சகோ. இது..! அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல.

தங்களுக்கு மென்மேலும் இறையருள் கிட்ட அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன்.