Friday, October 30, 2009

தீவிரவாதம் போதிக்குதா மதரசாக்கள்?


உத்தர் பிரதேச மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில், அங்குள்ள ஹிந்துக்கள் அரசு நடத்தும் பள்ளிகளுக்கு செல்லாமல் மதரசாக்களுக்கு சென்று கல்வி கற்கவே விரும்புகின்றனர் என்று அறிவித்துள்ளது.மேலும் இந்த ஆய்வறிக்கையில் இந்த மதரசாக்களில் உள்ள மாணவர் எண்ணிக்கையில் இந்துக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளது.

இஸ்லாமியா அராபியா ஆலிமுல் உலூம் என்ற மதரசாவில் முஸ்லீம் மாணவர்களுக்கு அரபி மற்றும் உர்துவும் இந்து மாணவர்களுக்கு சமஸ்கிருதமும் கற்றுத்தரப் படுகின்றது. இந்த மதரசா உ.பி யின் பாரபங்கி பகுதியில் உள்ளது.இந்த ஆய்வறிக்கையை லக்னோவை மையமாக கொண்டு செயல்படும் Better Education through Innovation (BETI) என்ற அமைப்பு நடத்தியுள்ளது. இந்த ஆய்வு ஐந்து மதரசாக்களில் நடத்தப்பட்டது. இந்த ஐந்து மதரசாக்களும் அரசு உதவியின்றி அப்பகுதி மக்களின் பொருளாதார உதவியைக்கொண்டும், நன்கொடைகள் மற்றும் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் ஆகியவற்றை கொண்டுமே நடத்தப் பட்டு வருகின்றன.

இந்த ஐந்து மதரசாக்களில் மூன்று மார்க்கக் கல்வியை தவிர உலக கல்வியையும் கற்றுத் தருகின்றன.UNICEF -இன் தலைவர் வினோபா கவுதம் இது பற்றி கூறுகையில், "மதரசாக்கள் குழந்தைகளுக்கு ஒரு முழுமையான கல்வியின் சூழலை உருவாக்கி தருகின்றது. இது மன வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாகும்.

இது போன்ற கல்விச் சூழல் கல்வி கற்பதற்கு ஆர்வத்தினை ஏற்படுத்தி மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும்" என்று கூறினார்.UNICEF சார்பில் கவுதம் இந்த மதரசாக்களை தான் அடிக்கடி பார்வையிட்டு வருவதாகவும் அதற்கான புத்தகங்களை ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் மொழிப்பெயர்த்து வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
------------------------------

மதரசாவில் தீவிரவாதம் போதிக்கப்படுகிறது என்று சில மதவாதிகள் சொல்லிவருகிறார்கள்,அதையே மீடியாக்களும் வாந்தி எடுக்கின்றன.ஆனால்,உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்தால்,இதே போன்ற மதரசாக்களை நாடெங்கும் நடத்த அவர்களே முன்வருவார்கள்.இந்தியாவும்,பிற நாடுகளும் அங்குள்ள மதரசாக்களுக்கு தங்கள் அதிகாரிகளை அனுப்பி பாடம் படிப்பித்துகொடுத்தால் நல்லது,இது போன்ற விஷகருத்துக்களை பரப்பி,அண்ணன்-தம்பிகளாய்,அக்கா-தங்கைகளாய் பழகி வரும் இந்து-முஸ்லிம் உறவை சீர் குலைக்க நினைக்கும் இவர்கள் எண்ணம் இன்ஷா அல்லாஹ்,எடுபடாது.

இன்னும் எச்சரிக்கை வேணும்!!

முஸ்லிம்களைப் பொறுத்தவரை இப்படித்தான் வாழ வேண்டும்,சம்பாதிக்க வேண்டும் என்று அல்லாஹ் தன் திருமறை குரானிலும்,நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தங்கள் ஹதீஸிலும் தெளிவாக சொல்லியுள்ளார்கள். அதை விட்டுவிட்டு,நாம இஷ்ட்டத்துக்கு வியாபாரம்,வேலை செய்கிறேன் பேர்வழி என்று ஹராமான செயல்களில் ஈடுபடுவது ரொம்ப கண்டிக்கத்தக்கது.

//நிறையபேர் லிக்கர் ஷாப் யானும் சாராய கடைலதான் வேலை பார்க்கிறார்கள் அங்கு சாராயம் மட்டும் இல்ல லாட்டரி என்கிற சூது மற்றும் செக்கேசின்ங் என்கிற வட்டி மற்றும் ஆபாச புத்தகம்/விடியோ சி.டி போன்ற எல்லா ஹராமான பொருள்கலும் இருக்கு நிறையபேர் வேலைபார்க்கிரங்கள் இதில் சிலர் முதலாளியாகவும் இருக்காங்க, ரொம்ப கவலைபடுற செய்தியா இருக்கு.//

இப்படி ஒருவர் (அபூ சுமையா) ஆதங்கப்பட்டிருந்தார்.

அது மட்டுமல்ல,மால்களில் சிலர் வேலை பார்த்துக்கொண்டும்,வியாபாரம் செய்துகொண்டுமுள்ளனர்.சிலர் முழுக்க ஹலாலான தொழில் மற்றும் உள்ளனர்.ஆனால்,இன்னொரு பயங்கர பாவகரமான ஒரு செயலை தனக்கு தெரியாமலேயே செய்துவருகின்றனர்.

மற்ற மதத்தவர்கள் வணங்கும் ஒரு பொருளை,கல்லை,மண்ணை,செம்பை,வெள்ளியை,பளிங்கு,கிறிஸ்டல்,தங்கத்தை அது எதில் செய்யப்பட்டில்ருந்தாலும்,உதாரணமாக சிலுவை,யூதர்களின் நட்சத்திரம்,இந்துக்கள்-புத்தர்கள் வழிபடும் சிலைகள் இன்னும் எதையெல்லாம் வணக்கமாக செய்யப்படுகிறதோ,அவை அனைத்தும் நமக்கு தடுக்கப்பட்டது.

இவைகளை சிலர் நகை கடைகளிலும்,கிப்ட் ஷாப்களிலும் வைத்து விற்கின்றனர்.இது எவ்வளவு பெரிய பாவம் என்பதை மறந்து விட்டார்கள்.

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
5:90
மூஸாவின் சமூகத்தார் அவர் (சென்ற) பின் தங்கள் நகைகளைக் கொண்டு ஒரு காளைக் கன்றின் சிலையை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள்; அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போல் வெறும்) சப்தமிருந்தது நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாது, இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டவும் செய்யாது என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா, அவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள் - இன்னும் அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயம் செய்து கொண்டார்கள்.
7:148
நினைவு கூறுங்கள்! "என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!" என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).
14:35
("என்) இறைவனே! நிச்சயமாக இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழி கெடுத்து விட்டன எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார். எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை என்றாலும்) நிச்சயமாக நீ மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றாய்."
14:36
அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் - மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீ;ங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
29:17

திருக்குரானின் எச்சரிக்கை பார்த்தீர்களா!


பாகம் 2, அத்தியாயம் 34, எண் 2236
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!" என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'கூடாது! அது விலக்கப்பட்டது!' எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, 'அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!" என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2478
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், தம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள். 'சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது" (திருக்குர்ஆன்- 17-81) என்னும் வசனத்தை கூறத் தொடங்கினார்கள்.


அறிவிப்பாளர் : அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் (வணிகர்களுக்கு எச்சாிக்கை செய்த வண்ணம்) கூறினார்கள்: “உங்களுடைய பொருளை விற்பனை செய்வதில் அதிகமாகச் சத்தியம் செய்வதைத் தவிருங்கள். ஏனென்றால் அது (தற்காலிகமாக) வாணிபத்தைப் பெருக்கினாலும் இறுதியில் அருள்வளத்தை இல்லாதொழித்து விடும்.” (முஸ்லிம்)

இன்னும் எத்தனையோ எச்சரிக்கைகள் இருக்கின்றன.நம் உழைப்பு,ஹலாலான வகையில் அமைந்து,அல்லாஹ் பொருந்த்திக்கொள்ளும் வகையில் செயல்படுவோம்.இன்ஷா அல்லாஹ்.
------------------------------------------------

மேற்கண்ட கட்டுரை என் நண்பி பரக்கத்துன்னிசா,ஈமைலில் அனுப்பி வைத்தால்.அவளுக்கு என் நன்றி.

Thursday, October 22, 2009

சிந்திக்கவும்,செயல்படவும்???"நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்;. நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.

(நபியே!) நீர் கூறுவீராக "மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்."

திருக்குர்ஆன்

Sunday, October 18, 2009

இவர்களால் நாறிப்போன இந்தியாவின் பெயர்!

நியூயார்க்பங்குச் சந்தையில், "இன்சைடர் டிரேடிங்' மூலம் 100 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த இந்தியர்கள் இருவர் உட்பட ஆறு பேர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் இந்தியர்கள் அனில் குமார், ராஜிவ் கோயல். நியூயார்க்கில் வசிக்கும் கோடீஸ்வரர் ராஜ ரத்தினம். இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இவர், கேலன் குரூப் நிறுவனங்களின் தலைவர்.இவர்களும், நியூயார்க்கை சேர்ந்த டெனில்லா சிசி, ராபர்ட் மொபத், மார்க் குர்லாண்ட் ஆகிய மேலும் மூன்று பேரும் சேர்ந்து பங்குச் சந்தையில், "இன்சைடர் டிரேடிங்' மூலம் 100 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தது கண்டுபிடிக்கப் பட்டது.

அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய மோசடிகளில் இதுவும் ஒன்று. இதையடுத்து, கடந்த வெள்ளியன்று கைது செய்யப்பட்டனர்.இவர்கள் ஆறு பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். "இவர்கள் ஆறு பேரும் பங்குச் சந்தையில் பணியாற்றும் சிலர் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தகவல்களைப் பெற்று, அதை மற்றவர்களுக்கு தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் வர்த்தகத்தை நடக்க வைத்து, பெரும்மோசடி செய்துள்ளனர்' என, நியூயார்க் அட்டர்னி ஜெனரல் பிரீத் பாராரா கூறியுள்ளார்.
-------------------------------------
இப்போ நம்ம இந்தியர்கள்தான் உலகம் முழுக்க பொய்,பித்தலாட்டம்,பிராடு வேளைகளில் இறங்கியுள்ளனர்.எந்த ஒரு நியூஸ் சேனலை திருப்பினாலும்,இதோ போன்ற செய்திதான்.உள்நாட்டிலும் இப்பிடி,வெளி நாட்டில் வந்தும் இப்பிடியா.
சில கம்பெனிகளின் வெப் சைட்டை திறந்து பார்த்தால்,ஒரு எச்ச்காரிக்கை வரும்,அது"இந்தியாவுக்கு,இந்தியர்களுக்கு சரக்கு அனுப்ப முடியாது"(due to fraud)என்று.அந்த அளவுக்கு இந்தியாவின் பெயர் இவர்கள் மூலம் நாறிப் போய்விட்டது.

Friday, October 16, 2009

படித்தேன்,பகிர்ந்தேன்!

செய்தி

வேதாரண்யம் அருகே தலித்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றபோது ஊர் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதையடுத்து போலீசார் சுப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

வேதாரண்யம் அருகே உள்ள செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் தலித்கள் அனுமதிக்கபடுவதில்லை.

இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்து வந்தன. இந் நிலையில் தலித்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்ல அரசு நடவடிக்கை எடுத்தது.

ஆர்டிஓ ராஜேந்திரன் தலைமையில் இன்று தலித்துக்கள் ஆலய பிரவேசம் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தலித்துக்களை இன்று காலை ஆர்டிஓ அழைத்து வந்தபோது அதை எதிர்த்து ஊர் மக்கள் திரண்டனர். தலித்துக்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று கூறி கலாட்டா செய்தனர்.

எதிர்ப்பை மீறி தலித்களை போலீசார் ஆலயத்துக்குள் அழைத்துச் சென்றபோது அவர்கள் மீது கூட்டத்தினர் சரமாரியாக கல் வீச்சு தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீசார் 10 வானத்தை நோக்கி சுட்டானர்.இதையடுத்து கூட்டம் கூட்டம் கலைந்து ஓடியது.

அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

----------------------------------------

கருத்து

தலித் சகோதரா எம் தோளோடு,தோள்சேர்ந்து தொழவாருங்கள்.

எம் மார்கத்தில் இணைந்து விட்டால் சாதி,பேதம் உயர்வு தாழ்வில்லை சகோதரா!

நீ என்னேரத்திலும் இறையில்லம் நுழையலாம் தடைப்போட யாருக்கும் அதிகாரம் இல்லை.

யாவரும் ஒரே தட்டில் உண்ணலாம்,ஓரே குவளையில் பருகலாம்.

வா சகோதர உன் வாழ்வின் வசந்த வாசல் திறந்தே இருக்கிறது ,சமத்துவம் என்னும் மகத்துவம் அடையலாம்.

-CROWN.
-------------------------------------

கமென்ட்

முன்பு காளிதாஸ்(இன்னாள்)அப்துல்லா said...

தாழ்த்தபட்ட இழினிலை மாறனுன்னா இந்து மதத்தை விட்டு விடச் சொன்ன அன்னல் அம்பேத்கார்,பெரியார் மற்றும் பல அறிஞர்கள் சுட்டிக்காட்டிய உன்னத மார்கம் இஸ்லாம் ஒன்றே!இந்த மண்ணுக்கேற்ற மார்கம் இஸ்லாம்னு சொல்லிச்சென்ற அன்பர் வலம்புரிஜான்,இஸ்லாத்தைத் தழுவி சமத்துவம் பெற்ற அடியார்,டாக்டர் சேப்பன் அண்ணன் போன்றோர்களின் வாழ்கை சுதந்திரத்தை பெற நானும் அந்த இயற்கை மார்கத்தில் இணைந்து இன்றும் சமத்துவ காற்றை சுவாசிக்கிறேன்.
------------------------------------------

VANJOOR said...
CLICK AND READ THE TWO ARTICLES BELOW:-

ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவு நீங்காது, ஒழியாது.+" கிறிஸ்தவ ஜாதி சனியன்"+ இன வேற்றுமையை ஒழித்த இஸ்லாம்
**********************

இஸ்லாம் ஏன் ? எதற்காக ? - பெரியார். !!!
------------------------------------------

இருபத்தி ஒண்ணாம் நூற்றாண்டுன்னு சொல்றோம்,ஆனா தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லப்படும் சூத்திரர்களை இப்படி பாடுபடுத்துகிறார்கள்.என் மனதை கரைத்த இந்த செய்தி,படித்தவுடன்,மனம் கரைந்துவிட்டது.எனவே மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என பதிவிட்டுள்ளேன்.இது http://adiraipost.blogspot.com/2009/10/blog-post_14.html மூலம் எடுக்கப்பட்டது,அந்த தளத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் கருத்தை எதிர் பார்க்கிறேன்..

Saturday, October 10, 2009

வேணாங்க இந்த பொழப்பு.

பல பதிவுகளுக்குள்ள செய்திகளை சகோதரர்கள் நம்மிடையே பகிர்ந்துகொண்டுள்ளனர்.அல்ஹம்துலில்லாஹ்.அனைவருக்கும் நன்றி.அவைகளுக்கு பதில் தரும் விதமாக,நானும் பின்னூட்டமிட்டால்,இன்னும் நீண்டுவிடும்.எனவே,அவைகளை வைத்து,தனி கட்டுரை போட்டால்,இன்னும் ஈசியாக இருக்கும் என எண்ணி,இங்கு பதிவிடுகிறேன்.

//குறிப்பாக கலிஃபோர்னியா மாநிலத்தில் வேலை செய்யும் 95% அதிரைவாசிகள் இது போன்ற கடைகளில்தான் ஊழியம் செய்கிறார்கள். சிலர் இதை நியாயப் படுத்தியும் வாதம் செய்கிறார்கள். நாம்தான் குடிக்கவில்லையே மதுவை விற்கதானே செய்கிறோம். இது கூடும் என்று சொந்த ஃபத்வா கொடுத்த்க் கொள்கிறார்கள்.அக் கடைகளில் மதுவகைகள், ஆபாச புத்தகம்/விடியோ சி.டி, போதை மருந்து ஏற்றும் உபகரணங்கள்,வட்டி,இன்னும் ஏராளமான ஹராமான பொருள்கள் தினசரி விற்கப்பபடுகிறது.முழு நேரமும் கல்லாவில் நின்று விற்பவர்களும் நமது ஊர் மக்களே!இக்கடைகளில் வேலை செய்வதால் மேற்கண்ட தவறான பழக்கங்களிலும் சிலர் அடிமைபடுத்தப்படுகிறார்கள். எச்சரிக்கை ஹலால் ஹராம் பேனுங்கள்//

சகோ உமர் பாருக்கின் கருத்து என் மொத்த கட்டுரையையும் பிரதிபலிப்பதாக உள்ளது.அந்த சகோதரரின் கருத்து,எல்லா மக்களையும் சென்ற சேரட்டும்.//அஸ்ஸலாமு அழைக்கும், உங்கள் கருத்துகள் ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள், அதிராம்பட்டினம் கலிபோர்னியா வாசிகள் நிறையபேர் லிக்கர் ஷாப் யானும் சாராய கடைலதான் வேலை பார்க்கிறார்கள் அங்கு சாராயம் மட்டும் இல்ல லாட்டரி என்கிற சூது மற்றும் செக்கேசின்ங் என்கிற வட்டி மற்றும் ஆபாச புத்தகம்/விடியோ சி.டி போன்ற எல்லா ஹராமான பொருள்கலும் இருக்கு நிறையபேர் வேலைபார்க்கிரங்கள் இதில் சிலர் முதலாளியாகவும் இருக்காங்க, ரொம்ப கவலைபடுற செய்தியா இருக்கு. இதில் மார்க்கம் தெரியதாவர்கள் தான் இப்படி என்றால் வூரில் வாய்கிழிய தவ்கீத் பேசியவர்களும் கொள்கை கோமான்களாக இருந்தவர்களும் இதில் அடக்கம். என்ன செய்ய பணம் பத்தும் செய்யும் என்பார்கள் அது இதுதான் போல இருக்கு.//

அபூ சுமையாவின் இந்த ஆதங்கம் நமக்கு புரிகிறது.சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து,திருந்தினால்,அவரவர்க்கு நல்லது.

//Allah May accept our good deeds.

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (2:168)

நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும் அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான். (2:169)

We need to remind our brothers/sisters about Islamic principles.//

ஜகாங்கீரின் குரான் நினைவூட்டல் மிக அருமை.நன்றி

//சகோதரி பாத்திமா ஜொஹராவுக்கு, உங்கள் கருத்துக்கள் சிறப்பாக உள்ளது குறிப்பாக நம் மார்க்கத்தை ஒட்டி உள்ளது, ஆனால் உங்கள் எழுத்து முறை மற்றும் தலைப்பு மிக மோசமாக உள்ளது. ஒன்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் "எல்லா ஆண்களும் கேட்டவர்கள் இல்லை அதே சமயத்தில் எல்லா பெண்களும் நல்லவர்கள் இல்லை" இதை நீங்கள் கட்டுரை எழுதும்போது மனதில் கொள்ளவேண்டும். உங்களுடைய கட்டுரையை பலர் படித்து பயன்பெற வேண்டுமானால் நீங்கள் எழுத்து நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும்.//


//Yes, I accept Saudi Friends comment. Your message could be important to the public. But, you have to say in good manner, we are muslims and have to respect all. If your aim is writing against men, you should not take holy quran verses and Rasool (S.A.W.S) hadiths. If your blog should be read by all, and should be helpful to public, avoid such titles. Everyone who gave comments in your site, is happy because you are a islamic women who have come forward to create a blog. I am proud to see your site. It is my advise to my sister.

Noor.//

சவூதி பிரன்ட்,நூர் உங்கள் கருத்து மிக்க நன்று.இன்ஷா அல்லாஹ்,என் தலைப்பிலும்,வார்த்தைகளிலும் மிருதுவானத்தை கை கொள்கிறேன்.ஆண்கள் என் எதிரிகள் அல்ல.ஆனால். பொதுவாக ஆண்கள் தன கைகளால் சம்பாதித்து,அவர் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பில் உள்ளவர்,ஹலாலான சம்பாத்தியத்துக்கு பதில் ஹராமான சம்பாத்தியம் செய்து,மனைவின் கழுத்தில் ஹராமான நகைகளை அணிவித்து அழகு பார்த்தும்,ஹராமான சம்பாத்தியத்தில் சாப்பாடு போட்டும் வரும் நபர்கள்,இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை பேணாதவர்கள்,(நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஆற்றிய இறுதி உரையில் பெண்கள் பற்றிய கரிசனம் பற்றி இந்து,கிறிஸ்தவ சகோதர,சகோதரிகள் அறிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவர்கள்)இவர்கள் மேல் தான் கோபமே தவிர,உங்களைப்போன்ற நல்ல சகோதரர்கள் மேல் அல்ல.

Sunday, October 4, 2009

நாத்த பொழப்புடா இது?சாட்டையடி 5

அது ஒரு பண்டிகை நாள்.பெரியவர் முதல்,சின்னஞ் சிறார் முதல் புத்தாடை உடுத்தி,அணிகலன் அணிந்து மகிழ்ச்சி பொங்க உலா வரும் நேரம்.இரு சிறுவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

"டேய் என்னடா இப்படி இருக்கே.புது சட்டையும்,புது வாட்சும்,வேட்டியும் ஜோலிக்கிரே? எனக்கு இன்னக்கி போன பண்டிகையில எடுத்த சட்டதாண்டா?

"ஆமாம்டா,இது எங்க வாப்பா அனுப்பினாரு".

:அப்படியா,உங்க வாப்பா என்ன பன்றாருடா?

எங்க வாப்பா அமெரிக்காவுல இருக்கார்.

அப்படியா,ரொம்ப நல்லதுடா.அழகான ஊராச்சே.

ஆமாடா,ரொம்ப நல்ல ஊரு,நாங்களும் போகப் போறோம்.

சரிடா,என்ன வேல பாக்குறாரு?

அவர் எதோ லிக்கர் ச்டோராம்(சாராயக் கடை) அதுல வேலை பாக்குறார்.

"அடப் பாவி,என்னடா சொல்லுறே,சாராயக் கடைன்னு சும்மா சாதாரணமா சொல்லுறே.அது பெரிய பாவம்டா.நம்ம நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சாராயம் வாங்குறவன்,விக்கிறவன்,குடிக்கிறவன்,இப்படி எந்த வகையில சாராயத்தோட சம்பந்தப்பட்டாலும் அல்லாஹ் அவனை சபிக்கிரான்னு சொல்லி இருக்காங்க.அது மட்டும் இல்ல,ஹராமான சம்பாத்தியம் செய்றவன் துவா-பிரார்த்தனை கூட அல்லாஹ் எத்துக்கமாட்டான்னும் சொல்லி இருக்காங்க.எங்க வாப்பா பெஸ்ட்டா.நான் பழைய சட்டை போட்டாலும்,ஹலாலான சம்பாத்தியம் செஞ்சு எங்களை கவனிக்கிறார்.எங்க துவாவை அல்லாஹ் எத்துக்குவான்.இன்ஷா அல்லாஹ்."

இதைக் கேட்ட அந்த சிறுவன்,தன வாட்சை கழற்றி சாக்கடையில் எறிந்தான்,சட்டையை கழற்றி வீசினான்.கண்கள் பணிக்க சொன்னான்,"இறைவா,என் தந்தையை காப்பாற்று,ஹலாலான வேலை பார்க்க உதவி செய்,எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்."

(இதில் குறிப்பிடப்படும் செய்திகள் யாவும்,யாரையும் அல்லது தனிப்பட்ட நபர்களை குறிப்பவை அல்ல. ஆனால் அப்படி யாராவது சாராய சம்பாத்தியத்தில் இருந்தால் இன்றே திருந்துங்கள்-இது குரான்,ஹதீஸ் மூலம் விடுக்கப்படும் எச்சரிக்கை.)

Thursday, October 1, 2009

சொல்லாமல் கொல்லும் சேதி.


பெற்ற தாயை வீட்டில் வைத்து கவனிக்காமல் - இப்படி இந்த முதிய வயதிலும் கஷ்டப்பட வைத்த அந்த கயவனை கூண்டிலேற்றுங்கள்!

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஒர் ஒட்;டகத்தைக் கடந்து சென்றார்கள். அந்த ஒட்டகத்தின் முதுகு அதன் வயிற்றுடன் ஒட்டியிருந்தது. எனவே, அண்ணலார் கூறினார்கள்: இந்த வாயில்லாப் பிராணிகளின் விஷயத்தில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அவை ஆரோக்கியமாக நல்ல நிலையில் இருக்கும்போது அவற்றின் மீது சவாரி செய்யுங்கள், நல்ல நிலையிலேயே அவற்றை விட்டு இறங்குங்கள். அறிவிப்பாளர் : ஸுஹைல் பின் ஹன்ஸா (ரலி) (அபூதாவூத்)


ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் மிக அழகிய முறையில் நடந்து கொள்ள மிகவும் தகுதி பெற்றவர் யார்?'' என்று கேட்டார். நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "உமது தாய், பின்பும் உமது தாய், பின்பும் உமது தாய், பிறகு உமது தந்தை, அதற்குப் பிறகு உமக்கு மிக நெருக்கமாக இருப்பவர், அடுத்து உமக்கு நெருக்கமாக இருப்பவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)