
பெற்ற தாயை வீட்டில் வைத்து கவனிக்காமல் - இப்படி இந்த முதிய வயதிலும் கஷ்டப்பட வைத்த அந்த கயவனை கூண்டிலேற்றுங்கள்!
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஒர் ஒட்;டகத்தைக் கடந்து சென்றார்கள். அந்த ஒட்டகத்தின் முதுகு அதன் வயிற்றுடன் ஒட்டியிருந்தது. எனவே, அண்ணலார் கூறினார்கள்: இந்த வாயில்லாப் பிராணிகளின் விஷயத்தில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அவை ஆரோக்கியமாக நல்ல நிலையில் இருக்கும்போது அவற்றின் மீது சவாரி செய்யுங்கள், நல்ல நிலையிலேயே அவற்றை விட்டு இறங்குங்கள். அறிவிப்பாளர் : ஸுஹைல் பின் ஹன்ஸா (ரலி) (அபூதாவூத்)
ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் மிக அழகிய முறையில் நடந்து கொள்ள மிகவும் தகுதி பெற்றவர் யார்?'' என்று கேட்டார். நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "உமது தாய், பின்பும் உமது தாய், பின்பும் உமது தாய், பிறகு உமது தந்தை, அதற்குப் பிறகு உமக்கு மிக நெருக்கமாக இருப்பவர், அடுத்து உமக்கு நெருக்கமாக இருப்பவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
6 comments:
நல்ல கருத்தினை இஸ்லாம் சொன்ன வழியில் மேற்கோள் காட்டியிருப்பது பாரட்டுதலுக்குறியது.
ரொம்ப நாளா பதிவு காணுமேன்னு பார்த்தேன்..பெற்றி தாயை மனிதாபிமானமின்றி கஷ்டப்பட வைப்பவர்களுக்கு கண்டிப்பாக கடவுள் தண்டனை கொடுப்பார் பாத்திமா....
அன்புடன்,
அம்மு.
//நல்ல கருத்தினை இஸ்லாம் சொன்ன வழியில் மேற்கோள் காட்டியிருப்பது பாரட்டுதலுக்குறியது.//
நன்றி தஸ்தகீர் காக்கா.
ரொம்ப நாளா பதிவு காணுமேன்னு பார்த்தேன்..பெற்றி தாயை மனிதாபிமானமின்றி கஷ்டப்பட வைப்பவர்களுக்கு கண்டிப்பாக கடவுள் தண்டனை கொடுப்பார் பாத்திமா....
சரியாக சொன்னீர்கள் அம்மு.எங்கே உங்களை காணோம் என்று பார்த்தேன்.நன்றாக இருக்கிறீர்களா?
இன்ஷா அல்லாஹ் இறைவன்,தாய்-தந்தையை கொடுமை படுத்துபவர்களை தண்டிப்பான்.
தாய்-தந்தையை கொடுமை படுத்துபவர்களுக்கு இறைவன் இந்த உலகிலேயே தண்டனை கொடுப்பான் என்பது இறைவனின் தூதர் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் சொல்லாகும்.
தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது இதும் அவர்களின் மொழியே.
உங்கள் பதிவுகள் மிகவும் நன்று. உலகில் நல்ல கருத்துக்களுடன் உலாவரும் www.anboduungalai.blogspot.com க்கு வாழ்த்துக்கள். வல்ல ரஹ்மானின் உதவியுடன் தொடருங்கள்.
நூர் கூத்தாநல்லூர்.
www.knrweb.co.cc
அருமையான பகிர்வு பாத்திமா
நன்றி ஜலீலா அக்கா,வீட்டுல எல்லாருக்கும் சலாம் சொல்லுங்க,தொழுகையில எங்களுக்கும் துவா செய்ங்க.
Post a Comment