Sunday, October 4, 2009

நாத்த பொழப்புடா இது?சாட்டையடி 5

அது ஒரு பண்டிகை நாள்.பெரியவர் முதல்,சின்னஞ் சிறார் முதல் புத்தாடை உடுத்தி,அணிகலன் அணிந்து மகிழ்ச்சி பொங்க உலா வரும் நேரம்.இரு சிறுவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

"டேய் என்னடா இப்படி இருக்கே.புது சட்டையும்,புது வாட்சும்,வேட்டியும் ஜோலிக்கிரே? எனக்கு இன்னக்கி போன பண்டிகையில எடுத்த சட்டதாண்டா?

"ஆமாம்டா,இது எங்க வாப்பா அனுப்பினாரு".

:அப்படியா,உங்க வாப்பா என்ன பன்றாருடா?

எங்க வாப்பா அமெரிக்காவுல இருக்கார்.

அப்படியா,ரொம்ப நல்லதுடா.அழகான ஊராச்சே.

ஆமாடா,ரொம்ப நல்ல ஊரு,நாங்களும் போகப் போறோம்.

சரிடா,என்ன வேல பாக்குறாரு?

அவர் எதோ லிக்கர் ச்டோராம்(சாராயக் கடை) அதுல வேலை பாக்குறார்.

"அடப் பாவி,என்னடா சொல்லுறே,சாராயக் கடைன்னு சும்மா சாதாரணமா சொல்லுறே.அது பெரிய பாவம்டா.நம்ம நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சாராயம் வாங்குறவன்,விக்கிறவன்,குடிக்கிறவன்,இப்படி எந்த வகையில சாராயத்தோட சம்பந்தப்பட்டாலும் அல்லாஹ் அவனை சபிக்கிரான்னு சொல்லி இருக்காங்க.அது மட்டும் இல்ல,ஹராமான சம்பாத்தியம் செய்றவன் துவா-பிரார்த்தனை கூட அல்லாஹ் எத்துக்கமாட்டான்னும் சொல்லி இருக்காங்க.எங்க வாப்பா பெஸ்ட்டா.நான் பழைய சட்டை போட்டாலும்,ஹலாலான சம்பாத்தியம் செஞ்சு எங்களை கவனிக்கிறார்.எங்க துவாவை அல்லாஹ் எத்துக்குவான்.இன்ஷா அல்லாஹ்."

இதைக் கேட்ட அந்த சிறுவன்,தன வாட்சை கழற்றி சாக்கடையில் எறிந்தான்,சட்டையை கழற்றி வீசினான்.கண்கள் பணிக்க சொன்னான்,"இறைவா,என் தந்தையை காப்பாற்று,ஹலாலான வேலை பார்க்க உதவி செய்,எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்."

(இதில் குறிப்பிடப்படும் செய்திகள் யாவும்,யாரையும் அல்லது தனிப்பட்ட நபர்களை குறிப்பவை அல்ல. ஆனால் அப்படி யாராவது சாராய சம்பாத்தியத்தில் இருந்தால் இன்றே திருந்துங்கள்-இது குரான்,ஹதீஸ் மூலம் விடுக்கப்படும் எச்சரிக்கை.)

14 comments:

Anonymous said...

குறிப்பாக கலிஃபோர்னியா மாநிலத்தில் வேலை செய்யும் 95% அதிரைவாசிகள் இது போன்ற கடைகளில்தான் ஊழியம் செய்கிறார்கள். சிலர் இதை நியாயப் படுத்தியும் வாதம் செய்கிறார்கள். நாம்தான் குடிக்கவில்லையே மதுவை விற்கதானே செய்கிறோம். இது கூடும் என்று சொந்த ஃபத்வா கொடுத்த்க் கொள்கிறார்கள்.அக் கடைகளில் மதுவகைகள், ஆபாச புத்தகம்/விடியோ சி.டி, போதை மருந்து ஏற்றும் உபகரணங்கள்,வட்டி,இன்னும் ஏராளமான ஹராமான பொருள்கள் தினசரி விற்கப்பபடுகிறது.முழு நேரமும் கல்லாவில் நின்று விற்பவர்களும் நமது ஊர் மக்களே!இக்கடைகளில் வேலை செய்வதால் மேற்கண்ட தவறான பழக்கங்களிலும் சிலர் அடிமைபடுத்தப்படுகிறார்கள். எச்சரிக்கை ஹலால் ஹராம் பேனுங்கள்

Umar Farooq said...

Sultan said...

I wanna ask you, What job you are doing in US? and your work environment....pls...?

Sultan said...

I wanna ask you, What Job you are doing in US and the work environment.....?

பாத்திமா ஜொஹ்ரா said...

mr sultan don't suppot haram earning.allah is watching us.insha allah,everybody will die oneday,and allah will ask about our earnings too.be careful.if u do haram job,leave it,if somebody do it,tell them and don't support them.

hajashareef said...

Assalamu Alaikkum.
Your website is going in the good way.
Proceed it.
I have noticed the world clock today, it shows the wrong timings ( ex. sydney, dubai,melbourne etc.)

பாத்திமா ஜொஹ்ரா said...

நியூயார்க்கிலிருந்து ஒரு சகோதரர் என் கணவருக்கு போன் பண்ணி,இன்னார் இன்னார் சாராயக் கடையில் வேலை பார்க்கிறார்கள்,என்று ஒரு லிஸ்ட் கொடுத்துள்ளார்,அவைகளை வெளியிட சொல்லி.அப்படி வெளியிட்டால் அவர்களுடைய பணத்தை பள்ளிவாசல்,மற்றும் நல்ல காரியங்களுக்கு அவர்கள் பணத்தை வாங்காமல் இருக்க வசதியாக இருக்கும் என்று சொல்லியுள்ளார்.நல்ல எண்ணத்தில் அப்படி அவர் சொல்லியுள்ளார்,எனினும் யாரையும் புண்படுத்துவது நம் நோக்கம் அல்ல.அவர்கள் திருந்தினாலே போதும்,அவர்களையும்,நம்மையும் அல்லாஹ் மன்னிக்கப்போதுமானவன்.இன்ஷா அல்லாஹ்,யார் பெயரையும் வெளியிடும் எண்ணம் எனக்கில்லை.

பாத்திமா ஜொஹ்ரா said...

yes bro sultan.I am doing my job with hijab,and also I am following all islamic principles.: Islam is my breath,alhamthulillaah,I am following it. there is no penny going to my pocket for writing about haram earners.But I need to tell them what they are doing are haram.insha allah,I will get reward from allah : if they stop,it is good for them,if not,no problem,it is upto allah and them,that's it

Anonymous said...

Dear sister,
Your article headings are always not good. Please use good words in your article's headings. Take this brotherhood.
Your brother!

ABU SUMAIYA said...

அஸ்ஸலாமு அழைக்கும், உங்கள் கருத்துகள் ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள், அதிராம்பட்டினம் கலிபோர்னியா வாசிகள் நிறையபேர் லிக்கர் ஷாப் யானும் சாராய கடைலதான் வேலை பார்க்கிறார்கள் அங்கு சாராயம் மட்டும் இல்ல லாட்டரி என்கிற சூது மற்றும் செக்கேசின்ங் என்கிற வட்டி மற்றும் ஆபாச புத்தகம்/விடியோ சி.டி போன்ற எல்லா ஹராமான பொருள்கலும் இருக்கு நிறையபேர் வேலைபார்க்கிரங்கள் இதில் சிலர் முதலாளியாகவும் இருக்காங்க, ரொம்ப கவலைபடுற செய்தியா இருக்கு. இதில் மார்க்கம் தெரியதாவர்கள் தான் இப்படி என்றால் வூரில் வாய்கிழிய தவ்கீத் பேசியவர்களும் கொள்கை கோமான்களாக இருந்தவர்களும் இதில் அடக்கம். என்ன செய்ய பணம் பத்தும் செய்யும் என்பார்கள் அது இதுதான் போல இருக்கு.

jahangir said...

Allah May accept our good deeds.

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (2:168)

நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும் அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான். (2:169)

We need to remind our brothers/sisters about Islamic principles.

Saudi Friend said...

சகோதரி பாத்திமா ஜொஹராவுக்கு, உங்கள் கருத்துக்கள் சிறப்பாக உள்ளது குறிப்பாக நம் மார்க்கத்தை ஒட்டி உள்ளது, ஆனால் உங்கள் எழுத்து முறை மற்றும் தலைப்பு மிக மோசமாக உள்ளது. ஒன்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் "எல்லா ஆண்களும் கேட்டவர்கள் இல்லை அதே சமயத்தில் எல்லா பெண்களும் நல்லவர்கள் இல்லை" இதை நீங்கள் கட்டுரை எழுதும்போது மனதில் கொள்ளவேண்டும். உங்களுடைய கட்டுரையை பலர் படித்து பயன்பெற வேண்டுமானால் நீங்கள் எழுத்து நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும்.

Anonymous said...

Yes, I accept Saudi Friends comment. Your message could be important to the public. But, you have to say in good manner, we are muslims and have to respect all. If your aim is writing against men, you should not take holy quran verses and Rasool (S.A.W.S) hadiths. If your blog should be read by all, and should be helpful to public, avoid such titles. Everyone who gave comments in your site, is happy because you are a islamic women who have come forward to create a blog. I am proud to see your site. It is my advise to my sister.

Noor.