Friday, October 16, 2009

படித்தேன்,பகிர்ந்தேன்!

செய்தி

வேதாரண்யம் அருகே தலித்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றபோது ஊர் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதையடுத்து போலீசார் சுப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

வேதாரண்யம் அருகே உள்ள செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் தலித்கள் அனுமதிக்கபடுவதில்லை.

இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்து வந்தன. இந் நிலையில் தலித்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்ல அரசு நடவடிக்கை எடுத்தது.

ஆர்டிஓ ராஜேந்திரன் தலைமையில் இன்று தலித்துக்கள் ஆலய பிரவேசம் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தலித்துக்களை இன்று காலை ஆர்டிஓ அழைத்து வந்தபோது அதை எதிர்த்து ஊர் மக்கள் திரண்டனர். தலித்துக்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று கூறி கலாட்டா செய்தனர்.

எதிர்ப்பை மீறி தலித்களை போலீசார் ஆலயத்துக்குள் அழைத்துச் சென்றபோது அவர்கள் மீது கூட்டத்தினர் சரமாரியாக கல் வீச்சு தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீசார் 10 வானத்தை நோக்கி சுட்டானர்.இதையடுத்து கூட்டம் கூட்டம் கலைந்து ஓடியது.

அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

----------------------------------------

கருத்து

தலித் சகோதரா எம் தோளோடு,தோள்சேர்ந்து தொழவாருங்கள்.

எம் மார்கத்தில் இணைந்து விட்டால் சாதி,பேதம் உயர்வு தாழ்வில்லை சகோதரா!

நீ என்னேரத்திலும் இறையில்லம் நுழையலாம் தடைப்போட யாருக்கும் அதிகாரம் இல்லை.

யாவரும் ஒரே தட்டில் உண்ணலாம்,ஓரே குவளையில் பருகலாம்.

வா சகோதர உன் வாழ்வின் வசந்த வாசல் திறந்தே இருக்கிறது ,சமத்துவம் என்னும் மகத்துவம் அடையலாம்.

-CROWN.
-------------------------------------

கமென்ட்

முன்பு காளிதாஸ்(இன்னாள்)அப்துல்லா said...

தாழ்த்தபட்ட இழினிலை மாறனுன்னா இந்து மதத்தை விட்டு விடச் சொன்ன அன்னல் அம்பேத்கார்,பெரியார் மற்றும் பல அறிஞர்கள் சுட்டிக்காட்டிய உன்னத மார்கம் இஸ்லாம் ஒன்றே!இந்த மண்ணுக்கேற்ற மார்கம் இஸ்லாம்னு சொல்லிச்சென்ற அன்பர் வலம்புரிஜான்,இஸ்லாத்தைத் தழுவி சமத்துவம் பெற்ற அடியார்,டாக்டர் சேப்பன் அண்ணன் போன்றோர்களின் வாழ்கை சுதந்திரத்தை பெற நானும் அந்த இயற்கை மார்கத்தில் இணைந்து இன்றும் சமத்துவ காற்றை சுவாசிக்கிறேன்.
------------------------------------------

VANJOOR said...
CLICK AND READ THE TWO ARTICLES BELOW:-

ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவு நீங்காது, ஒழியாது.+" கிறிஸ்தவ ஜாதி சனியன்"+ இன வேற்றுமையை ஒழித்த இஸ்லாம்
**********************

இஸ்லாம் ஏன் ? எதற்காக ? - பெரியார். !!!
------------------------------------------

இருபத்தி ஒண்ணாம் நூற்றாண்டுன்னு சொல்றோம்,ஆனா தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லப்படும் சூத்திரர்களை இப்படி பாடுபடுத்துகிறார்கள்.என் மனதை கரைத்த இந்த செய்தி,படித்தவுடன்,மனம் கரைந்துவிட்டது.எனவே மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என பதிவிட்டுள்ளேன்.இது http://adiraipost.blogspot.com/2009/10/blog-post_14.html மூலம் எடுக்கப்பட்டது,அந்த தளத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் கருத்தை எதிர் பார்க்கிறேன்..

3 comments:

Mohamed thasthageer said...

அஸ்ஸலாமுஅலைக்கும், நன்றி சகோதரி.தாங்கள் படித்ததோடல்லாமல் அதை நல் எண்ணம் கொண்டு உங்கள் தளத்திலும் வெளியிட்டு மற்றவர்களின் பார்வைக்கு வைத்ததற்கு!எல்லாப்புகழும் அல்லஹுக்கே!
MohamedThageer(crown)

மணி வாசகன் said...

வர்நாமசிரத்தை போதிக்கும் இந்து மதத்தை விட்டு,எப்போது இந்துக்கள் வெளிவந்தது,இன விடுதலைக்கு இஸ்லாமே நன் மருந்து என்று சொன்ன பெரியாரை மதித்து,இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்களோ அன்றுதான்,பள்ளர்,பறையர் இன்னும் எல்லா மக்களுக்கும் விடுதலை.

jahangir said...

(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;.
அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்;. அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். Al Quran (2:213)


'ஓர் அடியார் இஸ்லாத்தைத் தழுவி, அவரின் இஸ்லாம் அழகு பெற்றுவிட்டால் அவர் அதற்கு முன் செய்த அனைத்துத் தீமைகளையும் அல்லாஹ் மாய்த்து விடுகிறான். அதன் பின்னர் 'ம்ஸாஸ்' (உலகில் சக மனிதனுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்குரிய தண்டனை) உண்டு! (அவர் செய்யும்) ஒவ்வொரு நல்லறத்திற்கும் அது போன்ற பத்து முதல் எழுநூறு வரை நன்மைகள் பதியப்படும். (அவர் புரியும்) ஒவ்வொரு தீமைக்கும் (தண்டனையாக) அதைப் போன்றதுதான் உண்டு. அதையும் அல்லாஹ் அவருக்கு மன்னித்து விட்டால் அதுவும் கிடையாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

Buhari : பாகம் 1, அத்தியாயம் 2, எண் 41

The prime message of Islam is the Unity of God, that the Creator of the world is One and He alone is worthy of worship and that Muhammad (peace and blessings on him) is His Messenger and Servant.

Jahangir.