அது நடந்தது 1912ம் வருடம் .மிக மிக ஆடம்பரம்,டாம்பீகம் மற்றும் என்ன என்ன இத்யாதிகள் இருக்கோ, அது எல்லாத்தையும் சேர்த்து ஒரு மிக பிரம்பாண்டமான கப்பல் கட்டினான் லார்ட் பிர்ரி என்பவன்.
நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்து,என்னென்ன தொழில் நுட்பம் உண்டோ அது எல்லாத்தையும் கொண்டு உருவாகிய அது தன் பயணத்தை (முதலும் கடைசியுமான) இங்கிலாந்திலிருந்து நியூயார்க் நகரம் நோக்கி தொடர ஆரம்பித்தது.
அதன் கொள்ளளவு சுமார் 2200 பயணிகள்.எல்லாரும் கூத்தும் கொண்டாட்டமும் குடியுமாக பயணம் தொடர்ந்து கொண்டிருக்க,
பயணமான நான்கே நாட்கள்,இரண்டாக பிளந்து - கடலில் மூழ்கியது.அதுதான் டைடானிக் கப்பல்.இதைப் பற்றி நாம் பல மீடியாக்கள் மூலம் அறிந்திருப்போம்.ஆனால் செய்தி அதுவல்ல.
அந்தக் கப்பல் தன் பயணத்தைத் தொடருமுன்,லார்ட் பிர்ரி பத்திரிக்கையாளர்களை கூட்டினான்.அந்த கப்பலின் பிரம்மாண்டம் பற்றி விவரித்தான்.ஒரு பத்திரிக்கையாளன் கேட்ட கேள்விக்கு,அவன் சொன்னான் ஒரு ஆணவமான-திமிரான பதில்.அதுதான் இங்கு செய்தி.
"இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.அந்த அளவுக்கு உறுதியாக,பல்வேறு தொழில் நுட்பம் கொண்டு கட்டியுள்ளோம்"என்றான்.
அந்தி திமிர்,ஆணவம்,இறுமாப்பு,நான்கே நாட்களில் கப்பலோடு புதையுண்டு போனது.
இது நேற்று நடந்த வரலாறு.
பல ஆண்டுகள் முன்பு நடந்த வரலாறுகள் பல.
இப்ராஹீம் நபியை ஏற்காது,ஏக இறைவனை ஏற்காது ஆணவம் கொண்ட நம்ரூது,ஹாமான்,
மூஸா நபியை,ஏக இறைவனை மறுத்த பிறவுன்(பாரோ)இன்னும் பல அத்தாட்சிகள் நிறைந்து காணப்படுகின்றன குர் ஆனில்.எச்சரிக்கை கொள்வோம்,ஆணவம் தவிர்ப்போம்.
************************************************அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத்
அண்ணல் நபி
அறிவிப்பாளர் : ஹாரிஸ் பின் வஹ்ப் (ரலி)
அண்ணல் நபி
அவர்கள் நவின்றார்கள்: “பெருமையடிப்பவன் சுவனத்தில் நுழையமாட்டான். பொய்ப் பெருமை பேசித் திரிபவனும் சுவனத்தில் நுழையமாட்டான். ” (அபூதாவூத்)
அண்ணல் நபி
அண்ணல் நபி
