Thursday, April 22, 2010

அதோட சேர்ந்து - இதுவும் அழிந்தது


அது நடந்தது  1912ம் வருடம் .மிக மிக ஆடம்பரம்,டாம்பீகம் மற்றும் என்ன என்ன இத்யாதிகள் இருக்கோ, அது எல்லாத்தையும் சேர்த்து ஒரு மிக பிரம்பாண்டமான கப்பல் கட்டினான் லார்ட் பிர்ரி என்பவன்.

 நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்து,என்னென்ன தொழில் நுட்பம் உண்டோ அது எல்லாத்தையும் கொண்டு உருவாகிய அது தன் பயணத்தை (முதலும் கடைசியுமான) இங்கிலாந்திலிருந்து நியூயார்க் நகரம் நோக்கி தொடர ஆரம்பித்தது.

அதன் கொள்ளளவு சுமார் 2200 பயணிகள்.எல்லாரும் கூத்தும் கொண்டாட்டமும் குடியுமாக பயணம் தொடர்ந்து கொண்டிருக்க,
பயணமான நான்கே நாட்கள்,இரண்டாக பிளந்து - கடலில் மூழ்கியது.அதுதான் டைடானிக் கப்பல்.இதைப் பற்றி நாம் பல மீடியாக்கள் மூலம் அறிந்திருப்போம்.ஆனால் செய்தி அதுவல்ல.


அந்தக் கப்பல் தன் பயணத்தைத் தொடருமுன்,லார்ட் பிர்ரி பத்திரிக்கையாளர்களை கூட்டினான்.அந்த கப்பலின் பிரம்மாண்டம் பற்றி விவரித்தான்.ஒரு பத்திரிக்கையாளன் கேட்ட கேள்விக்கு,அவன் சொன்னான் ஒரு ஆணவமான-திமிரான பதில்.அதுதான் இங்கு செய்தி.
"இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.அந்த அளவுக்கு உறுதியாக,பல்வேறு தொழில் நுட்பம் கொண்டு கட்டியுள்ளோம்"என்றான்.

அந்தி திமிர்,ஆணவம்,இறுமாப்பு,நான்கே நாட்களில் கப்பலோடு புதையுண்டு போனது.

இது நேற்று நடந்த வரலாறு.
பல ஆண்டுகள் முன்பு   நடந்த வரலாறுகள் பல.
இப்ராஹீம் நபியை ஏற்காது,ஏக இறைவனை ஏற்காது ஆணவம் கொண்ட நம்ரூது,ஹாமான்,
மூஸா நபியை,ஏக இறைவனை மறுத்த பிறவுன்(பாரோ)இன்னும் பல அத்தாட்சிகள் நிறைந்து காணப்படுகின்றன குர் ஆனில்.எச்சரிக்கை கொள்வோம்,ஆணவம் தவிர்ப்போம்.  
************************************************

அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத்
அண்ணல் நபி அவர்கள் அருளினார்கள்: “எவனுடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்குமோ, அவன் சுவனத்தில் நுழைய முடியாது.” இதனைச் செவியுற்ற ஒரு மனிதர் கேட்டார்: “மனிதன் தன் ஆடைகளும் காலணியும் நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றானே? (இதுவும் தற்பெருமையா? இத்தகைய அழகுணர்ச்சி கொண்ட மனிதன் சுவனப்பேற்றை அடைய முடியாதா?” அண்ணலார் அவர்கள் நவின்றார்கள்: “(இல்லை, இது தற்பெருமையில்லை) அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையையே விரும்புகின்றான். தற்பெருமையின் பொருள், அல்லாஹ்விற்கு நாம் அடிபணிந்து வாழவேண்டிய கடமையை நிறைவேற்றாமலிருப்பதும், பிற மக்களை இழிவாகக் கருதுவதும் ஆகும்.” (முஸ்லிம்)


அறிவிப்பாளர் : ஹாரிஸ் பின் வஹ்ப் (ரலி)
அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: “பெருமையடிப்பவன் சுவனத்தில் நுழையமாட்டான். பொய்ப் பெருமை பேசித் திரிபவனும் சுவனத்தில் நுழையமாட்டான். ” (அபூதாவூத்)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்
அண்ணல் நபி
அவர்கள் கூறுகின்றார்கள்: “நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள், விரும்புவதை அணியுங்கள். ஆனால், ஒரு நிபந்தனை. உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக்கூடாது.” (புகாரி)

9 comments:

ஜெய்லானி said...

//.ஒரு பத்திரிக்கையாளன் கேட்ட கேள்விக்கு,அவன் சொன்னான் ஒரு ஆணவமான-திமிரான பதில்.அதுதான் இங்கு செய்தி.
"இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.அந்த அளவுக்கு உறுதியாக,பல்வேறு தொழில் நுட்பம் கொண்டு கட்டியுள்ளோம்"என்றான்.//

நான் இதுவரை படிக்காத செய்தியை கொடுத்துக்கு நன்றி.

ஹுஸைனம்மா said...

அடக்கமும், பணிவன்பும் எப்போதும் வேண்டும். இறைவனுக்கு அஞ்சுவோருக்கு இவையும் கைகூடும், இன்ஷா அல்லாஹ்!!

Geetha Achal said...

உண்மை...கடவுள் இல்லாமல் அனுஅளவு அசையாது...பகிர்வுக்கு நன்றி...

ராஜவம்சம் said...

ஆணவத்தில் அழிந்தவர்கள் வாழும்காலத்திலேயே அதிகம் பேர் உள்ளனர்

'ஒருவனின்' அடிமை said...

ஆணவம் அழிந்தே தீரும் என்பதில் சந்தேகமே இல்லை.சைத்தானின் இருமாப்புதான் இன்று வழி கெடுக்கிறது.அதனால்தான் அவனுக்கு நரகத்தை பரிசாக கொடுக்க இருக்கிறான் இறைவன் அல்லாஹ்.

Dubai2Adirai said...

Can You Publish Post About "Unicode Umarthambi"....

See The Link

http://bluehillstree.blogspot.com/2010/04/blog-post_17.html

Cut& Paste that Post...

NIZAMUDEEN said...

"இறைவனே நினைத்தாலும்" என்று ஆணவமாகச்
சொன்னதைத் தவிர்த்திருக்க வேண்டும். மேலும்,
"இறைவன் நாடினால்..." என்றும் சொல்ல
வேண்டும்.
இந்தக் கருத்தை 'பளிச்'சென்று விளக்கினீர்கள்.

அன்புத்தோழன் said...

நல்ல பகிர்வுக்கு நன்றி... இறைவன் நம் அனைவருக்கும் ஜன்னத்துல் பிர்தௌசை அடையக்கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக.... ஆமீன்....

Jaleela said...

.///இந்த கப்பலை இறைவனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.அந்த அளவுக்கு உறுதியாக,பல்வேறு தொழில் நுட்பம் கொண்டு கட்டியுள்ளோம்"என்றான்.//

இறைவனை மறந்தவன் எப்படி இவ்வாறு சொல்வான், அவன் நாடினால் ஒரு பெரிய மலையும் தூளாகிடுமே.அருமையான பகிர்வு பாத்திமா ஜொஹ்ரா/