Tuesday, April 27, 2010

யுனிகோட் உமர் தம்பி காக்காவுக்கு அங்கீகாரம் தருமா கலைஞர் அரசு?

தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஓரிருவரிகொண்ட மென்பொருள் நிரழிகளை இலட்சக்கணக்காண ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் பல மென்பொருள் நிரழிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டுக்கு வைத்தவர் திரு.உமர் தம்பி அவர்கள்.

விண்டோஸ் 98 பயனர்கள் தமிழிணைய தளங்களை எவ்வித சிரமமுமின்றி கணினியில் பார்வையிடவும், யூனிகோட் ஒருங்குறியில் தட்டச்சவும் உமர் தம்பி உருவாக்கிய 'தேனீ' வகை எழுத்துருக்கள் மற்றும் நிரழிகள் இன்றும் பல தமிழ்தளங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் எழுத்துறுக்கள் (Theenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அவற்றிற்குண்டான கிரடிட்டோ எதிர்பாராது சேவையாற்றியவர்.

கணினித் தமிழ் தளங்களான சங்கமம், தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி திரட்டியான தமிழ்மணம், எழில்நிலா மற்றும் அதிரை.காமிலும் பல்சுவை கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுதப்பழகுவோம் HTML, யுனிகோடும் இயங்கு எழுத்துருவும், யுனிகோடும் தமிழ் இணையமும், யுனிகோடின் பன்முகங்கள்-RSS ஓடை-ஒரு அறிமுகம்,தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு மற்றும் பல கணினித் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நான்காம் இணையத் தமிழுக்காகச்செய்த தமிழ்ச்சேவை மகத்தானது. இ-கலப்பை தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்களில் உமர்தம்பியும் ஒருவர்.

சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் (INFITT) சார்பில் நடந்த மாநாட்டில் 'உமர்தம்பி அரங்கு' என்று பெயரிட்டிருந்ததாக தமிழூற்று மாஹிர் தெரிவித்திருந்தார்.

தமிழா,அன்புடன்,அதிரை வெப் கம்யூனிடி மற்றும் பல குழுமங்களிலிலும் உமர்தம்பி அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.

மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் என்பது தமிழ் கணிமை பயனர்களின் அவா!

தமிழக முதல்வரும், உலகதமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுவினரும் உரிய நேரத்தில் இதைச் செய்வார்களா?
 
thanks to 
 http://peacetrain1.blogspot.com/
 

9 comments:

பாத்திமா ஜொஹ்ரா said...

கலைஞர் அரசு இதை செய்யும் என்பது என் எண்ணம்,இன்ஷா அல்லாஹ்.இது குறித்து கலைஞர் அவர்களுக்கு கடிதம் எழுதலாம் என உள்ளேன்.

நட்புடன் ஜமால் said...

இன்ஷா அல்லாஹ் நல்லது நடக்கும் முயற்சிகளை செய்ங்க ...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இன்ஷா அல்லாஹ் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பலமாக உள்ளது. தமிழ்மணத்தின் முதல் பக்கத்தில் வெளிவந்துள்ள செய்தியும் நமக்கு நம்பிக்கை தருகிறது.

சகோதரி பாத்திமா ஜொஹ்ரா அவர்களே, தங்களின் ஆதரவு கட்டுரைக்கு மிக்க நன்றி. அரசு சம்பந்தப்பட்ட ஈமெயில் முகவரி இருந்தால் எனக்கு அறியத்தாருங்கள் tjdn77@gmail.com

தாஜுதீன் (THAJUDEEN ) said...

உமர்தம்பி காக்கா என்பதை நீக்கிவிட்டு, உமர்தம்பி அவர்கள் என்று பதிந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. This is just suggession not comment.

Ahamed irshad said...

கண்டிப்பாக நடக்கும். கலைஞர் அரசு இதைச் செய்யும் என நம்பலாம்...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

முயற்சிப்போம்; இறைவனின் நாட்டப்படி
நடக்கும்.

ஜெய்லானி said...

நம்மாலான வகையில் முயற்சிப்போம்; எதுவும் இறைவனின் நாட்டப்படியே
நடக்கும்.

Anisha Yunus said...

ஸலாம் அக்கா.

நானும் கொஞ்ச காலம் நியூ யார்க் பக்கத்துல நியூ ஜெர்ஸீல வாழ்ந்தேன். இன்னும் அந்த இடங்களை பண்றேன். நீங்க எந்த ஊரு? நான் அதிகமா வலைகளை படிச்சு இப்போதான் எழுத ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் இஸ்லாமிய கதைகள் சொல்கிற ஒரு blog எழுதணும்னு ஆசை. சில நாட்களுக்கு பின் இன்ஷா அல்லாஹ்...

அப்பப்ப வந்துட்டு போறேன். ரைட்டா?

வ ஸலாம்.

Jaleela Kamal said...

கண்டிப்பாக அங்கீகாரம் கிடைக்கனும்.