
"நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்;. நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!
அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.
(நபியே!) நீர் கூறுவீராக "மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்."
திருக்குர்ஆன்
8 comments:
பட்டியலிடபட்ட இந்த பதிவு நிறையவே சிந்திக்க வைத்தது.அல்ஹம்துலில்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும்
இதை அப்படியே பிரிண்ட் செய்து பள்ளிகளில் ஜும்மா அன்று கொடுக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் நிச்சயம் செய்கிறேன்.
உங்கள் பதிவுகள் அனைத்தும் முத்துகள்
அல்லாஹ் போதுமானவன்
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புள்ள அக்கா
உங்கள் வரதட்சணை பதிவு நம் சமுதாய மக்களுக்கு சாட்டையடி
// கொமரா இருந்து,கல்யாணம் முடிக்கிறதுக்குள்ள வாப்பாவும்,சகோதரங்களும் படுற கஷ்ட்டத்தப் பாத்துக்குட்டு இருந்துட்டு,கல்யாணம் ஆனப்பறம்,அவளுக்கு பிள்ளைங்கள் பொறந்து,அவன் ஆம்பிலப்புல்லையா இருந்துட்டா,தான் பட்ட கஷ்டத்த மறந்துட்டு,அந்த பொண்ணும்,தான் மகனுக்கு வரதட்சணை வேணும் என்று கேக்குறது இருக்கே,இது பெருங் கொடுமை? //
ஆனால் எத்தனையோ பெண்கள் கல்யாணம் ஆனவுடன் தனிக்குடுத்தனம் போக கூட்டை கலைப்பது சரியா அக்கா (தனிக்குடுத்தனம் பற்றி தனி பதிவு போடவும் )
அல்லாஹ் போதுமானவன்
நன்றி சாதிக்கா,கருவாச்சி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
நல்ல பதிவு அவசியமானதும் கூட
திருக்குர்ஆன் வசனத்தை எழுதும் போது அதன் வசன எண்களை அவசியம் குறிப்பிடவும்
http://nizamroja01.blogspot.com/2009/05/blog-post_20.html
பாத்திமா அருமையாக சொல்லி இருக்கீங்க,
வாழ்த்துக்கள்.
நல்ல ஒரு பதிவு சகோதரி.
Post a Comment