அப்படித்தான் ஈத் பெருநாளைக்கி புது டிரஸ் எல்லாம் எடுத்தாச்சி.குழந்தைதனமா எதுனா சிக்குதான்னு ஒரே தேடல்.நமக்கு பிடிச்சிருக்குதேன்னு வாங்கினா ஒருக்கா புள்ளைங்களுக்கு பிடிக்காம போய்டுமே.அப்போ என்ன செய்றது?
புள்ளைங்களையும் பெரிய மால்கள்,ஷாபிங் சென்டர்கள்,வணிக வளாகங்கள் இப்பிடி எல்லா எடத்துலயும் போய் காட்டினேன்.புது புது டாயஸ் கண்ணைக் கவர்ந்தாலும்,பிள்ளைங்களுக்கு படிச்சது சின்ன ஹெலிகாப்டர்களும்,பொம்மை தலையணையும் தான்.
அந்த ரெண்டும்தான் எங்களுக்கும்,பிள்ளைங்களுக்கும் பிடிச்சது.
புடிச்சது வாங்கறதும், புள்ளைங்க ரசிக்கிறதும் அதை பார்த்து நாம சந்தோஷப்படறதும் சுபுஹானல்லாஹ் என்னால விவரிக்க முடியல.
17:70. நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.
திருக்குர்ஆன் .
7 comments:
//புடிச்சது வாங்கறதும், புள்ளைங்க ரசிக்கிறதும் அதை பார்த்து நாம சந்தோஷப்படறதும் சுபுஹானல்லாஹ் என்னால விவரிக்க முடியல.//
சந்தோஷத்துலேயே பெரிய சந்தோஷம் அதுதானே..!! :-))
//புடிச்சது வாங்கறதும், புள்ளைங்க ரசிக்கிறதும் அதை பார்த்து நாம சந்தோஷப்படறதும் சுபுஹானல்லாஹ் என்னால விவரிக்க முடியல// அது
பிள்ளைகளின் சந்தோஷத்தை நாம் ரசிக்கும் அந்த சந்தோஷமே தனி சுகம்தான்! உங்களை மாதிரி என்னாலும் விவரிக்க முடியல தோழி.
நல்ல பகிர்வு !
இப்படித்தான் என் மகனும், பென்சில் வாங்கிக் கேட்டார், அவருடைய வயதினைக் கருத்தில் கொண்டு இப்போ எதுக்கு என்றேன்.. "நான் மேஜிக் செய்யனும், டிராவிங் செய்யனும்"னு சொன்னதும். சரி ஒரு டஜன் பென்சிலை பாகெட்டாக வாங்கி வந்து கொடுத்தேன் அதனை அவர் பிரித்துப் பார்த்து விட்டு.. "போங்க டாடி நான் ஒரு பென்சில்தானே கேட்டேன் ஏன் இவ்வளவு வாங்குனீங்க" என்றது விழி முழித்து நின்றேன் !
மழலைகள் மனம் வென்றவர்களாக மட்டும் இருந்திடுவதில்லை... நமக்கே ஆசானாகவும் இருந்திடவும் செய்கிறர்கள் !
ஸலாம் சகோ..
பிள்ளைகளை அல்லாஹ்,நமக்கு கண்குளிர்ச்சியாக்கி வைத்துள்ளான்,என்பது மெய்ப்படும் சந்தர்ப்ங்களில் ஒன்று,தாங்கள் பகிர்ந்து கொண்டது.அல்லாஹ் மேலானவன்,யாவரையும் மிகைத்தவன்.
அன்புடன்
ரஜின்
ஸலாம் சகோ..
பிள்ளைகளை அல்லாஹ்,நமக்கு கண்குளிர்ச்சியாக்கி வைத்துள்ளான்,என்பது மெய்ப்படும் சந்தர்ப்ங்களில் ஒன்று,தாங்கள் பகிர்ந்து கொண்டது.அல்லாஹ் மேலானவன்,யாவரையும் மிகைத்தவன்.
அன்புடன்
ரஜின்
அந்த போட்டோவில் உள்ள ஹெலிகாப்டர் இன்னும் உருப்படியா இருக்கா?..நான் ஒரு முறை என் மகளுக்கு வாங்கி கொடுத்து அதனுடைய ஆயுள் 24 மணி நேரம் கூட தாங்கவில்லை. என் மகளை நான் செல்லமாக கோபிக்கும்போது அவள் சொன்ன சில விசயஙகளை சீனாவில் உள்ள தொழிற்சாலையில் இருப்பவர்கள் கேட்டிருந்தால் சீனாவின் பெயர் அவ்வள்வு விமர்சனத்துக்கு ஆளாகியிருக்காது.
இருந்தாலும் தொடர்ந்து வாங்கி கொடுத்துப்பவருக்கு பெயர் பாசமுள்ள வாப்பா / உம்மா...தொடர்ந்து உடைத்துபோடும் ஆட்க்களுக்கு பெயர் ' செல்ல மகன் / மகள்
அஸ்ஸலாமு அழைக்கும்
சகோ ஜாகிர் சொல்வது போல் சீனா பொருட்கள் ஈசலை போல் 24 மணி நேரத்தில் மறித்து விடுகின்றன
இருந்தும் குழந்தைகள் கேட்கும் போது அதை வாங்கிக்கொடுக்காமல் இருக்க முடியவில்லை
அது ஏன் என்று விவரிக்க முடியவில்லை.
Post a Comment