Friday, December 11, 2009

ஏழைங்க என்னங்க பண்ணுறது.

என்னங்க இது அநியாயமா இருக்குது?ஊருக்கு போன் பண்ணினா காய்கறி மொதக்கொண்டு,மீன்,இறைச்சி,அரிசி,பருப்பு இப்பிடி எல்லா சாப்பாட்டுபொருளும் விலை  ஏறிபோச்சிடுச்சின்னு சொல்றாங்க.சாதாரணமா ஒரு அம்பது ரூவா கொண்டு போனா,மீனு,கொஞ்ச காய்கறி,இப்படி தாராளமா வாங்கி வந்த காலம் போய்
அந்த மாதிரி இப்போ வாங்குனா முன்னூறு ரூவா தேவைன்னு சொல்லுறாங்க.கேக்கும்போது மனசு கனக்குது.ஏழைங்க என்னங்க பண்ணுறது.இது செயற்கையா விலைவாசி ஏத்தமா இல்லையான்னு தெரியல.எது எப்படியோ ஆனா கஷ்ட்டப்படுறது ஏழைங்கதான்.இது ஊர்ல இருக்குற நல்ல இளைஞர்கள்,அல்லது அமைப்புக்கள் ஒன்னு கூடி மொத்தமா காய்கறி,மீன்,ஆடு-மாடு வாங்கி நியாய விலையில வித்தாங்கனா,ஓரளவுக்குவிலைவாசியை கட்டுப்படுத்தலாம்.அதுமட்டுமில்லாம,அவங்களுக்கு அது ஒரு வியாபாரமாகவும்,சுய தொழிலாகவும் போகும் இல்லையாங்க.


பெருநா நேரத்துல ஒரு தடவ நம்ம ஊர்ல இதுபோல த மு மு க காரங்க,ஆடு வாங்கி,விலை குறைவா வித்தாங்கன்னு என்னோட மச்சான்(கணவர்) சொன்னார்.இது போல தொடர்ச்சியா செய்யலாமே.இப்படி செய்யும்போது,மத்த வியாபாரிங்கலும், விலை குறைக்க சான்சு இருக்கு,செஞ்சுதான் பாருங்களேன்,ஆண்களே!


நான் சொல்லுறது சரியா,தப்பா எதுவானாலும்,கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள். படிக்கிற மத்த மக்களுக்கு உதவியா இருக்கும்.

9 comments:

Zakir Hussain said...

ஏழைகளை மனதில் நிருத்தி எழுதிய உங்களைப்போல் யாராவது ஊரில் இல்லாமலா போய்விடுவார்கள்?.இருப்பது அதிராம்பட்டினத்தை விட்டு ஆயிரம் மைல்கள் ஆனாலும் எளியவ்ர்களின்
பசி அறிந்து எழுதும் எமது சகோதரியின் செயல் வருங்கால பெண்களின் எழுத்துக்கும் எண்ணங்களுக்கும் ஒர் உதாரணம் / ஒரு தொடக்க பாடம்.

May Allah Bless You


ZAKIR HUSSAIN

பாத்திமா ஜொஹ்ரா said...

நன்றி ஜாகிர் ஹுசைன் காக்கா,துவா செய்யுங்கள்.இன்ஷா அல்லாஹ்-இதே போன்று நாம் செயல்பட்டால்,அல்லாஹ்வின் அருளால் வெற்றி பெறுவோம்.

இராகவன் நைஜிரியா said...

விலைவாசி விஷம் போல ஏறிகிட்டே போகுதுங்க...

இங்கேயும் கன்னாபின்னாவென்று ஏறிகிடக்கது.

இந்த விலைவாசியால், விவசாயிகள் யாரும் அவ்வளவாக பயன் அடைந்ததாகத் தெரியவில்லை. இடைத்தரகர்கள் தான் அதிக பயன் அடைகின்றனர்.

இராகவன் நைஜிரியா said...

// பெருநா நேரத்துல ஒரு தடவ நம்ம ஊர்ல இதுபோல த மு மு க காரங்க,ஆடு வாங்கி,விலை குறைவா வித்தாங்கன்னு என்னோட மச்சான்(கணவர்) சொன்னார்.//

இது கூட நல்ல ஐடியாவாகத்தான் இருக்குங்க.

நல்ல மனம் படைத்தவர்களிடம் இன்று பணம் இல்லை. பணம் படைத்தவர்களிடம் நல்ல மனம் இல்லை. முதல் (Capital) யார் போடுவது என்பதுதான் பிரச்சனைங்க.

பாத்திமா ஜொஹ்ரா said...

உண்மைதான் ராகவன் அண்ணன்,.உங்கள் கருத்து மிக நன்று. விவசாயிகளைவிட இடைத்தரகர்கள்தான் பயன் அடைகின்றனர்.இதற்கு விடிவு காண முயல வேண்டும்.ஆமா நீங்க இருக்கிறது நைஜீரியாவிலா?அல்லது அது உங்கள் பட்டப் பெயரா?

ஹுஸைனம்மா said...

ஃபாத்திமா, உண்மைதான், விலைவாசி ஏற்றத்தைப் பார்க்கும்போது பயமாகத்தான் இருக்குது. இந்தியாவில மட்டுமில்ல, இங்க யூ.ஏ.இ.லயும் அப்படித்தான் அதிகமாயிருக்கு.

பாத்திமா ஜொஹ்ரா said...

இங்கேயும் அப்படித்தான் ஹுசைனம்மா அக்கா.

Ammu Madhu said...

adutha varusham vilai kuraiumgranga.papom.

பாத்திமா ஜொஹ்ரா said...

பாப்போம் மது அக்கா,நம்பிக்கைதான்