நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. திருக்குர்ஆன்.112:1-4
Sunday, December 27, 2009
பர்தா அணியாமல் இருந்தால் தான் எங்களுக்கு கஷ்டம்!மதவக்கிர கிருக்கன்களுக்கு சவுக்கடி!!
............... இந்த இடுகைக்கு என்ன காரணம் என்றால்....
நான் பதிவர் சந்திப்புக்கு பர்தாவுடனே சென்றேன், கடைசிவரை பர்தாவுடனே இருந்தேன் என்று எழுதியிருந்ததற்கு, முந்தய பதிவுகளில் மாற்று மத அன்பர் ஒருவர் இவ்வாறு மறுமொழியிட்டிருந்தார்,
//நான் பேண்ட்டுடனே சென்றேன், கடைசிவரை பேண்ட்டுடனே இருந்தேன்; பெண்கள் புடவையுடனே சென்றார்கள், கடைசிவரை புடவையுடனே இருந்தார்கள், இப்படியெல்லாம் நாங்கள் எழுதினோமா?//
இதைப் படித்ததும், எனக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை! பர்தாவைப் பற்றி பல தவறான கருத்துக்கள் மாற்று மத அன்பர்களிடையே உள்ளது, அதைத் தெளிவாக்குவது தான் இந்த இடுகையின் நோக்கம்!
சில கேள்விகளும் பதில்களும்...
பர்தா என்றால் என்ன?
பர்தா என்பது உடையல்ல...அது உடைக்கு மேல் அணியும் ஒரு அங்கி தான், அதைக் கழட்டினால் உள்ளே உடை இருக்கும்!!!
அழகாக உடை உடுத்தி, நகையெல்லாம் அணிந்து, பிறகு அதை பர்தாவால் மறைத்துக் கொள்கிறீர்களே?!
நாங்கள் திருமணம் போன்ற விஷேசங்களில், ஆண்களுக்கு தனி இடம், பெண்களுக்கு தனி இடம் என்று ஒதுக்கி இருப்போம். இருவரும் கலப்பதில்லை. ஆக, நாங்கள் வெளியே செல்லும் போது பர்தா அணிந்து சென்றாலும், திருமண மண்டபத்தில் பெண்கள் பகுதிக்கு சென்றதும் அதை கழட்டி பையில் வைத்து விடுவோம். பிறகு திரும்பும் போது, மீண்டும் அணிவோம். உறவுகளின் இல்லங்களுக்கு செல்லும் போது இதே போலத்தான்.
பர்தா அணியச் சொல்லி கட்டாயப்படுத்துவது யார்?
எங்கள் பெண்களிடம் ஏன் என்னிடமும் கணவர் உட்பட எந்த ஒரு ஆணும் கட்டாயப்படுத்தியதில்லை. நானே விரும்பித் தான் அதை அணிகிறேன். அதன் சவுகரியங்களை உணர்ந்த எந்த ஒரு பெண்ணும், பர்தா இல்லாமல் வெளியே செல்வதை விரும்புவதில்லை.
பர்தா ஏன் அணிகிறோம்?
எங்களுடைய அழகும் வனப்பும் கணவருக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கிறோம். இது ஒரு வித சுயநலம் போலத்தான் தெரியும். ஆயினும், எங்கள் வளர்ப்பு முறை அப்படி! ஆக, வெளி ஆண்கள் யாரும் எங்கள் உடலின் தோற்றத்தைப் பார்ப்பது எங்களுக்கு விருப்பமில்லை! அதற்காகத்தான் பர்தா அணிகிறோம்.
ஆண்கள் மட்டும் ஏன் பர்தா அணிவதில்லை?
நிச்சயமாக எங்கள் மதத்தில் ஆண்களுக்கும் பர்தா இருக்கிறது. ஆனால் அது வேறு விதம். ஆணும் பெண்ணும் உடல் தோற்றத்தில் வேறு வேறு மாதிரி இருக்கும் போது, எப்படி இருவருக்கும் ஒரே மாதிரி பர்தா அணிய முடியும்?
ஆண்களுக்கு தாடியும் நீளமான அங்கியும் தொப்பியும், தொப்புள் முதல் முட்டுக்கால் வரை மறைப்பதும் அவர்களுடைய பர்தா போலத்தான். அதோடு, பெண்களைப் பார்த்தால், தம்முடைய பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும்படி அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
ஏன் ஒரு சில முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதில்லை?
அதற்குக் காரணம், அவர்களின் வளர்ப்பு தான். நற்குடியில் பிறந்து, இஸ்லாமிய பாரம்பரியப்படி வளர்க்கப்படும் அனைவரும் நிச்சயமாக பர்தாவை விரும்புவார்கள். பொதுவாக ஒரு குடும்பத்தில் பெண் எடுக்கும் போது, அக்குடும்பப் பெண்கள் பர்தா அணிபவராக இருந்தால்,விரும்பி பெண் எடுப்பார்கள்.
பர்தா அணிவது கஷ்டமாக இல்லையா?
உடை அணிவதை நாம் கஷ்டமாக நினைப்பதில்லையே! நாம் நம் கைகளை ஓரளவுக்கும், உடலின் சில பாகங்களையும், உடையினால மறைத்துக்கொள்கிறோம். கையின் பெரும்பகுதியும், கழுத்தும் முதுகும் இடுப்பும் தெரியும்படியாக சேலை கட்டுகிறோம்.
இன்னின்ன இடத்தை மறைக்க வேண்டும், இன்னின்ன இடத்தை மறைக்க வேண்டியதில்லை என்று தீர்மானித்தது யார்? முதன்முறையாக சேலை உடுத்தும் பெண், இடுப்பு வெளியே தெரியும் போது, சற்று சங்கோஷமடைவாளல்லவா? அது போலத்தான், மீதியுள்ள பாகங்களான கழுத்து, கை முதுகு ஆகியவை வெளியே தெரியும் போது, நாங்கள் அவமானப்படுகிறோம். ஆக, பர்தா அணியாமல் இருந்தால் தான் எங்களுக்கு கஷ்டம்.
காலத்துக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளாமல் ஏன் இன்னும் பர்தா அணிகிறீர்கள்?
பர்தா அணிவதால், எம்மினப் பெண்களின் வளர்ச்சி தடைபடுவதில்லை. மாறாக, படிக்கும் காலத்தில் காதல்வலையில் வீழ்ந்து தம்மை இழந்துவிடாமல், நேரிய வழியில் செல்வதற்கு இது ஏதுவாக இருக்கிறது. பர்தா அணிந்தாலும், நாங்கள் விரும்பியதைப் படிக்கிறோம். விரும்பிய துறையைத் தேர்ந்தெடுத்து முன்னேறுகிறோம். அதற்கு நானே உதாரணம்.
ஏன் இந்த பதிவு?
ஆரம்பத்திலேயே நான் சொல்லிவிட்டேன். மற்றபடி நான் அனைத்து மத பழக்கவழக்கங்களையும் மதிப்பவள்.
சைவ சித்தந்தக் கொள்கையின் பட்டையையும், திருமால் பக்தர்களின் நாமத்தையும், பார்ப்பனீயர்களின் பூணூலையும், பாதிரிகளின் அங்கியையும், கன்னியாஸ்த்திரிகளின் ரோஸரியையும், சீக்கியர்களின் டர்பனையும் புரிந்து கொண்டு அதற்கு மரியாதை தருபவள் நான். அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். அதே போல எம்மையும் எம்பர்தாவையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த இடுகை!
சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கலாம். ஆனால், மதவக்கிரம் பிடித்த அனானி கமெண்ட்டுகளுக்கு இங்கு இடமில்லை என்று சொல்லிக் கொள்கிறேன்.
-சுமஜ்லா.
----------------------------------------------------------
அப்படிப் போடு அறுவாள.சுமஜ்லா அக்கா எழுதுன கட்டுரையை படித்துவிட்டு,சில முகம் இல்லாத கிறுக்கன்கள் அனானி என்று தைரியம் இன்றி,வேண்டத்தகாத பல வார்த்தைகள் போட்டு உளறி இருந்தனர்.அதற்கு அக்கா சரியான பதிலடி தந்துள்ளார்கள்.அதன் பதிப்பு இது.
எனக்கும் அனானி சிலர் எழுதியள்ளனர்,அந்த வெறியர்கள் யார் என்று தெரியும்,எந்த இணைய தளம் மூலம் அது வருகிறது என்று தெரியும்,மீண்டும் அது போன்று வருமேயானால்,தீவிர சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துக் கொள்கிறேன். நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும்,அல்லாஹ்வின்-ஏக இறைவனின் ஒளியை அணைத்துவிட முடியாது,மாறாக இஸ்லாம் என்ற அந்த அமைதி மார்க்கம் எங்கும்,எப்போதும் வேகமாக பரவிக்கொண்டே இருக்கும்.இதற்கு தினம் தினம் வரும் உலகின் நாலா பக்கமும் இருந்து வரும் செய்திகளே சாட்சிகளாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
very nice article sister.
a kind attention to non muslim brothers and sister,pls read this article ,and you will find answers for your misconceptions about islam.thanks
http://onlinepj.com/books/islam-penkalin-urimayai/
பர்தா விளக்கம் ஒரு அனுபவம்: சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை - காரைக்குடி ரயில் போக்குவரத்து இருந்தபோது அதுவும் நோன்பு மாதக்கடைசி(28)யில் அந்த ரயிலில் ஊருக்கு பயணம் சென்று கொண்டிருந்தேன். நானும் நாம் ஊர் நபர்களுக்கும் "பெர்த்" நிச்ச்சயமாகாமல் "சிட்டிங்" என்ற உட்காரும் வசதி மட்டும் கிடைத்திருந்தது. ரயில் விழுப்புரத்தைத் சென்று கொண்டிருந்தது..ரயிலில் ரிசர்வ் செய்யாத ஒரு அன்னியன் இங்கும் அங்கும் உலாவுவதும், சில இடங்களில் தரையில் அமர்வதுமாக இருந்தான்.தரையிலும் இருக்கையிலுமாக புர்கா அணிந்த சில இஸ்லாமிய சகோதரிகள் கூட்டமாக அமர்ந்து (அரைத்தூக்கத்துடன்) பயணிக்கிறார்கள் சில நேரம் அந்த் அன்னியன் அவர்கள் இருந்த பகுதியிலும் எட்டி அமர்ந்து இருப்பதையும் பார்த்தேன்.சில நபர்கள் தூக்கம் வருவதால் பாதையில் பேப்பர் விரித்து தூங்க ஆராம்பித்தார்கள். நாங்கள் சிலர் "சஹர்" செய்வதற்காக விழித்திருந்தோம். என் இருக்கை பெட்டியின் கடைசியில் இருந்தது என் எதிரில்(கதவோரம்) 55 வயது மதிக்கத் தக்க ஒரு ஹிந்து பெண்மனி தன் கணவர் மற்றும் மகளுடன் படுத்தபடி பயணிதிருந்தார்கள்(குவிக்கரம்பையை சேர்ந்தவர்கள் என்றார்கள்)வண்டி விழுப்புரதில் நின்றது சஹர் உணவுக்காக அதிகமானோர் இறங்கினோம் நான் உள்பட, .உணவு அருந்தி முடிந்ததும் நாங்கள் அனைவரும் வண்டியில் மீண்டும் ஏறிக்கொண்டோம். தரையில் படுக்கலாம் என்று எண்ணி துணியை விரிக்க நினைக்கும்போது பாதை முழுதும் ஈரமாக இருந்தது. யார் இப்படி செய்தது என்று ஒருவர் சப்தமிட கூடவே பயணித்த அந்த அன்னியன்(உடல் முழுதும் பெறிய போர்வையுடன்) ஒரு குழந்தை சிறுநீர் கழித்து விட்டது என்றான். சிறுநீர் குளமாக கட்டிக் கிடப்பாதால் நாங்கள் மீண்டும் இருக்கைகளை அனுசரித்து அமர்ந்து கொண்டு எல்லோரும் நீண்ட இரவு களைப்பால் சிறிது கண் அயர்ந்து தூங்கி விட்டோம்...ஒரு 20 நிமிஷமாக ரயில் சுமாரான வேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது "திடீர் என்று ஒரு பெண்ணின் பயங்கர அலறல் சத்தம் என் எதிரே கேட்கிறது பின் அது பலரின் குரலுடன் சேர்ந்து பெரும் கூக்குரலாக கேட்டு கண் விழித்து பதறி என்ன நடந்தத என்று கேட்டதில் என் எதிரில் அயர்ந்து தூங்கிய அந்த வயதான பெண்மணியின் 8 சவரன் தாலிச் செயினை ரயிலில் நடமாடிய அந்த "அன்னியன்" அறுத்துக்கொண்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பிவிட்டான் அது தன் கணவர் கண் எதிரே! தாலியை பறி கொடுத்தவர் சேலை கட்டி இருந்தார்கள்.அவர்கள் அணிந்திருந்த நகைகளும் அப்பட்டமாக அத்திருடனுக்கு திருட ஈர்த்திருகிறது.அதே ரயில் திருடும் நோக்கத்தில் பல இடங்களில் வலம் வந்தும் குறிப்பாக "புர்கா" அணிந்த முஸ்லீம் பெண்களுக்கு எதிரில் அமர்ந்தும் அவனால் தன் கைவரிசையைக் காட்ட முடியவில்லை. உண்மை என்னவென்றால் நாங்கள் சஹர் உணவுக்குக் பிறகு பாதையிலாவது படுக்கலாம் என்று பேசிக்கொண்டதை அந்த அன்னியன் ஒட்டுக்கேட்டு நாங்கள் உணவருந்திவிட்டு வருவதற்குள் தண்ணீரை தெளித்து ஈரமாக்கிவிட்டு குழந்தை சிறுநீர் கழித்துவிட்டது என்று சொல்லியிருக்கிறான்.காரணம் அவன் நகையைப் பறித்துக் கொண்டு ஒடும்போது நாங்கள் வழியில் படுத்டிருந்தால் என்ன ஆகும். பிடிபட்டுவிடுவான் அல்லவா? முடிவு: நகையை கொள்ளை அடித்தவன் ஒரு ஹிந்து அன்னியன். நகையை பறி கொடுத்தவர் புர்கா அணியாத ஒரு ஹிந்து பெண்மணி : நீதி: புர்க்கா அணிந்தால் திருட்டிலும் இருந்து பெரும் பாதுகாப்பு.
Al Hilal
சாட்டையடி பதிவு
தலைப்பில் தவறு சகோ
//கிறுக்கன்களுக்கு //
கருத்து சொன்ன பேனாமுனை,அன்சாரி,கருவாச்சி சகோதரர்களுக்கு நன்றி.
சகோ அன்சாரி சொன்ன கருத்து நடைமுறையில் எப்படியெல்லாம் பர்தா நமக்கு கண்ணியமும்,பாதுகாப்பும் அளிக்கிறது என்பதை மெய்ப்படுத்திக் காட்டுகிறது.எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள், அதோடு ஒரு சிறிய வேண்டுகோள், ஹிஜாப் பற்றி மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள், பர்தா என்னும் இந்த சீருடை, ஒரு பெண்ணின் அழகை அந்நிய ஆடவர்கள் கண்டு ரசிதுவிட கூடாது என்பதுதான் அனால் இந்த பதிவில் உள்ள படங்கள் மிகவும் தெளிவாக இருப்பதால் சில கயவர்களின் உள்ளத்தில் சபலம் ஏற்படுத்தலாம், அதனால் இதொபோன்ற பதிவுகளில் கூடிய வரை சாதாரண படங்கள் (அல்லது படமே இல்லாமல்) பதிந்தால் நன்றாக இருக்கும்.
சகோ அன்சாரியின் அனுபவம் அருமை,அதையே கட்டுரையாக வெளியிடலாமே
அருமையான இடுகை.
http://fmailkka.blogspot.com/
நேரம் கிடைக்கும்போது
இதையும் கொஞ்சம் பாருங்கள்
Post a Comment