//ஆனால் அந்த ஆண் பொட்டையை வரதட்சணை வாங்க எல்லா வகையிலும் தூண்டும் (வரதட்சணையை தொகையை பேசி முடிக்கும்) அவனின் தாய் மற்றும் சகோதரி போன்ற பெண்களை என்ன பெயர் வைத்து, எப்போ சாட்டையடி கொடுக்க போகிறீர்கள்???//
ஒருத்தர் இப்பிடி கமென்ட் பகுதியில கேட்டிருக்கார்।உண்மையில இது ஏத்துக்க வேண்டிய விஷயம்தான்।
கொமரா இருந்து,கல்யாணம் முடிக்கிறதுக்குள்ள வாப்பாவும்,சகோதரங்களும் படுற கஷ்ட்டத்தப் பாத்துக்குட்டு இருந்துட்டு,கல்யாணம் ஆனப்பறம்,அவளுக்கு பிள்ளைங்கள் பொறந்து,அவன் ஆம்பிலப்புல்லையா இருந்துட்டா,தான் பட்ட கஷ்டத்த மறந்துட்டு,அந்த பொண்ணும்,தான் மகனுக்கு வரதட்சணை வேணும் என்று கேக்குறது இருக்கே,இது பெருங் கொடுமை?
இதுக்கு என்னோட ஐடியா,ஒரு ஆள்,ஒரே ஒரு ஆள் துணிஞ்சு,நேரா அதிராம்பட்டினம் போலீஸ் ஸ்டேசன் போய்,ஒரு கம்பிளைன்ட் எழுதி கொடுத்து,இதுக்கு காரணமா இருக்குற ஆம்பிள,பொம்பிள,மணமகன் பொட்டப்பய,நாத்தனாமாறு இப்பிடி எல்லாத்தையும் புடிச்சி,உள்ளே தள்ளி களி திங்க வச்சா சரியாயிடும்.
ஜமாத்துல,கட்சியிலன்னு எவனும் வந்தா,அவன் மேலேயும் கம்ப்ளைன்ட் பண்ணி உள்ள தள்ளுங்க।நமக்கு,ரெண்டு வகையில நியாயம் இருக்கு.ஒன்னு,நம்மோட புனிதமான் மார்க்கம்,ஒரு ஆண்தான்,பெண்ணுக்கு மஹராக,அவள் கேட்பதைக் கொடுக்கவேண்டும் என்று சொல்லி பெண்களை உயர்த்துகிறது,கண்ணியப்படுத்துகிறது.
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்।அல்குர்ஆன்
ரெண்டாவது, சட்டம் அது கடுமையா தண்டிக்க சொல்லுது।ஆனா கம்பிளைன்ட் கொடுக்குறது ரொம்ப கம்மி.இப்படி துணிஞ்சு கம்பிளைன்ட் கொடுத்து பாருங்க,நிலைமை கொஞ்சம்,கொஞ்சம் சீராகும்.
இன்ஷா அல்லாஹ்,
இன்னும் சாட்டையடி தொடரும்.............
7 comments:
சகோதரியே....! நீங்க அமெரிக்கா மாப்பிள்ளையை முடிச்சிறிக்கீங்க....நீங்க ஏதும் கொடுத்தீங்களா...? அல்லது அவங்க வீட்டில் கேட்டாங்களா...?
அவங்க கேட்கவும் இல்ல,நாங்க கொடுக்கவும் இல்ல,ஆனா மஹர் தந்துதான் முடிச்சார்.என்னை இப்படி வரதட்சணைக்கு எதிரா எழுத தூண்டுவதே அவர்தான்.
DON'T GIVE DOWRY & LANJAM AND DON'T TAKE DOWRY & LANJAM. :-)
www.ahamedanver.blogspot.com
உங்க எழுத்து நடை ரொம்ப அழகாக இருக்கு பாத்திமா வாழ்த்துக்கள்..நல்ல கருத்துக்களை சொல்கிறீர்கள்..
அன்புடன்,
அம்மு.
நன்றி அம்மு அக்கா,பெருநாள் முடிந்து,நிறைய எழுதலாம் என்றிருக்கிறேன்.
பெருநாள் வாழ்த்துக்கள்
தொடரட்டும் தாங்களின் எழுத்துப்பணி
நன்றி மல்லிகா அக்கா,உங்களுக்கும்,அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.
Post a Comment