Friday, September 4, 2009

ஆண்கள் உண்மையில்- பொட்டைகளா?வீரர்களா?? சாட்டையடி 1

கணவன் கொலை,மனைவி வெறிசெயல்?கள்ளக் காதல்,கணவனை கொன்ற மனைவி கைது?கள்ளக் காதலுக்கு இடையூறு,மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றவருக்கு தூக்கு தண்டனை?

இவைகள் நாம் அன்றாடம் பார்க்கும் செய்திதாங்க.இது பழசுன்னாலும்,இந்த மாதிரி நியூசு இப்போ ரொம்ப அதிகமா வந்துகிட்டே இருக்கு.அதுதான் வேதனையான விஷயம்.இந்த மாதிரி நடக்குறதுக்கு நெறைய காரணங்கள் இருந்தாலும்,அத்தனையும் மனுஷனோட தரப்புலேர்ந்துதான் உண்டாகுது.காரணம் ஏக இறைவன் நமக்கு தெளிவான வேதத்தையும்,நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தெளிவான ஹதீசையும் தந்துள்ளார்கள்,அத நாம ஒழுங்கா பின்பற்றவில்லை என்பதோடு கூடி,மற்ற மாத்து சனங்ககிட்டேயும் எடுத்து சொல்லல.இதுக்கு நாமதான் காரணம்.வேலைக்கி போறவன்,வேலை மட்டும் பாத்து சம்பளம் வாங்கி பொண்டாட்டி புள்ளைய காப்பாத்தனும்னு நெனக்கிறான்,பிசினஸ் பண்றவன்,ஒழுங்கா பிசினஸ் பண்ணினா போதும்னு நினைக்கிறான்.இப்பிடி அவன் அவன் தான் மட்டும், தன் குடும்பத்தை மட்டும் பாத்துகிட்டு இருந்தா,இந்த சமூகம் உருப்படுமா?அல்லாஹ்வுக்கு பதில் சொல்லனும்கிற பயம் இல்லையா?


எத்தன பேரு தான் வீட்டுல இருக்கிற குமர பத்திக் கவலை படுற மாதிரி,பக்கத்து வீடு,பக்கத்து தெரு,அதே ஊரு,அசலூரு இப்பிடி குமர் தேங்குதே,இதுக்கு என்ன காரணம்,அதுக்கு நாம இந்த ஊரோட சேர்ந்து என்ன செய்யணும் அப்பிடின்னு யோஷிசீங்களா?கல்யாண வயசு வந்தும்,கல்யாணம் முடிக்காமே,அவ தவிக்கிற தவிப்பு எத்தனை பேருக்கு தெரியும்?இதுனால அவ இன்னொருத்தன் கூட ஓடிப் போக வாய்ப்பு இருக்கா,இல்லைய்யா?இப்பிடி யாரும் கண்டுகொள்ளாத காரணத்தால வரதட்சணை பேய் இப்படி பிடிச்சி ஆட்டுதே,ஏன் கல்லைப் போல் நிற்கிறீர்கள் ஆண் சமுதாயமே?ஆம்பிளைன்னா வீரன்னுதான் பேரு,ஆனா வரதட்சணை வாங்குற,ஊக்கப்படுத்துற எந்த ஆம்புளையும் பொட்டதான்,இதுல என்னா சந்தேகம்?

கல்யாணம் முடிக்க இயலாம,தவறு செய்கிற பாவத்துக்கு தள்ளப்படுகிற அவலம் இந்த வரதட்சணைக்கு இருக்காமாதிரி,கல்யாணம் செஞ்சும்,ஆம்பிளையோ,பொம்பளையோ விபச்சாரம் பண்ணுற கேடு கெட்ட நிலக்கி வர்றாங்கன்னா அதுக்கு என்ன காரணம்,அதுக்கு தொலைக் காட்சியும்,ஆடம்பர மோகமும்,அல்லாஹ் நாளை மறுமையில் விசாரிப்பான் என்ற பயமும் இல்லாத காரணம்தானே?அது போல வலுக்கட்டாயம் பண்ணி,பிடிக்காத மாப்பிள்ளை,அல்லது பிடிக்காத பொண்ணு,இப்படி கட்டி வைக்கிறது,ஆணோட கருத்த கேட்டு செய்ற மாதிரி பொண்ணோட கருத்து கேட்கிறது இல்லை.இப்படி அடுக்கிக் கொண்டே போகலாமே?ஏன் இந்த நிலை,ஆண் என்ற போர்வையில் உலா வரும் பொட்டைகளே,(நல்ல ஆண்கள் மன்னிக்கவும்,மற்றவர்களுக்கு சூடு-சொரணை வருகிறதா?என பார்ப்போம்)குரான்,ஹதீஸைக் கொண்டு உங்களை எச்சரிக்கிறேன்.நாளை மறுமையில் அல்லாஹ்விடம் நாம் பதில் சொல்லியே தீர வேண்டும்,மறந்துவிடாதே?

அறிவிப்பாளர் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!” (புகாரி, முஸ்லிம்)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُநபி صلى الله عليه وسلم அவர்கள் மொழிந்தார்கள்: “எவருடைய மார்க்கப் பக்தியையும் நற்குணத்தையும் நீங்கள் விரும்புகின்றீர்களோ அத்தகைய மனிதர் உங்களிடம் திருமணம் கேட்டு வந்தால் அவருக்கு மணமுடித்துக் கொடுத்து விடுங்கள். நீங்கள் இப்படிச் செய்யாவிட்டால் பூமியில் குழப்பமும் தீமையும் விளைந்துவிடும்.” (திர்மிதி)

மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும் எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் இரத்த பந்த உறவுகளைச் சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.(4:1)

(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;. ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;. மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (2:221)

8 comments:

கிளியனூர் இஸ்மத் said...

//கல்யாண வயசு வந்தும்,கல்யாணம் முடிக்காமே,அவ தவிக்கிற தவிப்பு எத்தனை பேருக்கு தெரியும்?//

சிந்திக்க வேண்டிய வரிகள்...பல இஸ்லாமிய அமைப்புகள் வளர்ந்து கொண்டு போகிறதே தவிர இன்னும் வரதட்சணை ஒழிந்தபாடில்லை....

பாத்திமா ரோஜா said...

உங்கள் ப்ளாகிலும் வரதட்சணைக்கு எதிராக எழுதுங்கள்,இஸ்மத் காக்கா.

PEACE TRAIN said...

உங்கள் எழுத்து நன்றாக உள்ளாது,தொடர்ந்து எழுதுங்கள்,துவாவும்,வாழ்த்துக்களும்.

கிளியனூர் இஸ்மத் said...

சகோதரி அவர்களே....என்னுடைய 6வது அறிவு என்ற பிளாக்கில் ஆயிரத்தி ஒரு ருபாய் மணமகனுக்கு" என்ற தலைப்பில் வரதட்சனையைப் பற்றி எழுதி உள்ளேன்.... பார்க்கவும்

www.klr-ismath.blogspot.com

Anonymous said...

சகோதரி பாத்திமா ரோஜாவுக்கு : "ஆண்கள் உண்மையில்- பொட்டைகளா?வீரர்களா?? சாட்டையடி 1" தலைப்பு நன்றாக உள்ளது, ஆனால் அந்த ஆண் பொட்டையை வரதட்சணை வாங்க எல்லா வகையிலும் தூண்டும் (வரதட்சணையை தொகையை பேசி முடிக்கும்) அவனின் தாய் மற்றும் சகோதரி போன்ற பெண்களை என்ன பெயர் வைத்து, எப்போ சாட்டையடி கொடுக்க போகிறீர்கள்???

பாத்திமா ரோஜா said...

நன்றி பீஸ் ட்ரைன்.

பாத்திமா ரோஜா said...

//ஆனால் அந்த ஆண் பொட்டையை வரதட்சணை வாங்க எல்லா வகையிலும் தூண்டும் (வரதட்சணையை தொகையை பேசி முடிக்கும்) அவனின் தாய் மற்றும் சகோதரி போன்ற பெண்களை என்ன பெயர் வைத்து, எப்போ சாட்டையடி கொடுக்க போகிறீர்கள்???//

ஹலோ அனானி,கொடுத்துட்டா போச்சி.

Mohamed said...

இங்கே ஆண்கள் பொட்டையா அல்லது வெட்டையா என்பது முக்கியமல்ல. ஒழுங்கான மார்க்கப்பற்று அவனிடமும் அவன் குடும்பத்தாரிடமும் சென்றடையவில்லை. நம்மிடையே வளரும் போட்டி மனப்பான்மை, பொறாமை, விட்டுக்கொடுக்கும் தன்மையின்மை, பேராசை, பணத்தாசை, இருப்பதை வைத்து படைத்தவனுக்கு நன்றி சொல்ல மறப்பது, ஆடம்பரம், மோகம், பகட்டுதன்மை, சதிஉணராமை போன்ற செயல்களே காரணம். என் மகளுக்கு ஒரு மண்மகனை கேட்கும் பட்சத்தில் உங்கள் மகளுக்கு அதே மண‌மகனை பணம் தருவதாகவும் டாக்டருக்கு அல்லது அதைவிட சிறந்த படிபுக்கு பணம் தருவதாகவும் கூறி என் மகள் வாழ்வை துலைக்க நினைக்கும் உங்களிடம் அந்த பணம் இருக்கும் ஆடம்பரம்தானே காரணம். அந்த மணமனின் பகுத்தறிவு இல்லா தன்மையும்தானே காரணம். அவனது பெற்றோர்களின் சுய நலமும் பேராசையும் பணத்தாசையும் ஆடம்பரமும் (மகன் டாக்டர் படித்தால்???...), படைத்தவனை மறந்ததும்தானே காரணம். எனவே வரதட்சனை ஒழிய வேண்டுமாயின் நம்மிடம் விட்டுக்கொடுக்கும் தன்மை வரவேண்டும். மார்க்கபற்று சிரக்க வேண்டும்.- Kayal Abu Rabia