Wednesday, September 23, 2009

நாத்த பொழப்புடா இது?சாட்டையடி 4

பெருநா கொண்டாடியாச்சி,எல்லாரும் நோன்பு பிடிசிருப்போம்.அல்லாஹ் அத ஏத்துக்கொண்டு நமக்கு சொர்க்கம் தர பிரார்த்திப்போம்,இன்ஷா அல்லாஹ்.

இஸ்லாத்த பொறுத்தவரை எல்லாம சரியா இருக்கணும்.எல்லாத்துக்கும் கேள்வி-கணக்குன்னு இருக்கு.நீ எப்படி சம்பாதித்தே,எப்படி செலவழித்தே,அக்கம் பக்கம் உள்ள மக்களுக்கு,ஏழைகளுக்கு,அனாதைகளுக்கு,இப்படி எல்லாருக்கும் நீ கொடுத்தியா?இப்பிடி எல்லாத்துக்கும் கேள்வி கணக்கும் உண்டு,அது போல பரிசா சொர்க்கம்,நரகம் இப்பிடியும் உண்டு.

"ஒரே இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை.முஹம்மது நபிகள் அவர்கள் அந்த இறைவன் அல்லாஹ்வுடைய தூதர் ஆவார்கள்" இப்பிடி யார் சொன்னோமோ,அவர்கள் எல்லாரும் முஸ்லிம்கள்.முஸ்லிம்கள் என்று ஆகிட்ட பிறகு,அல்லாஹ்வும்,அவனுடைய தூதரும் என்ன கட்டளை இட்டாங்களோ,அதை நடை முறைப் படுத்த வேண்டும்.

தொழுகை,நோன்பு,ஜகாத் என்ற ஏழைகள்,ஆதரவற்றோருக்கு கொடுக்கவேண்டிய வரி,ஹஜ் செய்தல் இவைகள் கடமைகள்.இதையும் நாம் பேணி வர வேண்டும்.இத்துடன் நம் கடமை முடிந்து விடுகிறதா,இல்லை.

நம் அன்றாட வாழ்வில்,இருபத்து நான்கு மணி நேரமும்,நாம் எதிர் கொள்கிற ஒவ்வொண்ணுக்கும் குரானும்,ஹதீசும் காட்டிய வழிப்படி நடக்க வேண்டும்.அதுதான் மார்க்கம்.

காலையில எந்திரிச்சி ஒருத்தன் கடைக்கி,வயலுக்கு,தோப்புக்கு,ஆபீசுக்கு வேலைக்கி போறான்.இல்லை சொந்தமா வியாபாரம்,விவசாயம் பண்றான்.அப்படி பண்ற வேலையோ,வியாபாரமோ மற்ற மக்களுக்கு கெடுதல்,தீங்கு செய்யாததாக இருக்க வேண்டும்.

உதாரணமா,ஒருத்தன் ஒரு மளிகை கடை வச்சிருக்கான்,அதுல இறைவன் தடுத்த எந்த பொருளும் விற்காமலும்,மக்களுக்கு தீங்கு செய்ற எதையும் செய்யாமலும்,நேர்மையான முறையில்,எடை அளந்து,யாரையும் மோசடி செய்யாமலும் வியாபாரம் செய்கிறான் என்றால் அவன்தான் இறைவன் சொன்ன சொல்லையும்,நபிகள் சொன்ன சொல்லையும் செய்கிறவன்,அவனுக்கு மறுமையில் வெற்றி கிடைக்கும்।இன்ஷா அல்லாஹ்।

சரி,இதுக்கு மாத்தமா சாராய வியாபாரம் செய்கிறான்,சாராய வேலைக்கி போறான்,தானும் அந்த சம்பாத்தியத்துல கெடச்சத வச்சி தின்கிறான்,பொண்டாட்டி பிள்ளைகளுக்கு குடுக்குறான். இப்படி நாத்தப் பிழைப்பு நடத்தறவன் கதி? பொறவு பாக்கலாம்.

(இதில் குறிப்பிடப்படும் செய்திகள் யாவும்,யாரையும் அல்லது தனிப்பட்ட நபர்களை குறிப்பவை அல்ல. ஆனால் அப்படி யாராவது சாராய சம்பாத்தியத்தில் இருந்தால் இன்றே திருந்துங்கள்-இது குரான்,ஹதீஸ் மூலம் விடுக்கப்படும் எச்சரிக்கை.)

3 comments:

Ammu Madhu said...

பாத்திமா..பாத்திமா....பாத்திமா....எனக்கு நாற்பது வயது என்று நினைக்கும் அளவிற்கு நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை.தயவு செஞ்சு சொல்லுங்கபா..மாத்திக்கறேன்..
:((((((((((((.....கிரேட் இன்சல்ட்:))))))(இதை வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)..


கண்டிப்பாக தோழிதான்..


அன்புடன்,

அம்மு.

Ahmed said...

Sagothari Fathimaavukku Ungaludaya Katturai amtru athanudaya Karuthu Migavum arumaiyaga ulla athey velaiyil, neengal aangalai patri ezuthumbothu, mika mariyathai kuraivaaka thaan ezuthukireerkal. Thayavu seithu Mariyaathai kalantha vaarthaikalaaaha irunthaal mikavum nadraaka irukkum.

பாத்திமா ஜொஹ்ரா said...

நன்றி அஹ்மத்.ஒன்று ஆங்கிலத்தில் எழுதுங்கள்,அல்லது தமிழில்.இப்படி தங்கிலிஷில் எழுதினால் படிப்பவர்களுக்கு நன்றாக இருக்காது.உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.எல்லா ஆண்களையும் குறை சொல்லவில்லை என்பதயும் புரிந்துகொள்ளுங்கள்.