Friday, September 4, 2009

(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!


(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.

(அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.


திரு குர்ஆன் (1 - 1 to 7)

8 comments:

SUMAZLA/சுமஜ்லா said...

அட, நான் தான் முதல் பின்னூட்டமா? நல்லது! மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

நானும் முழுபர்தாவில் இருக்கும் பெண் தான். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!

இறைவன் போதுமானவன்.

Diary said...

அன்புச் சகோதரியே வருக

இஸ்லாதிற்கு எதிராக இவ்வலையுலகில் நிரம்பி கிடக்கும் விசம வரிகளுக்கு எதிராக உங்கள் எழுத்து அமைவதற்கு என் வாழ்துகள்

நான் பிறந்த அதிரையில் இருந்து நிங்கள் மகிழ்ச்சி டைரிhttp://diarydon.blogspot.com/

கிளியனூர் இஸ்மத் said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இப்போதெல்லாம் இஸ்லாமிய பெண்கள் வலைப்பூக்களில் தங்களை இணைத்துக் கொண்டு ஆர்வத்துடன் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள்...இது வரவேற்கக்கூடிய விசயமம்....வாழ்த்துக்கள்....
www.kismath.blogspot.com

உங்களுக்கு நேரம் கிடைத்தால் எனது வலைப்பூவை பார்க்கவும்....நன்றி

fathima roja said...

சுமஜ்லா அக்கா,உங்க பிளாக ரொம்ப நாள் நான் வாட்ச் பண்ணியதுண்டு,உங்க கருத்து எனக்கு நல்ல டானிக்,அதுலேயும் மொதொ டானிக்.நீங்கள் பர்தா அணிவது,மிக மகிழ்ச்சி,நான் இங்கு நியூ யார்க்கில் எங்கு போனாலும்,பர்தாதான்,எல்லாரும் இப்போ யூஸ் பண்ணுகிறார்கள்.பெண்களின் கவசம்,மரியாதை கண்ணியம் அது.நமக்கு பர்தா அணிய சொன்ன அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.இது மூலம் பெண்களுக்கு அல்லாஹ் கண்ணியம் அளித்துள்ளான்.அடிக்கடி வாங்க.

டைரி காக்கா,இஸ்மத் காக்கா நன்றி,உங்கள் ஊக்கம்,எனக்கு தெம்பை தருகிறது.ஜஸாக்கல்லாஹு கைரன்.

mohamedthasthageer said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி!
முதலில் இஸ்லாத்தைப் பற்றி எழுத வந்தமைக்கு வாழ்த்துக்களும் ,பாராட்டும்.( நீங்கள் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை)
நல்லவை நடக்க தலையாய் இருக்கவேண்டும்.
பொல்லாங்கு நடந்தால் முள்ளாய்(ரோஜா)இருக்கவேண்டும்.
இஸ்லாத்தை பரப்பும் வாசமாய் இருக்கவேண்டும்.
அனைவரிடமும் நேசமாய் இருக்க வேண்டும்,
இஸ்லாமியர்களுடன் பாசமாய் இருக்க வேண்டும்.
வேசம் போடும் போலிகளை உங்கள் எழுத்தில் தோலுரிக்க வேண்டும்.
நல்லவர்களுடன் கை கோர்த்து நடக்க வேண்டும்.தீயவைகண்டால் தீண் வழியெடுத்துச்சொல்லும் நாவாய் இருக்க வேண்டும். நல்ல சாட்சிக்கு கண்னாயிருக்க வேண்டும்.
சாந்த மாய் இருக்க வேண்டும் அதே வேளை கையில் சாட்டையும் இருக்க வேண்டும்.
Brother mohamed thasthageer(crown)(adirampattinam )from california usa.
உங்களுக்கு ஆர்வமிருப்பின் உங்கள் மின் அஞ்சல் விலாசம் அனுப்பவும் எங்கள் தளத்திலும் எழுத உங்களுக்கு ஆர்வமிருப்பின் எங்கள் தளத்திலும் எழுத பங்கு பெறலாம்.
அன்புடனழைகிறேன்.

பாத்திமா ஜொஹ்ரா said...

நன்றி தஸ்தகீர் காக்கா,உங்க கருத்துக்கு நன்றி.நீங்களும் வரதட்சணைக்கு எதிரா எழுதுங்க,அதிரை எக்ஸ்பிரசில் எழுத ஒத்துக் கொண்டுள்ளேன்.அதுக்கே நேரம் ஒதுக்க வேண்டும்.நன்றி

அதிரை அபூபக்கர் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி...

அல்ஹம்துலில்லாஹ்.. உங்கள் எழுத்துப்பணித்தொடர வாழ்த்துக்கள்...

பாத்திமா ஜொஹ்ரா said...

நன்றி அதிரை அபூபக்கர் காக்கா