Sunday, September 6, 2009

பேரு மாறிப்போச்சி? குமுறல்-1

ரேஷன் கார்டுக்கு பேரு எடுக்க வர்றான்,எலக்ஷன் அட்டைக்கு பேரு எடுக்க வர்றான்,அட எது எத்க்கோ பேரு குறிக்க வர்றான்,(கரண்டுக்கு,வரி வசூலிக்க இப்பிடி)யாரு,அட கவருமேண்டுல்லேர்ந்துதாங்க.கேட்டா-ஆபிசருங்கறான்.எல்லாத்தையும் குறிச்சிப்புட்டு, கார்டை,அட்டையை,அட எதோ ஒன்னை வாங்கிப் பார்த்தா,அட பாவிபயலுவளா,அழகான,உம்மாவும்,வாப்பாவும் வச்ச பேருக்கு பதிலா,இவன் ஒரு பேர எழுதிள்ள தொலச்சிர்றான்,நாமளும் அப்போ கண்டுகிடாம,பாஸ்போர்ட் எடுக்கும்போதும்,முக்கியமான வேலையாவும் தேவைப்படும்போது,மாட்டிக்கிட்டு அல்லாடறோம்.
இப்படி எத்தனை பேரு நம் ஊர்ல இருக்காக தெரியுமா?அட ஏன் கேக்குறியே?என் பேரும் அப்பிடி வந்ததுதாங்க!என்ன அப்பிடி பாக்குறியே, நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க.


பாத்திமா ஜொஹரா இது என் பேரு.ரேஷன் கார்டுல பாத்திமா ரோஜான்னு பதிஞ்சுட்டுப் போய்ட்டான்.அப்பொறம்,எலக்சன் கார்டு,இப்பிடி ஒவ்வொன்னா எல்லாத்துலயும் ரோஜான்னே மாறிப் போச்சே.வேற வழி இல்ல,மாத்தலாம்னு போனா,இதுக்கு லேட்டாகும்னு சொல்றான்,மாப்பிள்ளை எனக்கு அமெரிக்காவுக்கு விசாவுக்கு அப்பளை பண்ணி,கூப்பிட்டும் வந்தாச்சு.சரி வுடு ஜூட்,ரோஜான்னே இருக்கட்டும்னு விட்டாச்சி.இப்போ மாப்பிளை,பிள்ளைகளோட தற்போது டெக்சாசில் இருக்கோம்,ஆனா வீடு,வசிப்பிடம் எல்லாம் நியூ யார்க் முகவரிதான்.
அவரு சாப்ட்வேர், நான் தயாரிப்பு நிர்வாகத்துல இருக்கேன்.காதிர் முகைதீன் பள்ளியில படிச்சிட்டு,மெட்ராசுல மீதியும்,அமெரிக்காவுல பாதியுமா முடிச்சி,கை நிறைய சம்பளம்.சரி போதும் என்னப்பத்தி.

இந்த மாதிரி,பேரு மாறிப் போன விஷயம் உங்களுக்கும் இருந்தா பகிர்ந்துக்கோங்க.நம்மை வயித்து எரிச்சல கொட்டித் தீத்துக்கலாம்.

(இது குமுறல்,சாட்டையடி அல்ல)

4 comments:

கிளியனூர் இஸ்மத் said...

//பாத்திமா ஜொஹரா இது என் பேரு.ரேஷன் கார்டுல பாத்திமா ரோஜான்னு பதிஞ்சுட்டுப் போய்ட்டான்//

நல்ல மெசேஜ்......
செய்தது தவறாக இருந்தாலும்....ஜஹ்ராவை ரோஜாவாக மாற்றியதும் நல்லாதாங்க இருக்கு.....
அது எப்படிங்க............அதிரைத் தமிழ்லில் இப்படி கலக்குறீங்க....எனிவே....உங்களின் இனிமையான அமெரிக்கா வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்... தூரம் கடந்து போனாலும் நம் மார்க்கத் தூய்மை கடக்காமல் வாழ்வதற்கு இறைவனிடம் துவாச் செய்வோமாக.....

Rifaj Aslam said...

ha ha ............. roja is a nice name than johra ....................
i got you from suzlas' blog and visit yours ............

mohamed thasthageer(crown) said...

பெயர் மாறிப்போச்சுன்னு பொலம்பல் கொஞ்சம் சிரிப்பை வரவழைச்சிடிச்சி!இதிலும் குறிப்பாக ரேசன் கார்டு எழுத வரவங்க மெத்தப்படித்த பள்ளி ஆசிரியர்கள் தான்!அவங்களாவது பரவாயிலைங்க நம்ம ஊருல நம்ம சகோதர,சோதரிகள், நண்பர்கள்,குழைந்தைகள் யென்று நாமே பெயரை மாற்றிவிடுகிறோமே?உதாரணத்திற்கு:என் நண்பன் ஒருவனின் பெயர் முகைதீன் அப்துல் காதர் அனால் நான் உள்பட நண்பர்கள் மற்றும் சுற்றமும் அழைப்பது மையகாரு(மையத்து காரு)!இது எப்படி யிருக்குது.(plz post this comment perivious i sent one that is a little spell mistake)

Jaleela said...

அஸ்ஸ‌லாமு அலைக்கும்.


என்ன செய்வது பாத்திமா, அரசாங்கத்தில் வேலை பார்க்கும் இந்துக்களுக்கு சிலருக்கு முஸ்லீம் பெயர் வாயில் நுழையாது, நான் பெயர்களை லிஸ்ட் போட்டு எழுதி கொடுக்கலாம்,இல்லையா?

நகைச்சுவையுடன் எழுதி இருக்கீஙக.