Sunday, May 1, 2011

கொல்லத் துணிந்தாலும்.........

தமிழன் என்ற பெயரில் ஒருவர் எனக்கு பல மிரட்டல்கள்,வசவுகள்,இன்னும் பல நிந்தனை செய்யும் சிந்தனைகளை கமெண்ட் எனும் பெயரில் வாரி இறைத்துள்ளார்.(ஒன்றைத் தவிர ஏனையதை நீக்கிவிட்டேன்)அவர்க்கு மிக்க நன்றி.இதனைக் கண்டு கொதித்துப் போய் - விசாரித்து கமென்ட் கொடுத்த உள்ளங்களுக்கும் நன்றி.

நான் இதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை.காரணம்,உண்மையை சொல்வது நம் கடமை.இறைவனால் ஏற்றுக்கொளப்பட்ட ஒரே மார்க்கமான இஸ்லாத்தை பின்பற்றி,கல்லையும்,மண்ணையும்,செடி-கொடிகளையும்,விலங்குகளையும் இன்னும் கண்டதையும் வணங்கக்கூடாது என எத்தி வைத்து - உலக மக்கள் அனைவரையும் படைத்த இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும் என்ற செய்தியை சொல்ல நாம் கடமைப் பட்டுள்ளோம்.நாம் மட்டும் சொர்க்கம் போனால் போதுமா?

கல்லை வணங்கிக் கொண்டு இருக்கும் இந்து சகோதர-சகோதரிகள் அந்த நிலைமையிலேயே மரணித்துவிட்டால்?அவர்கள் நரகம் அல்லவா செல்ல நேரும்?அந்த கல்லை படைத்த இறைவனை வணங்குவதை விட்டு விட்டு - அந்தக் கல்லை வணங்கினால்,அது எவ்வளவு மாபாதகம்?

இறைவனுக்கு மகன் உண்டு என சொல்லிக் கொண்டு - இறைவனுக்கு மாசு கற்பிக்கும் கிறிஸ்த சகோதர சகோதரிகள் அந்த நிலையிலேய மரணித்துவிட்டால் அவர்கள் கதி என்ன?நரகம் அல்லவா செல்ல நேரும்?

எனவே,இறைவனால் படைக்கப்பட்டவைகளை வணங்க மாட்டோம்,மாறாக,அவைகளை படைத்த ஏக இறைவனையே வணங்குவோம்.இந்த செய்தியை சகோதரர் தமிழன் போன்றோர் உணரவேண்டும்.அவர்கள் நம்மை வசை பாடினாலும்,ஏன் கொல்லத் துணிந்தாலும் நாம் கவலைப்படமாட்டோம்.அவர்களும் சொர்க்கம் செல்ல வேண்டும்,நரகில் சென்று வதைபடக் கூடாது.

எனவே,என் அருமை சகோதர சகோதரிகளே - நாம் அதைப் பற்றியெலாம் கவலைகொள்ளாமல் - நாம் எத்தி வைப்போம் உண்மை செய்தியை.

21 comments:

Anisha Yunus said...

மாஷா அல்லாஹ் ஃபாத்திமாக்கா.

நான் வேலை விசா வந்த காரணத்தினால் சிறிது பிஸி. அதனால்தான் உங்கள் தொலைபேசி அழைப்புக்கும் இரு தடவையும் பதில் தர இயலவில்லை. இன்ஷா அல்லாஹ் இந்த வாரம் கண்டிப்பாக தொடர்பு கொள்கிறேன். இந்த மனதைரியமும், விடா முயற்சியும், அல்லாஹ்விற்காக மட்டுமே இந்த அழைப்புப்பணி என்கிற எண்ணமுமே போதும். மற்றவைக்கெல்லாம் ஹஸ்புனல்லாஹூ வ நி’அமல் வகீல். அல்லாஹ் போதுமானவன் அக்கா. இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக இந்த வார புதன் / வியாழனில் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன். தவறாக எண்ன வேண்டாம்.

வ ஸலாம்.

Aashiq Ahamed said...

சகோதரி பாத்திமா,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தங்களின் இந்த பதிவை பிரபல தட்ஸ்தமிழ் செய்தி தளத்தில் இணைக்க விரும்புகின்றேன். முஸ்லிம் சகோதரிகள் இறைவனை தவிர யாருக்கும் அஞ்ச மாட்டார்கள். சத்தியத்தை எடுத்து சொல்வதில் பின்னடைய மாட்டார்கள் என்ற உண்மையை பலரும் அறிந்து கொள்ளட்டும்.

நான் உங்கள் பதிவை இணைப்பதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தால் என்னுடைய மெயில் முகவரிக்கு தகவல் அளியுங்கள் (aashiq.ahamed.14@gmail.com)

இந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம்...

ஜசக்கல்லாஹு க்ஹைர்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
ethirkkural.blogspot.com

ஹுஸைனம்மா said...

இறைவன் பொறுமையையும், நற்கூலியையும் தரட்டும் உங்களுக்கு.

இருப்பதிலேயே இதுதான் பதிப்பிக்கும் அளவு ‘நாகரீகமான’ பின்னூட்டம் என்பதிலேயே தெரிகிறது, எழுதிய அவ்வீரத்’தமிழனின்’ தரம்.

Anonymous said...

மாஷா அல்லாஹ்! ஜஸகல்லாஹு க்ஹைர் சகோதரி.. நிச்சயமாக இந்த துணிவும், மன தைரியமும் உங்களிடம் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன்.

May Allah swt give you the strength and make it easy for you!

wassalam

Anonymous said...

பதிவுலகை பொறுத்த வரை இஸ்லாம் என்பதே தேவையில்லாத விமர்சனத்துக்கு உண்டான ஒரு விஷயமாகவே இருக்கிறது. ஒரு சிலருடன் ஆரோக்கியமான விவாதம்/அழைப்பு பணி நடத்தினாலும் இவர்களை போல சில பேருக்கு நாம் விளக்கமளிப்பது வீணே!

தயவு செய்து இனி வரும் நாட்களில் இது போன்ற பின்னூட்டங்களை தவிர்த்திடுங்கள். இன்ஷா அல்லாஹ்

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ...

உங்களது மனவலிமைக்கும்,சகிப்புத்தன்மைக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்கப் போதுமானவன்...

இருந்தாலும் இது போன்ற வக்கிரர்களை இனியும் தளத்தில் அனுமதிக்காதீர்கள்...

அவர்கள் இப்படி எழுதினார்கள்...அதற்கு பதில் என்றும் பின்னூட்டாதீர்கள்...அவர்களை நாயினும் கேவலமாய் சீண்டாமல் விடுவதே அவர்கள் கேவலப்பட்டுப்போக போதுமானதாய் இருக்கும்...

கடவுள்! ஹிந்துக்களின் புரிதல்..கட்டுரையை..தாராளமாக பதிவு செய்துகொள்ளுங்கள் சகோ...

கருத்துக்கள் பலரையும் சென்றடையவேண்டும்....

விளங்குபவர்கள் விளங்கிக்கொள்ளட்டும்..

அல்லாஹ்விடம் பலனை எதிர்பார்த்தவனாக...

அன்புடன்
ரஜின்

abiramamnatham said...

மாஷா அல்லாஹ் , உங்களுடைய ஈமானின் உறுதி என்னை மெய்சிலிர்க்கச் செய்கின்றது . அல்லாஹ்வே நமக்கு பாதுகாவலன் . அவன் அனுமதியின்றி ஒருஅணுவும் அசைவதில்லை.
தாங்களுடைய பதிவுகளை நான் பப்ளிஷ் செய்து கொள்ளலாமா . தாங்களுக்கு www.thoothuonline.com இந்த வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

கவி அழகன் said...

எல்லா மதமும் அன்பை தான் போதிக்கின்றன ,
தத்தமது மாதங்கள் பற்றி சிறப்புகளை சொல்வது கடமை மற்ற மதங்களை குறை சொல்வது அநாகரிகம்
மற்ற மதங்களை மதிக்க கற்றுக்கொலனும்

இன்ஷா அல்லாஹ்
அல்லாவின் அருள் பெற பிராத்திக்கின்றேன்

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோதரி., உங்களின் இந்த மார்க்க (அழைப்பு) ப்பணிக்கு அல்லாஹ் நற்கூலியை ஈருலகிலும் வழங்குவானாக...!
தமிழன் என்ற ஒரு நபர் இஸ்லாத்தை விமர்சனம் என்னும் பெயரில் தரக்குறைவாக எழுதி வருவது... குறித்து சொல்லிருக்கிறீர்கள் அவரது நரகல் நடை எழுத்துக்கள் இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியே தான் காட்டுகிறது எனினும் அவரது அறியாமையை கண்டு நம் மனம் கேலிச்சிர்ப்பை தான் தருகிறது. அல்லாஹ் அவருக்கும் , நமக்கும் நேர்வழி வழங்க போதுமானவன்.

@சகோதரர் தமிழன் அவர்களுக்கு, நீங்கள் உண்மையான தமிழராக இருந்தால் இஸ்லாத்தில் குறை இருப்பாத கண்டால் அதை கேள்வியாக அல்லது விமர்சனமாக முன் வையுங்கள்.பதில் தர இஸ்லாம் தயாராக இருக்கிறது., அதுவல்லாத தேவையற்ற சாடல்களை தவிருங்கள்.,வெறும் வாயால் ''ஓளியை" அணைக்கப் பார்க்கிறீர்கள்..அது ஒருகாலும் உங்களால் முடியாது.,
இதைப்போன்ற நிலைகளில் தான் இஸ்லாம் குறித்த விளக்கங்கள்,தெளிவுகள் குறித்த ஆக்கங்களை இன்ஷா அல்லாஹ் நாம் அதிகப்படுத்த வேண்டும்
சகோதரி., உங்களது அழைப்புப்பணியை தொடர்ந்து செய்ய அல்லாஹ் அருள்புரியட்டும்..

மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (3:104)

இறை நாடினால் இனியும் சந்திப்போம்
-ஓர் இறை அடிமை

நட்புடன் ஜமால் said...

இன்ஷா அல்லாஹ்

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... தோழி ஃபாத்திமாவுக்கு,

இப்போதுதான் உங்களின் முந்திய பதிவையும் சேர்த்து படிக்கிறேன். இஸ்லாத்தின் எதிரிகள் பெரும்பாலும் தைரியமில்லாத கோழைகளாகவே இருக்கிறார்கள். ஒளிந்துக் கொண்டு பின்னூட்டமிடுவதால், அவர்கள் நினைப்பதுபோல் நம்மை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட முடியாது(அல்லாஹ் உதவியால்). அதற்கு நாம் அஞ்ச‌வுமில்லை, அல்ஹம்துலில்லாஹ்!

ஒரு ஸஹாபியின் ஈரலைக் கடித்துத் துப்பிய மோசமான ஒரு இஸ்லாமிய எதிரியாக இருந்தவர், இஸ்லாத்தைப் புரிந்து ஏற்றுக் கொண்ட பிறகு அவருக்கும் ஸஹாபிய அந்தஸ்தை இறைவன் கொடுக்கவில்லையா? அதுபோல் நல்ல கொடுப்பினை இருந்தால் இவர்களும் ஒருநாள் திருந்துவார்கள், இன்ஷா அல்லாஹ்! நம்மனைவருக்கும் மென்மேலும் இறைவன் மன உறுதியைக் கொடுப்பானாக!

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
சகோதரி அவர்களுக்கு
இன்றுதான் உங்களின் தளத்தை பார்த்தேன்

உங்களின் மன உறுதிக்கு என் வாழ்த்துக்கள்.

அதே சமயத்தில் கொல்ல துணிந்தால் திருப்பிக் கொள்வது தான் இயல்பு

அதைதான் இஸ்லாமும் சொல்கிறது

இஸ்லாம் வாளால் பரவிய மார்க்கம் என்று சொல்வது எவ்வாறு தவறோ
அதே போன்று இஸ்லாத்திற்கும் வாளுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்வதும் தவறு

முஹம்மது நபி (ஸல்) ஊரைவிட்டு விரட்டி விட்டு மதீனாவிற்குள்ளும் நுழைந்த போது முஸ்லிம்கள் வாளை எடுக்கவில்லையென்றால் அழிக்கப்பட்டுயிருப்பார்கள்

அதனால் வார்த்தைகளை வார்த்தைகளால் அடியுங்கள்
ஊடகத்தை ஊடகத்தால் சந்தியுங்கள்

தொடரட்டும் உங்கள் தாவா பணி

வாழ்த்துக்கள் சகோ

Anonymous said...

Even the Holy Qur'an says that Joseph is not Christ's father, Maryam conceived the baby by the command of God! Everyone knows Jesus never had a earthly father! It's found in 19th Sura (Maryam)!

பாத்திமா ஜொஹ்ரா said...

என் அன்பு சகோதர-சகோதரிகளுக்கு மிக்க நன்றியும்,துவாவும்.உங்கள் பின்னூட்டங்கள் இன்னும் ஊக்கம் தருகின்றன.ஜசாகல்லாஹு க்ஹைர்

அரபுத்தமிழன் said...

சகோதரி, அழைப்புப் பணிதான் ஷைத்தான்களுக்கு மிக வெறுப்பான விஷயம்.
நாற்பது வயது வரை நல்ல பெயரை எடுத்த நபி(ஸல்) அவர்கள் இந்தப்
பணியை ஆரம்பித்த உடன் தான் வெறுப்பைச் சம்பாதித்தார்கள். நமக்கு இறைவன் தேவையான நேரத்தில் பொறுமையையும் தேவையான் நேரத்தில்
வீரத்தையும் தரப் போதுமானவன். சகோ ஹைதர் அலி சொல்வது போல‌
ஒரு கேள்வியின் நோக்கம் சரியில்லையெனில் பதிலெல்லாம் கொடுத்துக்
கொண்டிருக்கத் தேவையில்லை. 'நறுக்' கென்று திருப்பிக் கொடுக்க முடிந்தால்
கொடுங்கள், இல்லையென்றால் புறக்கணித்து விடுங்கள். வஸ்ஸலாம்.

ஏம்.ஷமீனா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வா ரஹ்மாடுள்ளஹி வா பரகதுஹ் சகோதரி பாத்திமா ஜோஹ்ரா,
மாஷா அல்லாஹ் அருமேயனது !!!
ஜசக்கல்லஹு க்ஹைர் பதிவுக்கு !!!
May ALLAH(swt) bless you sister and make it easy for you !

This article must be shared !!!




உன்ங்கள் சகோதரி,
எம்.ஷமீனா

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோ.ஃபாத்திமா ஜொஹ்ரா,

தன்னை எதிர்த்த, விஷம் கொடுத்து கொல்ல முனைந்த மாற்றுமதத்தவர்களிடம் நம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய பொறுமையும் எப்போதும் கொள்கையில் உறுதியோடு இருந்து, அவர்களை பயமில்லாமல் எதிர்த்த தீரமும் போற்றத்தக்கது & பின்பற்றத்தடத்தக்கது.

அத்தகைய பொறுமை @ தீரம் இவற்றை இன்று நம் கண்முன்னே கொண்டு வந்து காட்டி ஒரு சிறந்த முன்னுதாரணமாய் நீங்கள் திகழ்கிறீர்கள்.

தன்னை மிரட்டியும், அநாகரிகமாக வார்த்தைகளால் திட்டியும் பின்னூட்டமிட்ட மாற்றுக்கொள்கை சகோதரருக்கு அழகிய முறையில் தன் பதிவின் மூலம் தாவா செய்தும் தக்க பதிலதித்திருக்கின்றீர்கள், சகோ.

தங்களின், இந்த பதிவு அந்த சகோதரர்,தமிழன் (மற்றும் அவர் போன்றவர்களின்) மனதில் மாற்றத்தை கொண்டு வர இறைவன் உதவ வேண்டும்.இன்ஷா அல்லாஹ்.

சகோ.ஃபாத்திமா ஜோஹ்ரா, உங்களின் இந்த தீரத்துக்கும், கொள்கை உறுதிக்கும், இஸ்லாத்தை நோக்கிய தமிழனுக்கான அழைப்பு பணிக்கும்... சிறந்த நற்கூலியை இறைவன் வழங்குவானாக...ஆமீன்.

Javid said...

நன்மையை எத்தி வைப்பது மட்டும் தான் நம்முடைய வேலை. நம்முடைய மாற்று மத சகோதரி, சகோதரர்களுக்கு அருள் புரிய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கேட்டுக் கொள்வோம்.

அப்துல் ரஹ்மான்.ஜ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மாஷா அல்லாஹ்! உங்களின் மனவலிமை மென்மேலும் அதிகரிக்கட்டும்!

இந்தியாவில் வந்தேறிய பார்ப்பன பன்னாடைகளின் அடக்குமுறைதான் இன்றைய பார்ப்பனீய இந்து மதம். இதனைப் புரியாத அல்லது புரிந்தும் புரியாதது போல் நடிக்கும் இன்றைய பார்ப்பனீயத்தின் ஒரு பகுதிதான் இந்தத் "தமிழனும்".

இவர்களும் கருத்துக்களுக்குக் கருத்துக்களாயே பதிலடி தொடரவேண்டும்.

குப்பைகளைக் கொட்டிவிட்டால் பயந்து ஒதுங்கி விடுவோம் என்றோ வெத்துக் கொலைமிரட்டல்கள் விட்டால் ஓடி ஒளிந்து விடுவோம் என்றோ மனப்பால் குடிக்கும் இந்த அற்பர்களின் விஷுவல் மிரட்டல்களுக்கெல்லாம் எங்கள் வீட்டுக் குழந்தைகூட அஞ்சாது என்பதைத் தெளிவியுங்கள் சகோதரி.

உங்கள் எழுத்துப் போர் தொடரட்டும். இறைவன் அருள்புரிவான்.

அன்புச் சகோதரர் யாதவன்,

மற்ற மதத்தை மதிக்கக் கற்றுக்கொள்வதன் அர்த்தம் என்ன?

கல்லையும் மண்ணையும் கண்டக் கருமாந்திரங்களையும் வணங்கச் சொல்வதெல்லாம் ஒரு மதமா? ஒரு கொள்கையா?

எல்லா மதமும் அன்பைத்தான் போதிப்பதாக கூறுகிறீர்கள்.

எந்தக் குற்றமும் செய்யாத வாலியினை மறைந்திருந்து அம்பெய்து கொன்ற கோழை தெய்வங்களா அன்பைப் போதிக்கின்றன?

- இறை நேசன்.

Jafar ali said...

அன்பு சகோதரி! தங்கள் அழைப்பு பணி மேலும் சிறக்க அல்லாஹ் அருள் புரிவானாக! இஸ்லாமிய பதிவுலகில் முஸ்லிம் பெண்களின் பங்கு அதிகமாக இல்லை. தங்கள் போன்றவர்களின் பதிவை படிப்பதின் மூலமாக இன்ஷா அல்லாஹ் சகோதரிகள் ஆர்வம் கொள்ளட்டடும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரியே...

தங்களின் அழைப்புப்பணி தொடரட்டும்.. அல்லாஹ் நல்லருள்புரிவானாக.

"தமிழன்" என்ற புனைப்பெயரில் வரும் பொறம்போக்குகள் காலம் காலம் இருந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு பதில் அளித்து நம் நேரத்தை வீண்டடிப்பதைவிட நம் தளங்களில் நல்லவற்றையே சொல்லிவருவதே மேல். இது என் அனுபவம்.

தமிழன் என்ற புனைப்பெயரில் வரும் போலிகளுக்கு இணையம் ஒரு பொழுதுபோக்கு, ஆனால் இணையத்தில் சத்தியத்தை மக்களுக்கு எடுத்துவைப்பது நம்மீது விதிக்கப்பட்டுள்ள கடமை.

அந்த கடமையை நீங்கள் செய்கிறீர்கள். இவனைப் போன்றவர்களின் தளங்கள் அநேக அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இவர்களை கண்டுக்கொள்ளாமல் இருப்பதே மேல்.

உண்மையை எத்திவைப்பதற்காக நாகரீகத்துடன் அறிவுப்பூர்வமாக கருத்திடுபவர்களிடம் விவாதிப்பதில் தவறில்லை. தொடருங்கள் உங்கள் எழுத்துப்பளியை.