அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால்.
யாஅல்லாஹ் நிச்சியமாக நீ மிக்க மன்னிப்பவன். மன்னிப்பதை விரும்புகிறவன். ஆகையால் தந்தையவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பிழைகள் யாவற்றையும் நீ மன்னித்து விடுவாயாக! இறைவா! அவர்களின் பாவங்களை மன்னிதருள்வாயாக! அவர்களுக்கு நற்பதவியை கொடுத்து சொர்க்கத்தில் நுழைச்செய்து நல்லோர்களின் கூட்டத்தில் சேர்தருள்வாயாக!
எங்களின் துவாக்களை யாவற்றையும் ஏற்றுக்கொள்வாயாக.
ஜலீலாக்கா ஊருக்கு கிளம்புகிறார்கள். அவர்களின் பயணம் நல்லபடியாக அமைந்து குடும்பதைகண்டு ஆறுதல் அளித்துவிட்டுவர எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரிவானாக..காலையில் ஏழுமணிக்கு அக்கா போன்செய்து செய்தியை சொல்வதற்குள் அழுகையின் ஒலி ஓங்கியது மனதை கனகச்செய்துவிட்டது [இதோ கிளம்பப்போகிறோம் ஏர்போட்டுக்கு வழியனுப்ப] வெளிநாட்டுவாழ்க்கையில் பலதை இழக்கிறோம் அதிலும் இதுபோன்ற மரண நிகழ்வுகளை அறியும்போது நம் நெஞ்சம் உடைந்து கண்ணீரை அடக்கமுடியாமல் தவிக்கிறோம்..
நமது தவிப்புகளை தீர்ப்பது கண்ணீர்களை துடைப்பதும் இறைவன் வசமே உள்ளது..
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.
சமையல் அட்டகாசம் ஜலீலாக்காவின் தந்தை இன்று காலை மரணமடைந்து விட்டார்கள் . [இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.]
உடல் நலம் சரியிலாமல் இருந்து காலில் ஆப்ரேஷன் செய்திருந்தார்கள். ஹாஸ்பிட்டலில் இருந்து நேற்றைய முன்தினம்தான் வீட்டுக்கு டிச்சார்ஜ் ஆகிபோனவர்கள் இன்று இறந்துவிட்டார்கள்.. அவர்களின் இழப்பு அக்குடும்பத்திற்க்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு. என்ன ஆறுதல் சொன்னாலும் ஏற்கமுடியாத நிலையில் அவர்கள் மனமிருக்கும். ஆனாலும் இதுபோன்ற இழப்புகளை ஏற்கத்தானே பூமிக்கு வந்துள்ளோம். இதிலிருந்துமட்டும் யாரும் தப்பிக்கமுடியாது..மண்ணிற்கு வரும் ஒவ்வொரு உயிரும் மீண்டும் மண்ணிற்கு போவது உறுதி இது மான்புடையோன் வகுத்த நியதி..
ஜலீலாக்காவின் தந்தைக்காக அவர்களின் மறுமை வாழ்வுக்காவும் . அவர்களின் குடும்பத்தின் மனநிம்மதிக்காவும்அனைவரும் துஆச்செய்யுங்கள்.
யாஅல்லாஹ் நிச்சியமாக நீ மிக்க மன்னிப்பவன். மன்னிப்பதை விரும்புகிறவன். ஆகையால் தந்தையவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பிழைகள் யாவற்றையும் நீ மன்னித்து விடுவாயாக! இறைவா! அவர்களின் பாவங்களை மன்னிதருள்வாயாக! அவர்களுக்கு நற்பதவியை கொடுத்து சொர்க்கத்தில் நுழைச்செய்து நல்லோர்களின் கூட்டத்தில் சேர்தருள்வாயாக!
எங்களின் துவாக்களை யாவற்றையும் ஏற்றுக்கொள்வாயாக.
ஜலீலாக்கா ஊருக்கு கிளம்புகிறார்கள். அவர்களின் பயணம் நல்லபடியாக அமைந்து குடும்பதைகண்டு ஆறுதல் அளித்துவிட்டுவர எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரிவானாக..காலையில் ஏழுமணிக்கு அக்கா போன்செய்து செய்தியை சொல்வதற்குள் அழுகையின் ஒலி ஓங்கியது மனதை கனகச்செய்துவிட்டது [இதோ கிளம்பப்போகிறோம் ஏர்போட்டுக்கு வழியனுப்ப] வெளிநாட்டுவாழ்க்கையில் பலதை இழக்கிறோம் அதிலும் இதுபோன்ற மரண நிகழ்வுகளை அறியும்போது நம் நெஞ்சம் உடைந்து கண்ணீரை அடக்கமுடியாமல் தவிக்கிறோம்..
நமது தவிப்புகளை தீர்ப்பது கண்ணீர்களை துடைப்பதும் இறைவன் வசமே உள்ளது..
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.
அன்பு சகோதரி மளிக்கா அவர்கள் வெளியிட்ட மரண செய்தியை அப்படியே இங்கு பதிந்துள்ளேன்.
நாம் அனைவரும் அன்னாருக்காக துவா செய்வோம்.என் அன்பு மூத்த சகோதரி ஜலீலா அக்கா அவர்களுக்கு இதன் மூலம் என் இரங்கலை தெரிவிப்பதோடு,அல்லாஹ்விடம் இறைஞ்சியவளாக,
பாத்திமா ஜொஹரா.
1 comment:
இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.
Post a Comment