இதற்கு குழந்தை தொழிலார்களை சட்ட விரோதமாக பயன்படுத்துகிறார்கள் அங்குள்ள சுரங்க தொழில் செய்யும் முதலாளிகள்.
இது உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயம் நிறைந்ததாகும். 400 அடி ஆழத்திற்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் இந்த சிறுவர், சிறுமிகள் பயணிக்கின்றனர்.
நிலக்கரியை தோண்டி எடுக்க ஒரு கம்பி, தோண்டிய நிலக்கரியை அள்ளிவர ஒரு கூடை இப்படியாக இந்த சிறுவர், சிறுமிகள் கடின உழைப்புக்கு உள்ளாக்கப் படுகின்றனர்.
ஹஸாரிபாக் மாவட்டத்தில் மட்டும் இது போன்று நூற்றுக்கணக்கான நிலக்கரிச் சுரங்கங்கள் சட்டவிரோதமான முறையில் இயங்கி வருகின்றன.
இங்கு ஆயிரக்கணக்கான சிறுவர்களும், சிறுமிகளும், பெண்களும் சுரங்க வேலை என்ற பெயரில் தினந்தோறும் மரணத்தோடு விளையாட வைக்கப்படுகின்றனர்.
அச்சுரங்கங்களில் ஏற்படும் விபத்துக்களை, சிறுவர்களின் மரணங்களைப் பற்றி பதிவு செய்யவும், விசாரிக்கவும் அரசு முன்வருவதேயில்லை.
“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்."
THE QURAN 6:151
No comments:
Post a Comment