Tuesday, November 2, 2010

சாப்பாடு போடாத மகன்...

பொள்ளாச்சி பெத்தநாயக்கனூரை சேர்ந்தவர் கோபால் (50). இவர், மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக கோவையில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். மனு கொடுக்க காத்திருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக 108 இலவச ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் விரைந்துவந்து முதியவரை, வேனில் ஏற்றி கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர் கலெக்டரிடம் கொடுக்க வைத்திருந்த மனுவில், எனக்கு 10 ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லை. 

என்னிடம் இருந்த ரூ.35 ஆயிரம் ரொக்கத்தை எனது மகன் பறித்துக்கொண்டு சாப்பாடு போடவில்லை. பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவதாக மருமகள் மூலம் மிரட்டுகிறான். என்னிடம் இருந்து அவன் பறித்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும். வாழும் காலம் வரை சாப்பாடு போட உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
 செய்தி 


“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.6:151


 மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.46:15


திருக்குர்ஆன் 
  

13 comments:

பாத்திமா ஜொஹ்ரா said...

http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=8101

அன்னு said...

இது போல ஏற்கனவே கோவையிலும் ஒரு பெரியவர் மண்ணெண்னை கேனை தூக்கிட்டு வந்ததை படிச்சேன். இதையெல்லாம் கேட்கும், படிக்கும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே அவமானம்...சுப்ஹானல்லாஹ்..

பாத்திமா ஜொஹ்ரா said...

அதிரை அஹமது காக்கா அவர்களின் யுனைடெட் பவுண்டேஷன் பற்றிய விளக்கத்தை ஏற்று - ஒரு இயக்கத்தை அல்லது தனி மனிதரை ஆதாரம் இன்றி குறை கூறுவது தவறு என்பதன் அடிப்படியில் இந்தக்கட்டுரையை என் பிலாகிளிருந்து நீக்கிவிட்டேன்.அதுமட்டுமல்ல,அந்த அவசர செய்தி மூலம் அந்த இயக்கமோ,அல்லது தனி நபர் பாதிக்கப்பட்டிருப்பின் அதற்காக வருந்துகிறேன்,மன்னிப்புக்கோருகிறேன்.அதிரை எக்ஸ்பிரசும் நீக்க வேண்டும் என கோருகிறேன்.மற்ற சகோதரர்களும் உட்பட என் பிளாக்கில் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.அவர்கள் உணர்வையும் இந்த நேரத்தில் மதிக்கிறேன்.அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக.

meerashah rafi ahamed said...

http://adiraixpress.blogspot.com/2010/11/blog-post_3968.html

Adirai Express டீமும் சரி எந்த ஒரு நல் எண்ணத்தில் நடத்தப்படும் மீடியாவும் சரி, ஒரு சாரார் கருத்தை மட்டும் கேட்டுக்கொண்டு செய்திகளை வெளியிடாது . இந்த செய்தி இரு சாராரிடம் கேட்டது போல் தெரிய வில்லையே?!? அப்படி கேட்டிருந்தால் தயவு கூர்ந்து UNITED FOUNDATION இன் கூற்றையும் இங்கே தெரிவித்தால் மிக்க நன்றாக இருக்கும் என நம்புகிறேன் .அது வரை இதை வெளியிடாமல் இருப்பது நன்றாக இருக்குமே! . "ஊர் காவல் படை" சமாச்சாரமும் இப்படித்தான் முன்னுக்கு பின்னாக வெளியிடப்பட்டது. நான் இதை ஒரு குறையாக கூறவில்லை, வெளிநாட்டில் வாழும் எங்களுக்கு உள்ளூரில் நடக்கும் நல்லவை, கெட்டவை உங்கள் மூலம் சரிவர வந்தடைய ஆசை படுகின்றோம்.

மூ.சா.மூ. மீரஷாஹ் ரபி அஹ்மத்
ஜித்தா

meerashah said...

இது போஸ்டிங்குக்காக அல்ல. ஜஸ்ட் உங்களுக்காக.

பாத்திமா ஜொஹர அவர்களே நீங்கள் படித்த பகுத்தறிவு வாதி என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி .
இணைய தளம் என்று வந்து விட்டால் அதற்கு இணையாக பகுத்து ஆராய்ந்து தங்கள் கமெண்ட்ஸ்( http://tiny.cc/mjvmu) எழுதுவது நன்றாக இருக்கும் . காரணம் நிமிடத்தில் லக்ஷத்தை திரும்பி பார்க்க வைக்கும் ஒரே மீடியா இது . கொஞ்சம் நாம பார்த்துதான் கையாள வேண்டும்.

இப்படிக்கு
மீரஷாஹ் ரபி அஹ்மத்
ஜித்தா

meerashah rafi ahamed said...

adirai express ஐ மீண்டும் ஒருமுறை அந்த ஆர்டிகிளை நீக்குமாறு நீங்கள் கேட்டுகொண்டால் நன்றாக இருக்கும் . நான் நாலு முறை சாதாரண கமெண்ட் எழுதியும் வெளியிட தயங்குகிறார்கள் . ஆனால் நீக்க தயக்கமில்லை . நாங்கள் 'சமரச' த்தை எதிர்பார்கிறோம் 'நக்கீர' த்தனத்தை அல்ல.

இப்படிக்கு
மீரஷாஹ் ரபி அஹ்மத்
ஜித்தா

adirai sister said...

அஸ்ஸலாமு அலைக்கும்

இதோ என் பதில்!!!
1. அந்தச் சகோதரி, 'ஏமாற்று' என்ற ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஏமாற்று என்றால், முறைப்படி கேஷ் ரசீது கொடுக்கப்பட்டிருக்குமா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்---என்கிறார்.
பதில்: பி.எஸ்.என்.எல் எஸ் .டி.ஈ அலுவலகத்தில் பில் போடுபவரும்,
எஸ் .டி.ஈ- யும் யும் சொன்னது: நாங்கள் யுனைடெட்
பவுண்டேஷனு க்கு அத்தனை கஸ்டமர் பெயரிலும் தனிதனி ரசீது கொடுக்கிறோம்.அதை கேட்டு வாங்கி பாருங்கள் என்றார்கள்.
எனக்கு பி.எஸ்.என்.எல் ரசீது தாருங்கள்.பார்க்கலாம்.

2. பில்களில் தொகைகள் அழிக்கப்படவில்லை; திருத்தப்படவுமில்லை; கோடிட்டு எழுதப்பட்டுள்ளது. எழுதியது நாங்களில்லை. டெலிபோன் டிபார்ட்மெண்ட் ---என்கிறார்.

பதில்: பி.எஸ்.என்.எல். பில்லில் கோடிட்டு எழுதப்பட்டுள்ள கையெழுத்தும், யுனைடெட் பவுண்டேஷன் ரசீதில் உள்ள கையெழுத்தும், பேனா மையும் ஒன்றே என்பது உற்று நோக்கினால் நன்கு தெரியும்.. அப்படிஎன்றால்,அவர் கணிப்பொறி மூலமே திருத்தி இருக்கலாமே? ஏன் பேனாவால் திருத்த வேண்டும்?கண்டிப்பாக பி.எஸ்.என்.எல். அலுவலர் என் பில்லை திருத்த வேண்டிய அவசியம் இல்லை.
நான் 1.11.10-ல் என் உறவினருடன் நேரில் சென்றும் எஸ் .டி.ஈ அலுவலகத்தில் பார்த்தேன். பி.எஸ்.என்.எல் எஸ் .டி.ஈ அலுவலகத்தில் கணிப்பொறியில் என் கணக்கில் அட்ஜஸ்டட் என்றும்,0.00 என்றும் தெள்ளத்தெளிவாக உள்ளது. பி.எஸ்.என்.எல் எஸ் .டி.ஈ என்னிடம் சொன்னது...நீங்கள் முன்பு செலுத்திய டெபாசிட் தொகையிலிருந்து அட்ஜஸ்ட் செய்யப்பட்டுள்ளது என்றார். உங்கள் பில் 0 தான் என்றார். அந்த மாதங்களில் என் கணக்கில் எந்த தொகையும் செலுத்தப்படவில்லை.
அதிரையில் உண்மையான நடுநிலைவாதிகள் குழுவாக சென்று கூட தாராளமாக நேரில் தெரிந்து கொள்ளலாம்.பொய்யை உரக்கச் சொன்னால் உண்மை ஆகாது.
3. பதில்: நான் பி.எஸ்.என்.எல் அக்கவுண்ட் ஆபிஸர், தஞ்சாவூர் -ஐ தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பேசிய எண்: 04362275099.அந்த எண் போன் பில்லின் பின்புறம் கணக்கு அதிகாரி 3 என்று கொடுக்கப்பட்டு இருக்கும். கணிப்பொறியில் விரிவாக ஆராய்ந்துவிட்டு பின்வருமாறு அவர் தான் தெளிவாக விளக்கம் அளித்தார்.
4. அதிரை U.F.அலுவலகத்தில், புகார் கூறியுள்ள நபர் பேசியது, இரண்டே இரண்டு நிமிடங்கள்தான். அவர் பெண் என்பதால், அதிக நேரம் நிறுத்தி வைத்துப் பேச முடியவில்லை. அந்த நேரத்தில் அந்தப் பெண் கூறிய தகவல்களுக்கு ஆதாரங்களை எடுத்துக் காட்டி விளக்கம் கூற முடியாது. சுருக்கமாக, அந்தத் தொகை எங்களுக்குச் சேரவேண்டியது என்று மட்டும் சொல்லப்பட்டது-- என்கிறார்.
பதில்: உண்மையில் நான் சுமார் 15 நிமிடங்கள் பேசியிருப்பேன். ஆனால் அவர் சரியான பதில் கூற முடியாமல்,சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னார். அப்போது அவர், அந்த மாதம் நிறைய பேருக்கு அது போல் தான் பில்கள் வந்தன . நான் பேனாவால் திருத்தி தான் இருந்தேன். யாரும் உங்களைப் போல் வந்து கேள்வி கேட்கவில்லை,அது அப்படித்தான், எல்லாம் சரி தான், அவை எல்லாம் எங்களுக்கு சேர வேண்டிய கமிஷன்கள் என்று ஏதேதோ மழுப்பலான பதில்களை கூறினார். என் முழுத்தொகையும் அவர்களுக்கு சேர வேண்டிய கமிஷனா?அந்த 2 மாதத்திற்கு மட்டும் ஏன் அவ்வளவு கமிஷன்? என் பில்லை போல் திருத்தப்பட்ட எல்லா பில் தொகையும் உஙகளுக்கு கமிஷனா?

5. மொத்தத்தில், அந்தக் குற்றச்சாட்டு, தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டு எழுதப்பட்டிருக்கும் என்று நினைக்கிறோம். 'படித்த பெண்' என்று பெருமைப் படுவதில் தவறில்லை. பொறுமை, நிதானம், தீர விசாரித்தல் போன்றவை கற்றோர் இயல்பு என்பதை எல்லோரும் அறிவர்- என்கிறார்.

பதில்: தீர விசாரிக்காமல் நான் எதுவும் சொல்லவில்லை. நான்
முதலில் யூ.எப்.ஆபிஸிற்கு வந்து கேட்டேன்.
மழுப்பலாக பதில் சொன்னீர்கள். பின், நான் பி.எஸ்.என்.எல் அக்கவுண்ட் ஆபிஸர், தஞ்சாவூர் -ஐ தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பேசினேன்.அவர் விளக்கம் அளித்தபின் மீண்டும் உங்களிடம் போனில் கேட்டேன்.அதே பதில் சொன்னீர்கள். பின் தான்,
நம்மூர் எஸ்.டி.ஈ ஆபீஸ் போய் நேரில்
பார்த்தேன். நீங்கள் தவறு செய்தது உறுதி ஆன பின் தான் நான் என் கணவர் மூலம் அதிரை எக்ஸ்பிரஸ்-ஐ தொடர்பு கொன்டேன்.

நீங்கள் தவறு செய்யவில்லை என்றால்,ஏன் நேற்று மக்ரிப்-இஷாக்கிடையில் எங்கள் தொலைபெசி எண்ணிற்கு பேசி,நான் செலுத்தாமல்,நிறுத்தி வைத்த 2 மாத தொகையை அந்த தொகை 1878-ல் கழித்துக்கொள்கிறேன் என்றீர்களே?-ஏன் அந்த காம்பிரமைஸ்?

பாத்திமா ஜொஹ்ரா said...

யுனைடெட் பவுண்டேஷன் பற்றி என்ன நடக்கிறது?இரு தரப்பிலிருந்தும் சொல்லப்படும் கருத்தில் எது சரி?யார் சொல்வது உண்மை.ஒன்றும் புரியவில்லை.பிளீஸ் தவறு செய்பவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி திருந்திக்கொள்ளுங்கள்

பாத்திமா ஜொஹ்ரா said...

இது சம்பந்தமாக யுனைடெட் பவுண்டேஷன் பதில் என்ன?அவரகள ஏன் பதில் சொல்ல தயங்குகிறார்கள்.அவர்கள் பக்கம் நியாயம் இருந்தால்,அவர்கள் லெட்டர் பேடில் எழுதி மறுப்பு அனுப்பலாமே?ஒரே மர்மமாக உள்ளது?

adirai sister said...

சகோதரி பாத்திமா ஜொஹ்ரா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
நான் புகழுக்காகவோ அல்லது நான் படித்தவள் என்று பறைசாற்றவோ இந்த புகாரை அதிரை எக்ஸ்பிரஸிற்கு அனுப்பவில்லை.
என்னைப் போல் ஊரில் உள்ள மற்ற சகோதர,சகோதரிகளும் யுனைடெட் பவுண்டேஷன் அமைப்பு மூலம் ஏமாற்றப்பட்டு விடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான்அனுப்பினேன்.
பெண்மையை போற்றும் நீங்களே,அதிரையின் ஒரு குடும்ப பெண் எந்த ஆதாரமும் இல்லாமல்,இவ்வளவு பெரிய புகாரை செய்யமாட்டாள் என்பதை எவ்வாறு உணராமல் போனீர்கள்?
அதிரை அஹமது காக்கா அவர்கள் சொன்னார்கள் என்பதற்காக நடுநிலையாக செயல்படாமல், உடனே பிளாக்கில் இருந்து தூக்கி விட்டீர்கள்.இன்டர்நெட் பிராப்ளமாக இருந்ததால்,உடனே என்னால் பதில் அனுப்ப இயலாமல் போனது.......
பின் அதிரை எக்ஸ்பிரஸில் எனது பதில்களை பார்த்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
வஸ்ஸலாம்.

பாத்திமா ஜொஹ்ரா said...

தவறாக என்ன வேண்டாம் அதிரை சிஸ்டர் (ராத்தா). யாரும் யாரையும் ஏமாற்ற எண்ணக்கூடாது அப்படி ஏமாற்றும்போது நாமும் பார்த்துக்கொண்டிருக்க கூடாது என்ற எண்ணத்தில் உடனே அந்தக் கட்டுரையை பதிந்தேன்.அதன் பிறகு பலர் அந்தக்கட்டுரைக்கு ஆதரவாகவும்,எதிர்ப்பாகவும் எனக்கு கமென்ட் அனுப்பினார்கள்.எல்லாவற்றயும் நீக்கிவிட்டு,சிலது மட்டும் பிரசுரித்தேன்.இன்னும் சிலர் மிரட்டியும் கமென்ட் போட்டார்கள்.அதற்கு நான் பயப்படவில்லை என்பது ஒரு புறம் இருக்க,நீங்கள் குற்றம் சாட்டிய அமைப்பு "நிச்சயமாக நாங்கல் செய்யும் சேவைக்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான். வேறு யாருடைய சாட்சியும் எங்கலுக்கு தேவைல்லை. செலுத்தப்பட்டுள்ள முதலீட்டுக்கும் செய்யும் வேலைகளுக்கும் கிடைக்கக் கூடிய ஆதாயம் யாருமே நம்பமுடியாததாகத் தான் இருக்கும்.

- Hajashareef." என்று கருத்து பதிந்துள்ளார்கள்.
read more

பாத்திமா ஜொஹ்ரா said...

இப்படி பலர் தங்கள் கருத்துக்களை பதியும்போது-ஒருக்கால் இது தவறாக இருந்தால்,நல்லது செய்யப்போய் - (நன்மைக்கு பதிலாக தீமை கிடைத்து விட்டால் என்ன செய்வது என்ற அல்லாஹ்வின் மேல் உள்ள அச்சம்)கெட்டதாக-அவதூறாக அமைத்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் வந்தவுடன் நீக்கினேன்.

எனவே,நீங்கள் சொல்வது சரி என்று இறைவன் சாட்சியாக வைத்து - பதில் தந்தீர்களேயானால் நீங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து இன்னும் விரிவாக - வெறும் பதிவாக அல்லாமல் முறையான புகாராக - இந்திய அரசுக்கு நாம் தெரிவித்து - அவர்கள் குற்றம் செய்திருந்தால் நடவடிக்கை எடுக்க ஆவன செய்வோம்.ஒருக்கால்,அவர்கள் பக்கம் நியாயம் இருக்குமேயானால் - பிளீஸ் இதை இத்தோடு விட்டுவிடலாமே?

உங்கள் பதில் என்ன ராத்தா?

MSM. Meerashah Rafi Ahamed said...

Adirai Sister vs Adirai.Foundation -
Nalladhoru vilakkam..Sindhiththu seyalpattamaikum, seerana badilhalukkum enadhu paarattukkal..