Wednesday, October 27, 2010

படித்தேன்,பகிர்ந்தேன். உத்தி

”ஹலோ …. யாரு?”
“அஸ்ஸலாமு அலைக்கும் ரபீக்தானே? சுல்தானோட மகன் ரபீக்?
‘’ஆமா …. நீங்க?’’
‘’நான் தான் கம்பம்ல் இருந்து காதர் மாமா பேசறேன். சின்னப் புள்ளைல பார்த்தது. சொகமா இருக்கீயா?
  ‘’ஐயோ காதர் மாமா… ! எங்கப்பாவோட பெஸ்ட் பிரண்ட். சொல்லுங்க மாமா. எப்படியிருக்கீங்க? என்ன விசேஷம்?’’
  ‘’நல்லார்க்கேன் …. அப்புறம் நஜீபுன்னு ஒரு பையன் இருக்கானாமே, தேனிக்காரப் பையன். உங்கூடப் படிச்சவண்டு சொன்னாங்க. அவன் எப்படி நல்ல பையனா? சும்மா ஒரு காரியமாத்தேன் கேக்கறேன்.’’
  ‘’சூப்பர் பையன் மாமா. முன்பெல்லாம் அழகா இருப்பான்…’’
  ’’ஏன் இப்ப அழகா இல்லயா?’’
  ‘’இப்பக் கொஞ்சம் குடிக்கப் பழகி ஆளு நோஞ்சானாகிப் போனான். இருந்தாலும் விவரமான பையன் மாமா. ரொம்பக் கெட்டிக்காரன்.’’
  ‘’அப்படியா என்ன தொழில் செய்யறான்?’’
  ‘’தற்சமயம் ஒண்ணுமில்லை மாமா. அவுங்கப்பா அவன நம்பமாட்டேங்கிறார். ஒரு தரம் ரெண்டு லட்சத்தை தொலைச்சுட்டான்றதுக்காக பெத்த புள்ளைய வாழ்க்கை பூரா நம்பாட்டி எப்படி மாமா… அது சரி எதுக்கு அவனப் பத்திக் கேக்குறீங்க மாமா?’’
  ‘’சும்மா ஒரு கல்யாண ஆலோசனை. என்னுடைய ஒரு நண்பர் விசாரிக்கச் சொன்னார்.”
  ‘’தைரியமா பெண் கொடுக்கச் சொல்லுங்க மாமா. கடை வச்சுக் கொடுத்தா எப்படியும் பொழச்சுக்கிறுவான்.’’
  ‘’ப்ச்… அவன விடு… வேறே ஒரு பையன் இருக்கானாமே நாசர் –ன்னு சின்னமனூர்க்காரன். அவனத் தெரியுமா?’’
 ‘’நல்லாத் தெரியும். நஜீப விட தங்கமான பையன் மாமா.’’
 ‘’அவன் என்ன செய்யறானாம்?’’
 ‘’ஸ்டேசனரிக் கடை வைத்திருந்தான்.’’
 ’’வைத்திருந்தானா? இப்ப இல்லையா?’’
‘’ஆமா மாமா. ஃபிரண்டுங்க கூட சேர்ந்து சீட்டு விளையாண்டு ஒரே ராத்திரில எழுபத்தைந்தாயிரம் ரூபாய் தோத்துட்டான். அந்த விரக்தில குடி கொஞ்சம் ஓவராயிடுச்சு. மத்தபடி எந்தக் கம்பளைண்டுமில்லங்க மாமா. பொண்ணுக் கொடுக்கிறதாயிருந்தா ரெண்டு பையன்கள்ல யாருக்கு வேணும்னாலும் தைரியமா கொடுக்கச் சொல்லுங்க மாமா. நான் கூட ராத்திரி பூரா அவனுங்க கூடத்தான் இருந்தேன். சுபுஹுக்கு முன்னாடிதான் வந்து படுத்தேன். லுஹர் நேரம் போன் பண்ணி எழுப்பிட்டீங்க. அவனுங்க ரெண்டு பேருமே என்னோட உயிர் நண்பனுங்க. யாரையுமே நான் குறைச்சு சொல்ல மாட்டேன். சரிதானே மாமா?’’
  ‘’ரொம்ப சரிங்க மருமகனே. உன்னச் சின்னப் பிள்ளைல பார்த்தது. உங்கப்பாவை நல்லாத் தெரியும். நீ உங்கப்பனுக்கு அப்பனா இருக்கிறீயே. நான் அவனுங்களைப் பற்றி விசாரிக்குறதுக்காக போன் பண்ணலை. உன்னைப் பத்தி தெரிஞ்சுக்கிறத்தான் கூப்பிட்டேன். அல்லாஹ் காப்பாத்தினான். வச்சிரட்டா.’’  
நன்றி : சமரசம் : ஆகஸ்ட் 1-15,2010 

9 comments:

அஸ்மா said...

நேற்று எனக்கும் இது மெயிலில் வந்தது ஃபாத்திமா! ஃப்ரெண்ட்ஸ் கிட்டயோ, நெருங்கிய சொந்தங்கள் கிட்டயோ விசாரித்தால் இப்படிதான் ஏறுக்கு மாறா செய்தி கிடைக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஆனா இந்த சம்ப‌வத்தில் சம்பந்தப்பட்டவரையே விசாரித்திருப்பது வித்தியாசமாக உள்ளது.

Anisha Yunus said...

ஃபாத்திமாக்க, உங்களோடு பெசியது ரொம்ப சந்தோஷம். பையன் பின்னடி சுத்த வேண்டி இருந்ததால் பேச முடியலை. இன்னொரு தடவை பேசறேன் இன்ஷா அல்லாஹ். கதை ரொம்ப அருமையா இருக்கு, சில அறிவுரைகளெல்லாம் பட்டாதான் புரியும் :)

Anonymous said...

sister fathima
could you give me your
mobile number or email id?.
by
rafia

ரஜின் said...

அருமை...
உன் நண்பனை பற்றி சொல்,நான் உன்னை பற்றி சொல்கிறேன்.என்று யாரோ சொல்லிய வாசகம் கேள்விப்பட்டு இருக்கிறேன்,
அது உண்மைதான்..
இச்சிறுகதையும் அதை மெய்ப்பிக்கிறது,
எழுத்து அருமை...தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்
ரஜின்

ரஜின் said...

சகோ,,,
எனது தனிப்பட்ட ஆலோசனை..
ராஃபியா எனும் பேரில் வரும் நபர் தங்களின் தொடர்பு எண் கேட்கிறார்,அவர்களை புறக்கணித்து விடுங்கள்.தங்களது ஃபோட்டோ,மொபைல் எண்,மெயில் ஐடி,இன்னபிற இவற்றை பொதுவில் பகிர்ந்து கொள்ள வேண்டாம்...

அன்புடன்
சகோதரன் ரஜின்

பாத்திமா ஜொஹ்ரா said...

அன்னு அக்கா,உங்களோடு பேசியது எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி.பையனை கவனிச்சிக்கோங்க

பாத்திமா ஜொஹ்ரா said...

சில சகோதரர்கள் ஈமெயில்,தொலைபேசி எண் போன்ற விவரங்கள் கேட்கிறார்கள்.என்னால் தர இயலாது என்பதை தெரிவித்துக் கொள்வதோடு - தவறாக என்ன வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.அதே போன்று சிலர் அவர்களின் பிளாக்கில் எழுதும்படி கமெண்டில் செய்தி அனுப்பியுள்ளார்கள்(தொடர்ந்து)அவர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது,என்னால் இயலாது என்பது மட்டுமே.மற்றபடி ஏற்கனவே ஒத்துக்கொண்டுள்ள அதிரை எக்ச்ப்ரெஸ்,பீஸ் ட்ரைன் இவ்விரண்டில் மட்டும் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எழுதுவேன்,தொந்தரவு செய்யவேண்டாம்,உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

அன்புடன் மலிக்கா said...

நேற்று எனக்கும் இது மெயிலில் வந்தது ஃபாத்திமா..

நல்ல யோசனைதான்..

//சில சகோதரர்கள் ஈமெயில்,தொலைபேசி எண் போன்ற விவரங்கள் கேட்கிறார்கள்.என்னால் தர இயலாது என்பதை தெரிவித்துக் கொள்வதோடு - தவறாக என்ன வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்..//

இதையேதான் நானும் சொல்லிவருகிறேன் பலருக்கு.. நல்லது ஃபாத்திமா

அம்பாளடியாள் said...

வணக்கம் இன்றுதான் உங்கள் தளத்திற்கு வந்துள்ளேன் .
சிறப்பான ஆக்கங்களை வெளியிட்டுவரும் தங்களுக்கு
எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
நன்றி பகிர்வுக்கு .