Wednesday, October 20, 2010

எனக்கு கிடைத்த சைனீஸ் விருந்து

நான் வேலை செய்யும் இடத்தின் அருகே ஒரு பெரிய ஷாப்பிங் காம்பள்க்ஸ் உள்ளது.அங்கு பல விதமான கடைகள்.அங்கு ஒரு சைனீஸ் ஹெர்பல் கடையும் இருக்கிறது.அங்குள்ள ஒரு சைனீஸ் பெண் எனக்குப் பழக்கம்.பிரேக் நேரத்தில் போய்  பேசிக் கொண்டிருப்பேன்.ஆங்கிலமும்,சைனீசும் கலந்த பேச்சு.அந்த கடையின் மனமும் மிக அருமையாக இருக்கும்.எல்லா வகையான வேர்கள்,தாவரங்கள்,இலைகள் இன்னும் பெயர் தெரியாத வகைகள்...............

ஒருநாள்,அந்த பெண் சொன்னால்.நாளைக்கு உங்களுக்கு விருந்து தரப் போகிறேன் என்று?நானும் சரி ஆனால் சிலவற்றை நான் சாப்பிடமாட்டேனே?(உள்ளுக்குள் பயங்கர பயம் வேறு)பாம்பு,தவளை,கரப்பான் என அடுக்கி இருந்தால் என்ன செய்வது?(இவற்றையெல்லாம் சைனீஸ் சூப்பர் மார்கெட்டில் பார்த்து,வியர்த்திருக்கிறேன்)என்று சொன்னேன்."என்ன சாப்பிட மாட்டீர்கள் என்று சொல்லுங்கள்"என்றால்.நானும் சொன்னேன்,பன்றி,பாம்பு,தவளை,இறைவன் பெயர் சொல்லி அறுக்காத - பிராணிகள்(உண்ண அனுமதிக்கப்பட்ட ஆடு,மாடு,கோழி போன்ற)என்று."சரி,நாளை வாருங்கள் லஞ்சுக்கு என்றால்.தலையாட்டிவிட்டு,சென்றுவிட்டேன்.

கணவரிடம் சொன்னேன்.உணவு தர அழைப்பு தந்த அந்த சகோதரியின் அழைப்பை ஏற்றுக்கொள்.உனக்கு பிடிக்காத - மார்க்கம் அனுமதிக்காத உணவு இருந்தா எடுத்து சொல்.புரிந்து கொள்வாள்.என்றார்.

மறுநாள்,மதியம் சென்றேன்.அப்போதுதான் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார் அந்தப் பெண்.பக்கத்தில் இன்னொரு சைனீஸ் பெண்,ஆனால் அந்த பெண் என்னைப்போல் ஹிஜாபோடு.என்னைக்கண்டதும் சலாம் (முஸ்லிம் முகமன்)சொன்னால்.பதில் சொன்னேன்.மூவரும் அமர்ந்தோம்.

ஆவலாக அந்தப்பெண்களையும்,உணவையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.உணவு பரிமாறப்பட்டது.ஒவ்வொரு உணவின் தட்டு பக்கத்திலும் ஒரு குறிப்பு,ஆங்கிலத்தில்.பொறித்த கோழி-ஹலால்,மாடு வறுவல்-ஹலால்,பிரியாணி சோறு ஹலால்,(சைனீஸ் ஸ்டைல்-(கூடுதலாக பிரியானில் சேமியா சேர்க்கப்பட்டிருந்தது)சைனீஸ் டி.இன்னும் சாலட் வகைகள்.எனக்கு ஆச்சரியம்,

"என் தோழி இவள் மூன்று மாதம் முன்பு இஸ்லாத்தை தழுவினால்.அன்றிலிருந்து இறைவனால் அனுமதிக்கப்பட (ஹலால்)உணவு மட்டுமே சாப்பிடுகிறாள்.நீயும் இந்த மார்க்கம்தான் என்பதை அறிந்து,என் தோழியையும் அறிமுகப்படுத்தி - விருந்து தர வேண்டும் என விரும்பினேன்,அதுதான் இந்த ஏற்பாடு"அந்த சைனீஸ் பெண் சொன்னால்.எனக்கு வயிறும் நிறைந்து, மனமும் நிறைந்தது.கண்கள் பணிக்க - இறைவனுக்கு நன்றி சொல்லி விடை பெற்றேன்.ரொம்ப அற்புதமான அனுபவம்.மாஷா அல்லாஹ்.

12 comments:

ஜெய்லானி said...

மாஷா அல்லாஹ். கேக்கும் போதே ஆச்சிரியமா இருக்கு..!!
:-)

அன்னு said...

மாஷா அல்லாஹ். அந்த தோழியை மீண்டும் சந்தித்தால் என்னுடைய ஸலாமையும் சேர்த்துக் கூறுங்கள். நியூ ஜெர்சியில் ஒரே ஒரு பிரம்மாண்ட சைனிஸ் உணவகம் உள்ளது, வெளியிலேயே மிகப்பெரிய ஹோர்டிங்கில் 'ஹலால் புஃப்ஃபெ" என்று எழுதியிருக்கும். எல்லா சைனீஸ் உணவு வகைகளும் ஹலாலாக கிடைக்கும். இப்பொழுது ஞாபகம் வருகிறது. இப்படிப்பட்ட சகோதரிகளை சந்திக்கும்போதுதான் நம்முடைய ஈமானையும் எடை போட்டு பார்க்க தோன்றும். அல்ஹம்துலில்லாஹ், நல்ல பகிர்வு. ஜஸாகுமுல்லாஹ் க்ஹைர்.

ராஜவம்சம் said...

வாழ்த்துக்கள் உங்கள் தோழியின் தோழிக்கு.

நன்றி உங்கள் பகிர்வுக்கு.

//பிரேக் நேரத்தில் பொய் பேசிக் கொண்டிருப்பேன்//

ஒரு விசயம் பொய் பேசாதிர்கள்.

'ஒருவனின்' அடிமை said...

sister,please check this link about hijab

திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்

http://satyamargam.com/1563

Aashiq Ahamed said...

அன்பு சகோதரி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ்...அழகான பதிவு..

இஸ்லாத்தை தழுவியவர்களுடன் உரையாடுவது ஒரு அற்புதமான அனுபவம். என் நண்பனும், எங்கள் குடும்ப நண்பரும் இஸ்லாத்தை தழுவியவர்கள். அவர்களிடம் இருந்து பல விஷயங்களை நான் கற்றுக்கொள்வேன். ஒரு முறை சகோதரர் ஷேக் தாவுத், இஸ்லாத்தை தழுவிய அவருடைய நண்பரைப் பற்றி என்னிடம் கூறினார், "ஆஷிக், என்னுடைய இந்த நண்பர் என்ன இப்படி பொளந்து கட்டுகிறார். தொழுகை விஷயத்தில் எனக்கு கூட இவ்வளவு தெரியாதே" என்று. அல்ஹம்துலில்லாஹ்...

ஹலால் உணவுகள்....இங்கே பாண்டிச்சேரியில் ஹலால் உணவகங்கள் மிக வேகமாக பெருகி வருகின்றன. சில மாதங்களுக்கு முன் பெங்களூர் சென்றிருந்த போது, forum shopping காம்ப்ளெக்ஸ்ல் உள்ள transit உணவகத்தில் உணவுக்காக ஆர்டர் (self order) கொடுக்க காத்திருந்தேன். ஹலால் போர்டு இருக்கிறதா என்று மேலே நோட்டமிட்டபடியே இருந்தேன், அப்போது ஆர்டர் எடுக்கும் அந்த சகோதரர் கேட்டார் பாருங்கள் "என்ன சார், ஹலால் போர்டை தேடுகின்றீர்களா, இங்கு ஹலால் உணவுகள் தான் விற்கபடும். அதனால் கவலை வேண்டாம்"....

அல்ஹம்துலில்லாஹ்....

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

ஜெய்லானி said...

//பிரேக் நேரத்தில் பொய் பேசிக் கொண்டிருப்பேன்.//

பாத்தீங்களா ஒரு சின்ன எழுத்துப்பிழை எப்படி கமெண்ட் போட வைத்து விட்டதுன்னு அர்த்தமே மாறிப்போச்சு :-))

@@@ராஜவம்சம் --//ஒரு விசயம் பொய் பேசாதிர்கள்.//

நிஜாம் பாய் அது ”பொய்” இல்லை ”போய் “

அதிரை எக்ஸ்பிரஸ் said...

அந்த சகோதரிகளுக்கு சலாத்தை சொல்லுங்கள்.உலகமெங்கும் மார்க்க ஒளி.எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

அன்புடன் மலிக்கா said...

மாஷா அல்லாஹ்.மாஷா அல்லாஹ்.
இறைவனின் புகழ் ஓங்கட்டும்..

பாத்திமா நலமா! என்ன ஆளையே காணோம்..

தேனம்மை லெக்ஷ்மணன் said...

நாம் என்ன நாடிச் செல்கிறோமோ அதுவே நமக்குக் கிடைக்கும்.. இறைவன் அதையே வழங்குவார் என்பது தெரிகிறது ஃபாத்திமா..:))பகிர்வுக்கு நன்றி..

MSM/Meerashah Rafi Ahamed said...

எனக்கு கிடைத்த சைனீஸ் விருந்து:

//பிரேக் நேரத்தில் பொய் பேசிக் கொண்டிருப்பேன்//

"போய்" என்ற வார்த்தையை தவருதலாக "பொய்" என்று எழுதிவிட்டீர்கள் என்று நினைகிறேன்..அதை திருத்தினால் நன்றாக இருக்கும் .

மூ.ச.மூ. மீரஷாஹ் ரபி அஹ்மத்
M.S.M.Meerashah Rafi Ahamed

Jaleela Kamal said...

present
super

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

இன்று தான் உங்கள் தளத்திற்கு முதலில் வருகிறேன். அல்ஹம்துலில்லாஹ் அந்த சைனீஸ் சகோதரியின் அன்பும், மார்க்கத்திற்கு மாறிய சைனீஸ் சகோதரியின் தக்வாவும் வியக்க வைக்கின்றன.

அல்லாஹ் அனைவருக்கு நல்வழி காட்டுவானாக