Sunday, November 7, 2010

குரங்கு சேட்டை

ஒரு குரங்கு ஒரு ராஜாளிப் பறவையின் கூட்டிலிருந்த ஒரு முட்டையை எடுத்து ஒரு கோழி இட்டிருந்த முட்டைகளுடன் சேர்த்து வைத்து விட்டது.வித்தியாசம்காணத் தெரியாத கோழியும் தன முட்டைகளுடன் சேர்த்து அதையும் அடை காத்து குஞ்சு பொரித்தது.ராஜாளிக் குஞ்சும் கோழிக் குஞ்சிகளுடன் அக் கோழியின் அரவணைப்பில் இருந்து வந்தது.அதனுடைய செயல்,நடவடிக்கை அனைத்தும் கோழிக் குஞ்சிகளுடையதைப் போலவே இருந்தது.

சிறிது வளர்ந்த நிலையில் அது ஒரு நாள் வானத்தை அண்ணாந்து பார்த்த போது,ராஜாளிப் பறவைகள் கூட்டாகப் பறந்து செல்வதைக் கவனித்தது.அப்போது அது வருத்தத்துடன்,''இறைவா,என்னையும் இது போல் ராஜாளியாகப் படைத்திருக்கக் கூடாதா?நானும் அவை போல ஆனந்தமாகப் பறப்பேனே!''என்று வருத்தப்பட்டது.
என்ன விசித்திரம்!ராஜாளிக் குஞ்சுக்குத் தான் ஒரு ராஜாளி என்பதே தெரியவில்லை.
இது போல் தான் நம்மில் பலரும் தன்னைப் பற்றி,ஏக இறைவன் தந்த திறமையை பற்றி அறிவதில்லை.தன்னுள் தேவையான திறமை இருந்தும் அது இல்லையே என்று அடுத்தவரைப் பார்த்து புலம்புபவர் பலர்.நாம் ஒரு ராஜாளி தான் என்பதை உணர வேண்டும்.


இளைஞனே உன் கூடு பூமியில் இல்லை 
மலை உச்சியில்
நீ ராஜாளி பறவை 
பற இன்னும் பற 
மேலே இன்னும் உச்சிக்கு 
தொடு
சிகரத்தை 
இன்ஷா அல்லாஹ்*  
உன்னால் முடியும். 

சாரே ஜகான் சே அச்சா எழுதிய கவிஞர் இக்பால் 

*இறைவன் நாடினால்



2 comments:

ஜெய்லானி said...

அழகிய நல்ல கருத்தை எளிய முறையில் சொல்லி இருக்கீங்க ..!! உண்மையும் கூட :-)

இப்னு அப்துல் ரஜாக் said...

நல்ல கருத்து