Wednesday, November 18, 2009

நாஞ்சொல்றது சரியாங்க?

நமக்கு ரெண்டு பெருநா மட்டும்தான்.ஒன்னு நோன்புப் பெருநாள்,இன்னொன்னு ஹஜ்ஜுப் பெருநாள்.இந்த ரெண்டு பெருனாலுமே ஏழைகளுக்கு கொடுத்து வழங்க செய்யும் பண்டிகை.நோன்பு பெருநாள்,நாம் ஏழைகளுக்கு அரிசி,கோதுமை,இறைச்சி,காய்கறி என்று கொடுத்து விட்டுத்தான் நாம நோன்புப் பெருநாள் தொழுகைக்கு செல்லவேண்டும்,அதேபோல ஹஜ்ஜுப் பெருநாள் அன்றும் அடுத்து வரும் மூன்று நாட்களிலும் ஆடு,மாடு,அல்லது ஒட்டகம் அறுத்து தத்தம் குடும்பம்,சொந்தங்கள்,ஏழைகள்,அக்கம் பக்கம் என்று அந்த இறைச்சிகளை பகிர்ந்து கொடுத்து,மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். இதுதான் இஸ்லாம்.

இன்னும் சொல்லப்போனா,நம்ம பெருநாட்களில் காசை விரயமாகுற சமாச்சாரமோ,சுற்றுச் சூழல் கெடும் அவலமோ கிடையாது.எல்லாம ஏழைகளும் உண்டு,பசியாறி சந்தோஷமாக இருக்கவேண்டும் என்ற தூய எண்ணம் மட்டும்தான்,ஒகே - இப்ப விஷயத்துக்கு வருவோம்,எல்லாரும் புதுப்பிறையை பாத்திருப்பீங்க,இன்ஷா அல்லாஹ் பத்து நாள்ல ஹஜ்ஜுப் பெருநாள் வருது,இதுக்கு குர்பானி கொடுக்க ஆடு,மாடு,ஒட்டகம் புக் பண்ணி இருப்பீங்க.


பொதுவா,நிறைய பேர்,தங்கள் வீடுகளில் அறுத்து சொந்தங்கள்,ஏழைகளுக்கு வழங்குகிறார்கள்,இது சரிதான் என்றாலும் அது மூலமா பரவலாக ஏழைகளுக்கு போய் சேராது,அது மட்டுமில்ல,வாங்கினவங்களே திரும்ப திரும்ப வாங்கும்படி நேரலாம் இல்லையா?

அதுக்கு எனக்கு ஒரு யோசனைங்க,பிடிச்சிருந்தா செஞ்சு பாருங்க.ஒவ்வொரு ஊர்லயும் பைத்துல்மால் இருக்கு,அது இல்லாத ஊர்கள்ல எத்தனயோ இஸ்லாமிய அமைப்புக்கள் இருக்கு,யத்தீம்கானாக்கள் (அநாதை இல்லங்கள்)இருக்கு.நீங்க அறுக்குற கறிகளை உங்க சொந்த பந்தம்,அக்கம் பக்கம் கொடுத்த பிறகு,ஏழைகளுக்கு உள்ள பங்கை அந்த நிறுவனத்துல கொண்டு போய் கொடுத்தா, அவங்ககிட்ட இருக்குற ஏழைகள் லிஸ்ட்ட வச்சி,எல்லா ஏழைகளுக்கும் பகிர்ந்து கொடுப்பாங்க.இது மூலமா எல்லாருக்கும் கிடைக்க வாய்ப்பு கிடைக்கும்.என்னா நான் சொல்லுறது.
-------------------------------------------------------

உங்களில் ஒருவர் பேரிச்சம் பழத்தின் ஒரு துண்டையாவது (தர்மம்) செய்து நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியுமாயின் அதை அவர் செய்துக் கொள்ளட்டும் என்று நபி அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதியீஇப்னு ஹாதம்(ரலி)நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

ஒவ்வொரு முஸ்லிம் மீதும் தர்மம் செய்வது அவசியமாகிறது என்று நபி அவர்கள் குறிப்பிட நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒருவர் (தர்மம் செய்ய எப்பொருளையும்) காணவில்லையாயின் என்று வினவ அவர் தன் கரங்களால் உழைத்து அதில் தானும் பலன் அடைந்து மேலும் தர்மம் செய்யட்டும்'' என்று நபி அவர்கள் கூறினார்கள். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒருவர் (தர்மம் செய்ய எப்பொருளையும்) காணவில்லையாயின் என்று வினவ ''அவர் தன் கரங்களால் உழைத்து அதில் தானும் பலன் அடைந்து மேலும் தர்மம் செய்யட்டும்'' என்று நபி அவர்கள் கூறினார்கள். நபித்தோழாகள் 'அவர் அதற்கும் இயலாவிடின் என்று வினவ அவர் நன்மையை (பிறருக்கு) ஏவட்டும் என்று நபி அவர்கள் கூறினார்கள். நபித்தோழர்கள் அம்மனிதர் அதற்கும் இயலாவிடின் என்று வினவ ''அவர் (பிறருக்கு) தீமை செய்வதை விட்டு தவிர்த்து கொள்ளட்டும். அதுவே தர்மமாகும் என்று நபி அவர்கள் விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி(ரலி)நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ

(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! 22:37
(THE QURAN)

6 comments:

இப்னு அப்துல் ரஜாக் said...

nice thinking

பழைய நண்பன் said...

சொல்ல வேண்டிய கருத்து - சரியான நேரத்தில் சொல்லி இருக்கீங்க. அல்ஹம்துலில்லாஹ்! சரியான முறையில் இப்படி நிறைவேற்ற நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக!

ஹுஸைனம்மா said...

ஃபாத்திமா, சரியான நேரத்தில் தேவையான பதிவு.

அதுவும் குர்பான் இறைச்சியை தமது வசதியான் சொந்தங்களுக்கும், சம்பந்தக்காரர்களுக்கும் கொடுத்தது போக மீதி இருப்பதைத்தான் தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கும் அவலமும் உண்டு சில இடங்களில்!!

ராஜவம்சம் said...

அதை விட T.N.T.J வில் கூட்டுகுர்பானியில் சேர்ந்தால் உங்களுக்கே ஒரு பங்கு தான் கிடைகும்
நியாயமானமுரையில் பங்கிடுவதாக சொல்கிரார்கள்

பாவா ஷரீப் said...

நல்ல பதிவு

scharu said...

neega solurathu sari thanga