Monday, May 17, 2010

பேசித் தீர்க்கலாமே சகோதரி

 
இந்த செய்தியை தினமணியில் படித்தவுடன் மனம் துணுக்குற்றது.துக்கம் நெஞ்சை அடைத்தது.அந்த சகோதரி நம் ஊரை சேர்ந்தவர் என்பதாலோ,அந்த ஹட்சன் ஆறு பக்கத்தில் நான் வசிப்பதால் என்பதால் என்றோ இருக்கலாம்.ஆனால்  அந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாது - இன்ஷா அல்லாஹ் இனி உலகின் எந்த பகுதியிலும் இது போல் நடக்கக் கூடாது என ஏக இறைவனை பிரார்த்தனை செய்தவளாக...........

உங்கள் பாத்திமா ஜொஹ்ரா 
----------------------------------------------------------------------------

கண​வர் மீது கொண்ட மன வருத்​தம் கார​ண​மாக 19 மாத பெண் குழந்​தையை நியூ​யார்க் நக​ரில் ஹட்​சன் ஆற்​றில் எறிந்​து​விட்டு தானும் அதில் குதித்து தற்​கொ​லைக்கு முயன்ற தமிழ்​நாட்​டுப் பெண் கைது செய்​யப்​பட்​டார்.​ 

அவர் மீதான குற்​றச்​சாட்​டு​கள் நிரூ​பிக்​கப்​பட்​டால் அவ​ருக்கு 25 ஆண்​டு​கள் தண்​டனை கிடைக்​கும்.​​ அமெ​ரிக்​கா​வில் கடந்த செவ்​வாய்க்​கி​ழமை இச் சம்​ப​வம் நடந்​தது.​ 

தமிழ்​நாட்​டைச் சேர்ந்த அவ​ரு​டைய பெயர் தேவி சில்​வியா.​ கண​வர் பெயர் டொமி​னிக் ஜேம்ஸ் பிரு​தி​வி​ராஜ்.​ ஆற்​றில் வீசப்​பட்ட 19 மாத பெண் குழந்​தை​யின் பெயர் ஜெஸ்​ஸிகா பிரு​தி​வி​ராஜ்.​​ அமெ​ரிக்​கா​வில் குடி​யேறி கடந்த சில ஆண்​டு​க​ளா​கி​றது.​ கண​வ​ரு​டைய வேலை கார​ண​மாக சிகாகோ,​​ கலி​போர்​னியா,​​ நியூ​யார்க் நக​ரங்​க​ளில் வசித்​தி​ருக்​கி​றார்.​ இரு​வ​ருக்​கும் இடை​யில் ஏதோ பூசல்.​ பேச்​சுத்​து​ணைக்கு கூட ஆள் இல்​லா​மல் தனி​மை​யில் சோகத்​தில் வாழ்ந்​தி​ருக்​கி​றார் தேவி சில்​வியா.​​ 

பனிக்​கட்​டி​யைப் போல ஜில்​லிட்ட ஆற்​றில் வீசி​ய​தால் குழந்​தை​யின் உடல் நீலம் பாரித்து,​மரக்​கட்​டை​யைப் போல விறைத்​தி​ருந்​தது.​ குழந்​தைக்கு வேறு ஏதும் பாதிப்பு ஏற்​பட்​டி​ருக்​குமா என்று தெரி​ய​வில்லை.​ அப்​படி ஏதும் நேரிட்​டால் தேவி சில்​வி​யா​வுக்கு தண்​டனை மேலும் அதி​க​ரிக்​கும்.​​ 

இச் சம்​ப​வம் குறித்து அவ​ரு​டைய ​ கண​வ​ரின் கருத்​தைக் கேட்க முற்​பட்​ட​போது அவர் பதில் அளிக்க வர​வே​யில்லை.​​ சில்​வியா இப்​போது மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெறு​கி​றார்.​ அவ​ருக்கு ஜாமீன் தரப்​ப​ட​வில்லை.

 நன்றி தினமணி

--------------------------------------------------------------------------------------
"(துக்கம் ஏற்பட்டால்) கன்னங்களில் அறைந்து கொள்பவன், அல்லது சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவன், அல்லது அறியாமைக் கால வழக்கப்படி புலம்புகிறவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).

நபிமொழி----------------------------------------------------------------------------------------------------------------------------------
    செல்வம் என்பது உலகப் பொருள்களின் அதிகரிப்பில் இல்லை. எனினும் செல்வம் என்பது மனத்தின் செல்வமேயாகும். போதுமென்ற மனமேயாகும் என்று நபி அவர்கள் கூறினர்: அறிவிப்பவர்: நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

நபிமொழி
----------------------------------------------------------------------------------------
4:128
ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை. அத்தகைய சமாதானமே மேலானது. இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். 

குர்ஆன்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

13 comments:

நாஸியா said...

ஜஸகல்லாஹு க்ஹைர் சகோதரி.

துன்பம் ஏற்பட்டால் புலம்புவது கூட தவறென்று சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. எனக்கு நல்ல ரிமைன்டர். இப்பத்தான் சில விஷயங்களை நினைச்சு புலம்பிக்கிட்டு இருந்தேன்.

தவக்கல்து அலல்லாஹ்

SUFFIX said...

அதிர்ச்சி தரும் தகவல், எப்படி மனம் வந்தததோ அப்பெண்ணிற்கு, குரஆன் மற்றும் நபிமொழிகளை படிக்கும்போது மனதிற்கு இதம் ஏற்படுகிறது.

Shameed said...

உங்க ஊரு சேதிய சொல்லிப்புட்டிஹா

ஜெய்லானி said...

எப்படிதான் மனசு வந்துச்சோ!!

:-((

நட்புடன் ஜமால் said...

குழந்தையையுமா! :(

அன்புத்தோழன் said...

தீர்த்துட்டு பேசலாம்னு நினைச்சுட்டாங்க போல....

குடும்ப பிரச்சனைகளால் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் இப்போதெல்லாம் அடிகடி காண முடிவது மிகவும் வறுத்தத்துக்குரிய விஷயம்...

பிரச்சனைகளுக்கு தற்கொலை மற்றும் கொலை தீர்வாகாதென்பதை எப்போது உணர்வார்கள் இவர்கள்... இது போன்ற சமூக அவலங்கள் நீங்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.... ஆமீன்..

Anisha Yunus said...

இப்படி வெளியூர்ல வாழ்றதுல சிக்கலே அதான்க்கா. ஆனால் இந்த முடிவெடுப்பதற்கு முன் நிறைய counselling firms உள்ளது அவங்ககிட்ட பேசிப் பார்க்க முன் வரணும். நம்ம மாதிரி பெண்களை இப்படி அயல்நாடு அனுப்பறப்பவே அம்மா, அப்பாக்கள் ஜாக்கிரதையா இந்த மாதிரி நேரங்களில் என்ன பண்ணனும்னும் சொல்லி பக்குவப் படுத்தி அனுப்பணும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அதிர்ச்சியான தகவல்,

நேர்மையுடன், மனசாட்சியுடன் வாழ்வது மட்டும் வாழ்க்கையில்லை, பல எதிர் நீச்சல்கள் போட்டு போராடி வாழ்வதும் தான் இவ்வுலக வாழ்கை.

அற்பமான இவ்வுலகில் ஒரு சில தவறுகளுக்கு, பிடிவாதத்துக்கும் அடிமையாகி ஒற்றுமையை எட்டாக் கனியாக்கி தன் குடும்பங்களையும், தன் பிள்ளைகளையும் கதிகலங்க வைக்கும் கணவன்-மனைவி இன்னும் நிறையவே இருக்குகிறார்கள்.

வேதனை வேதனை.

படைத்தவன் தான் நல்ல புத்தி கொடுக்கனும்.

நீங்கள் சொல்வது போல் பொருமையுடன் பேசித் தீர்க்கலாம்: குடும்ப பிரச்சினைகளை மட்டுமாவது.

தகவல் தொடர்புகள் வளர்ந்த காலத்திலும் தனிமை ஒரு தண்டனையா?

Shameed said...

எந்த பிரச்னையை எடுத்துகொண்டாலும் அந்த நேரதில் தான் பெறுசக தெறியும் ஒரு வாரம் கழித்து யோசித்தால் ப்பு இதனே இதை விட பெரிய பிரச்னை வந்தாகுட நம்மால் சமாளிக்க முடிவும் என்ற மன தைரியம் வரும் ..... வரனும்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

மிகவும் வேதனையான விஷயம்.

குர் ஆன் வசனம், நபிமொழிகள்
தேவையான நினைவூட்டல்கள்!

Kousalya Raj said...

அழகான குடும்ப உறவுகள் ஏன் இப்படி கொடூரமாக சிதைகின்றன விடை தெரியாத கேள்விகள்? நீங்கள் கொடுக்கும் இறைவனின் வார்த்தைகள் மிக அற்புதம். எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன, இருந்தும் நம்மிடம் அன்பு குறைந்துதான் போகிறது.......!?

இப்னு அப்துல் ரஜாக் said...

சிந்திக்க வேண்டிய படிப்பினை செய்திகள்........

Jaleela Kamal said...

அல்லாவே ஏன் இப்படி, ரொம்ப மனவருத்தப்படும் செய்தி.

குர் ஆன் வசனத்துடன் பதிவு அருமையான முறையில் சொல்லி இருக்கீங்க பாத்திமா.