Monday, June 7, 2010

துலுக்க வீட்டு சாப்பாடு....?

என்னோட பிரண்டு ஒருத்தி,பேரு வாசுகி போன வாரம் என் வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்னால்.ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி.சரி அவளுக்கு பிடிச்ச மாதிரி சமக்கனுமே,என்ன பண்றது?அவ ............. அதுனால காய்கறி பிரியாணி,கத்தரிக்காய் கூட்டு,உருளை பொரியல்,இப்படி செஞ்சு இருந்தேன்.

அவளுக்கு பிடிக்கணுமே என்று கவலையா இருந்தது.அவளும் வந்தாச்சி.வந்ததுமே என்னை கட்டி அணைத்துக்கொண்டவள்,சொன்னால்,"துலுக்க வீட்டு சாப்பாடு ஒரு வெட்டு வெட்ட வேண்டியதுதான்."
"வா வந்து உட்கார்.நானும் ஆசையாசையா காய்கறி பிரியாணியை தட்டுல போட்ட வுடனே  கேட்டாள்,'என்ன இது எங்க ஆத்து சமையல் மாதிரி பண்ணியிருக்கே,துல்லுக்க வீட்டுல சாப்பாடுன்னா ஆட்டுக்கறி,கோழிக்கறி கிடைக்கும்னு நினச்சு வந்தேன்" என்றாலே பார்க்கலாம்.

கேட்டேன்,ஏன் அப்பிடின்னு,அதுக்கு சொன்னாள்,ஒரே காய்கறி தின்னு தின்னு சலிச்சு போச்சு,கறி,கோழின்னு வீட்டுக்கு தெரியாம ஹோட்டல் போய் ஒரு வெட்டு வெட்டி அந்த டேஸ்ட்டு புடிச்சிபோய்......."

"சாரி சொல்லிக்கொண்டேன்,அடுத்த வாரம் ஆட்டு பிரியாணி செஞ்சுட்டா போச்சு "என்று சொன்னதை அன்பாக பார்த்தால்.அதோடு இன்னும் சொன்னேன்,"பாய்மாருங்க குடும்பத்துல ஒரே கறி சாப்பாடுத்தான்னு தப்பா நினைச்சுக்காதே,இறைவன் எதுவெல்லாம் சாப்பிட அனுமதி கொடுத்துள்ளானோ அதையெல்லாம் சாப்பிடுவோம்,எதையெல்லாம் வேண்டாமெண்டு சொல்லியுல்லானோ அதை நாங்க சாப்பிடமாட்டோம்.
அது போல நீ துலுக்க என்ற பயன்படுத்துற அந்த சொல் முஸ்லிம்களைக் குறிக்காது.அது துருக்கி நாட்டையே குறிக்கும்.முன்னால முஸ்லிம்களின் கிலாபா என்ற தலைமை துருக்கியில இருந்ததால எல்லா முஸ்லிம்களையும் துருக்கர் என்று அழைக்கலாயினர்,(இந்தியாவில் மட்டும்)அது தவறு."என்றேன் அன்பாக.

'சாரி "சொன்னாள்.

அடுத்த வாரம் சிந்திப்போம் என்று விடை பெற்றுக்கொண்டோம்.


நீங்கள் புசிக்கக் கூடாது என்று உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம்; தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதொ அதுவுமேயாகும் ஆனால் எவரேனும் வரம்பை மீற வேண்டுமென்று (எண்ணம்) இல்லாமலும், பாவம் செய்யும் விருப்பமில்லாமலும் (எவராலும் அல்லது பசியின் கொடுமையாலும்) நிர்ப்பந்திக்கப்பட்டால் (அவர் மீது குற்றமில்லை); நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
திருக்குர்ஆன் 16:115

22 comments:

SUFFIX said...

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விளக்கம். நன்றி சகோதரி.

இராகவன் நைஜிரியா said...

இதை படிக்கும் போது எனக்கு சைனாவில் நான் வேலை செய்யும் போது கிடைத்த பாக்கிஸ்தான் நண்பர் திரு. ப்யாஸ் கான் அவர்கள் ஞாபகம் வருகின்றது. நான் சைவ சாப்பாடு சாப்பிடுவேன் என்பதால், எப்போதெல்லாம் என்னை அவர் வீட்டுக்கு சாப்பிட அழைக்கின்றாரோ, அப்போதெல்லாம் அவரும் சைவம்தான் சாப்பிடுவார்.

நான் எனக்குத்தான் அசைவம் பிடிக்காது, நீங்க சாப்பிட வேண்டியதுதானே என்றால், இங்கு சாப்பிட வருபவருக்கு எது பிடிக்காது அதை நான் செய்ய மாட்டேன். நட்புக்கு அதுதான் அடையாளம். மேலும் இதில் என்ன இருக்கு... ஒரு விஷயம் தெரிஞ்சுகுங்க... சப் லோக் மட்டி ஹோ ஜாயகா என்றும் சொல்லுவார்.

ஸாதிகா said...

நல்ல நண்பிதான்!

ஸாதிகா said...
This comment has been removed by the author.
நட்புடன் ஜமால் said...

மாஷா அல்லாஹ்!

நாங்களும் அக்கிரஹாரத்தில் வளர்ந்தவர்கள் தாம், பெருநாட்கள் தவிர மற்ற நாட்களில் (விருந்தினர் யாரும் வராட்டி) அசைவம் சாப்பிட்ட ஞாபகம் இல்லை.

Jaleela Kamal said...

துலுக்க வீடு ,ஹா ஹா இந்தியாவில் இப்படி தான் முஸ்லீம் களை சில ஏரியவில் சொல்வாங்க

ஜெய்லானி said...

சரியா சொன்னீங்க எனக்கும் இந்த அனுபவம் இருக்கு....

Thenammai Lakshmanan said...

அருமையா விளக்கம் கொடுக்குறீங்க பாஃத்திமா.. எனக்கு பிடிச்சு இருக்கு..

GEETHA ACHAL said...

துலுக்க விடு விளக்கம் அருமை...நானும் உங்கள் வீட்டிற்கு வரட்டுமா...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சொல்லவந்த செய்தி நல்ல சூவாரஸ்யமாக உள்ளது.
ஆனால் தலைப்பு கொஞ்சம் நல்ல வச்சிருக்கலாம்.

பாத்திமா ஜொஹ்ரா said...

கருத்திட்ட என் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.
சகோதரி சாதிக்காவின் வேண்டுகோளை ஏற்று நீக்கிவிட்டேன்.நீங்கள் சொல்லும் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
கீதா ஆச்சல் அக்கா,வாங்க அக்கா,நீங்க வந்த ரொம்பவே சந்தோஷப்படுவேன்.

பாத்திமா ஜொஹ்ரா said...

அருமையா விளக்கம் கொடுக்குறீங்க பாஃத்திமா.. எனக்கு பிடிச்சு இருக்கு..

I LOVE YOU தேனம்மை அக்கா

பாத்திமா ஜொஹ்ரா said...

//துலுக்க வீடு ,ஹா ஹா இந்தியாவில் இப்படி தான் முஸ்லீம் களை சில ஏரியவில் சொல்வாங்க//

//சரியா சொன்னீங்க எனக்கும் இந்த அனுபவம் இருக்கு....//

உங்களுக்கும் அனுபவம் உண்டா?

Shameed said...

துலுக்க விடு விளக்கம் அருமை .இம்பூட்டு நாலா இது தெறியமா போச்சி !

இப்னு அப்துல் ரஜாக் said...

excellent

mkr said...

சகோதரி உங்கள் தளத்தில் எழுத்துகள் சரியாக தெரிவதில்லை.துலுக்க விட்டு சாப்பாடு என்றால் இப்படிதான் என்று ஒரு எண்ண ஒட்டம் இப்படிதான் இருக்கிறது.

அன்புடன் மலிக்கா said...

பாத்திமா எப்படி இருக்கீங்க.

நிறையபேர் இப்படிதான் சொல்கிறார்கள். நல்லதோழிதான். எனக்கு அதிகதோழிகள் மாற்றுமத சகோதரிகளே!

நான் வெளிநாடுவந்தபின்னும் பால்ய சினேகங்கள் அப்படியே வளர்த்துவருகிறேன்.

நல்லதொரு பதிவு.

நீரோடையில் வந்துபாருங்க நல்லசேதி.
அதிரைக்கு...

அன்புடன் மலிக்கா said...

நான்போட கருதுரை வந்ததா?

அன்புடன் மலிக்கா said...

நான்போட கருதுரை வந்ததா?

பாத்திமா ஜொஹ்ரா said...

//நான்போட கருதுரை வந்ததா?//

அக்கா,உங்களுக்கு பதில் அனுப்பினேனே?

அன்புடன் மலிக்கா said...

எதில் அனுப்புனீங்க

பாத்திமா ஜொஹ்ரா said...

//எதில் அனுப்புனீங்க//

email