Sunday, February 13, 2011

தோலில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன! இறைவனின் இறுதி வேதம் திருக்குர்ஆன் வரலாறு. பாகம் 3

வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள் மனிதனின் தோலில் தான் உள்ளன. தோல் கரிந்து விட்டால் எந்த வேதனையையும் மூளை உணராது என்பது சமீபத்திய கண்டு பிடிப்பு. 


இதனால் தான் மேல் தோலை மட்டும் மரத்துப் போகச் செய்யும் ஊசிகளைப் போட்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்கின்றனர். முழு உடலையும் மரத்துப் போகச் செய்வதில்லை. அவ்வாறு மரத்துப் போகச் செய்தால் மனிதன் செத்து விடுவான்.


அது போல் தான் தீக்காயத்தில் தோல் கருகிப் போனவர்கள் வேதனையால் துடிக்காமல் இருப்பதையும் காண்கிறோம். 


4:56யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.


திருக்குர்ஆன்'அவர்களின் தோல் கருகும் போது அதை மாற்றுவோம்என்று கூறாமல்'வேதனையை அவர்கள் உணர்வதற்காகவே மாற்றுவோம்என்று 14நூற்றாண்டுகளுக்கு முன்னால் கூறுவதென்றால் மனிதனைப் படைத்த இறைவனால் தான் சாத்தியமாகும். திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக அமைந்துள்ளது. 

7 comments:

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ...

குர் ஆன் மெய்ப்படுத்தும் அறிவியல் உண்மைகளின் இதுவும் ஒன்று.

நல்லாவே சொல்லி இருக்கீங்க..

தலைப்பு..தோல்களில் என்பதை தோலில் என மாற்றிக் கொள்ளுங்கள்..

அன்புடன்
ரஜின்

பாத்திமா ஜொஹ்ரா said...

நன்றி ரஜின் நானா.

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ..
/நன்றி ரஜின் நானா./

நானா’ன்னா தாத்தான்னு கேள்விப்பட்டு இருக்கேன்..

சகோ நான் அவ்ளோ வயசாலி இல்லையே...27 ல் தான் நிற்கிறேன்..

என்னை நீங்கள் முந்தியிருந்தால் தம்பியாக்கி கொள்ளுங்கள்..பிந்தி இருந்தால் அண்ணனாக்கி கொள்ளுங்கள்..

அன்புடன்
ரஜின்

பாத்திமா ஜொஹ்ரா said...

சரிங்கண்ணா

Anisha Yunus said...

//தோல் கரிந்து விட்டால் எந்த வேதனையையும் மூளை உணராது என்பது சமீபத்திய கண்டு பிடிப்பு. //

இதற்கான ஆதாரத்தையும் சேர்த்தே தந்திருந்தால் இன்னமும் சிறப்பு :)

திரட்டிகளில் இணைப்பதில்லையா??

Thenammai Lakshmanan said...

சரியான உணர்வு ஃபாத்திமா.

பாத்திமா ஜொஹ்ரா said...

நன்றி அன்னு அக்கா,நன்றி தேனம்மை லக்ஷ்மணன் அக்கா .உங்கள்களின் மேலான வருகைக்கும்,கருத்துக்களுக்கும்.