Sunday, April 17, 2011

இனியாவது இந்த நரேந்திர மோடிக்கள் திருந்துகிறார்களா எனப் பார்ப்போம்.

திருப்பூர் அருகே பூலுவப்பட்டியை சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஆறுமுகம் (55). இவரது மகள் மீனாட்சி (18) குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார்.

பள்ளி விடுமுறையை கொண்டாட, பல்லடம் மேட்டுக்கடையில் உள்ள தன் அக்கா ப்ரியா வீட்டுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் அருகில் உள்ள தோட்டத்தில் பூப்பறிக்கச் சென்ற மீனாட்சி ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் அக்கம் பக்கம் தேடினர். ஆனால், மாலை 4 மணி அளவில் அங்குள்ள கிணற்றில் மீனாட்சி பிணமாக மிதப்பதை உறவினர்கள் கண்டுபிடித்தனர்.

தீயணைப்பு துறையினர் உதவியோடு மீனாட்சி பிரேதத்தை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பிரேத பரிசோதனைக்காக சவக் கிடங்கில் உடல் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று காலை பிரேத பரிசோதனை செய்ய டாக்டர் மற்றும் ஊழியர்கள் வந்தனர். அப்போது மீனாட்சியின் இரு மார்பகங்களும் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தன. மேலும் அவை மாயமாகியிருந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் தந்கனர்.

இது குறித்து தகவலறிந்த மீனாட்சியின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர், பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பல்லடம் டி.எஸ்.பி. தங்கதுரை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியததை அடுத்து சாலை மறியலை கைவிட்டனர்.

இதனையடுத்து, மீனாட்சியின் பிரேதம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவுப் பணியில் இருந்த பல்லடம் மருத்துவமனை டாக்டர்கள், சவக் கிடங்கு ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவிக்கு நேரந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மேற்கண்ட செய்தியை நாளிதழ்களில் வாசித்தவுடன் நெஞ்சம் குமுறியது.கண்கள் அடைத்துக் கொண்டன.அடப் பாவிகளா,வன்முறைக்கும் ஒரு வரம்பில்லையா?

இப்படி எத்தனை எத்தனை சம்பவங்கள் பெண்களுக்கு எதிராக.

குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் ஒரு கர்ப்பவதியான முஸ்லிம் பெண்ணை கற்பழித்துவிட்டு,  பெரிய சூலாயுதத்தால் அந்த பெண்ணின் வயிற்ரை கிழித்து - வயிற்றினில் இருந்த அந்த பிஞ்சு சிசுவை வெளியே எடுத்து தூக்கி வீசி 
எறிந்ததை 
மறக்க முடியாது.

இவைகள் எல்லாம் நடப்பது நம் இந்திய திரு நாட்டில்தான்.இங்குதான் பெண்கள் மதிக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் புள்ளி விவரப்படி உலகில் மிக அதிக அளவில் பெண்களுக்கான குற்றங்கள் நடப்பது இந்தியாவில்தான் என்கிறது.

இனியாவது இந்த நரேந்திர மோடிக்கள் திருந்துகிறார்களா எனப் பார்ப்போம்.

Sunday, April 10, 2011

உண்மை ஜனநாயகம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.

நபிகள் நாயகம் 


Sunday, April 3, 2011

தேர்தல் கல கல,

ஒரு ஊர்ல ஒரு விஷமம் புடிச்சவன் இருந்தானாம்.அவனோட வேலை எல்லாரையும் வம்பிக்கிழுத்து சண்ட மூட்டிவிட்டு பிரச்சனை உண்டு பண்ணுவதுதான்.அந்த நேரத்துலஅந்த விஷமம் புடிச்சவன் நைசா நழுவிடுவான்.


அப்பிடித்தான் ஒரு நாலு,இன்னிக்கி என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்குட்டு இருந்தப்போ இப்பிடி ஒரு யோசனை தோணிச்சு.

உடனே மக்கள் நெறஞ்ச மார்கெட்டுக்கு போயி,ஒரு மிட்டாய் வாங்கினான்.அந்த மிட்டாயில பாதியை தின்னுட்டு,ஒரு கண்ணாடி கோப்பைகள்,கண்ணாடி பீங்கான்கள் விக்கிற கடைக்கு 
போயி சாதூர்யமான முறையில அந்த மிச்சம் இருந்த மிட்டாயை ஒரு கண்ணாடி கோப்பையில ஓட்டிவிட்டு,கொஞ்ச தூர போயி நின்னு என்னதான் நடக்குதுன்னு நோட்டமிட்டுக்குட்டு இருந்தான்.

இந்த நேரத்துல அந்த கண்ணாடிக் கடையில இருக்குற மிட்டாயை திங்க ஒரு ஈ வந்துது.அந்த மிட்டாய் மேல உக்காந்து தின்ன ஆரம்பிச்சது.அப்போ ஒரு பல்லி இந்த ஈய பாத்துட்டு - மெது மெதுவா நகர்ந்து வர,இப்போ ஈ பல்லிக்கு போக்கு காட்ட,இப்பிடியே போய்க்கிட்டு இருக்கும்போது ஒரு பூனை அந்த பக்கம் வர,அது பல்லியை பாத்துட்டு - ஆஹா நல்ல சந்தர்ப்பம் டோயின்னு ஒரே தாவு தாவ -பல்லி லபக்குன்னு காணாம போக - அந்த பூனை அங்கன இருந்த கண்ணாடி பாத்திரங்களைஎல்லாம் உடைக்க - பூனையோட மொதலாளி எங்க நம்ம பூனையாரை காணோம்னு அந்தக்கடைக்கு வர,இத பார்த்த - கண்ணாடி கடை மொதலாளிக்கு அட இவன் பூனைதான் இதுன்னு தெரிய - கோபம் தலைக்கு ஏறி - இப்போ ரெண்டு பேருக்கும் குடுமிப்பிடி சண்டை.

இதுல மிச்சம் இருந்த கண்ணாடியும் உடைஞ்சு போயி,பூனையோட மொதலாளியோட பல்லும் உடைஞ்சு -கிளைமாக்ஸா போலிசு வந்து- அப்பப்பா இனியும் சொல்லனுமா?

அந்த விஷமக்கார நம்மாளு ,ரகசியமா - சிரிச்சுக்குட்டு இருந்தான்,முழு திருப்தியோட.

அப்பாடா,இந்த தேர்தல பத்தி - அவிங்க தேர்தல் அறிக்கை பத்தி - பிரச்சாரம் பத்தி படிக்கும்போது எனக்கு மேற்கண்ட கற்பனை வந்துது,கொட்டிபுட்டேன்,அவ்வளவுதான்.(நீங்க அந்த விஷமக்கார ஆளு யாருன்னு கருணாநிதி,ஜெயலலிதா,இப்பிடி இன்னும் யாரைப்பத்தியும் கற்பனை பண்ணாலும் நான் பொறுப்பல்ல)