Friday, July 1, 2011

மாபெரும் பரிசு

* ""வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்! நாம் தாம் அவர்களுக்கும் உணவளிக்கிறோம்; உங்களுக்கும் உணவளிக்கிறோம். உண்மையில் அவர்களைக் கொலை செய்வது பெரும் பாவமாகும்.''

திருக்குர்ஆன்(17:31)


நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

* ""ஒருவன் தன் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்காமலும், கொடுமைப்படுத்தாமலும், ஆண் குழந்தையுடன் ஒப்பிடும்போது வேறுபாடு காட்டாமலும் இருந்தால் இறைவன் அவனை சுவனத்தில் நுழையச் செய்வான்''
(நூல்: அபூதாவூத்)


* "" உங்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்வது உங்கள் குழந்தைகளின் கடமை; உங்கள் குழந்தைகளைச் சமமாக நடத்துவது உங்களின் கடமை!''
(நூல்: அபூதாவூத்)


* ""தந்தை தன் பிள்ளைக்கு அளிக்கும் மாபெரும் பரிசு நல்லொழுக்கமே!''
(நூல்: திர்மிதி)

1 comment:

mohamedali jinnah said...

திருமணத்தின் நோக்கம்

திருமணம் செய்தல் என் வாழ்க்கை வழியாகும் என்றொரு ஹதீஸிலும், எவர் இந்த வழியைப் பின்பற்றவில்லையோ அவர் என்முறை தவறியோர் ஆவர். என்று மற்றொரு ஹதீஸிலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

திருமணத்தின் நோக்கம் சிற்றின்பத்தை அனுபவிப்பது மட்டுமல்ல. இரண்டு ஆத்மாக்களும் ஒன்று பட்டு இருவரிடமும் உள்ள இயற்கைத் தன்மைகளை சீர்படுத்துவதும் அதன் நோக்கமாகும்.
கருச்சிதைவு இயற்கைக்கு மாறுபட்டது . உடல் நலத்தினையும் உள்ளதையும் பாதிக்கக் கூடியது. நம் பெற்றோர் இதனை செய்திருந்தால் நாம் இங்கே இருப்போமா ! வறுமை ஒரு காலமும் ஒரு தொடர் கதையல்ல. மனித அன்பு தொடர்வது குழந்தை பாக்கியதினால்தான்.