Thursday, December 15, 2011

சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது.

 இறைவன் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக சிரமப்படுத்துவது இல்லை. சிரமத்திற்குப் பின்னர் 
இலகுவை இறைவன் உண்டாக்குவான்.உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது.


 ஒரு பொருள் உங்களுக்கு நன்மையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் வெறுக்கக்கூடும். மேலும், ஒரு பொருள் உங்களுக்குத் தீமையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் விரும்பக் கூடும். (இவற்றை) இறைவன் நன்கு அறிகிறான். ஆனால், நீங்கள் அறிவதில்லை.


இறைவன் உங்களை உங்கள் அன்னையரின் வயிற்றிலிருந்து வெளிக்கொணர்ந்தான்; நீங்கள் ஏதும் அறியாத நிலையில்! மேலும், செவிப்புலன்களையும், பார்வைப் புலன்களையும், சிந்திக்கும் இதயங்களையும் உங்களுக்கு வழங்கினான். நீங்கள் நன்றி செலுத்தக் கூடியவர்களாய்த் திகழவேண்டும் என்பதற்காக!


எந்தப் பொருளில் மானக்கேடான தன்மை பொதிந்துள்ளதோ அது அதனைப் பாழ்படுத்தி விடுகின்றது. எந்தப்பொருளில் நாணம் உள்ளதோ அது அதனை ஒளிரச் செய்கிறது.



திருக்குர்ஆன் 

1 comment:

Aashiq Ahamed said...

மாஷா அல்லாஹ்